உபுண்டு 12.04 சில நாட்களுக்கு முன் வெளியானது. வழக்கம்போல் LTS க்கே உரித்தான பல்வேறு புதிய வசதிகளுடன் வெளிவந்துள்ளது.
முதலில் இதனை தரவிறக்கி சிடியில் பதிந்து செயல்படதுவங்கியவுடன் இதில் உள்ள Installation type ல் உள்ள நான்கு பிரிவினுள் Upgrade 11.04 to 12.04 ம் அடக்கம்.
முந்தைய பதிப்புகளில் இதற்கே தனியாக alternate cd தரவிறக்க வேண்டியிருக்கும்.
நெருப்பு நரி புதிய பதிப்புடன் 11.0 வெளியாகி உள்ளது. நிறுவியப்பின் புதிய பதிப்பு நெருப்பு நரி 12.0 update மூலம் நிறுவிக்கொள்ளலாம்.
தண்டர் பேர்டு 11.0.1 பதிப்புடன் வந்துள்ளது.
இந்த புதிய பதிப்பினை நிறுவியப்பின் startup sound வரவில்லை. இதனை startup applicationல் சேர்த்துக்கொள்ள வேண்டும். தேவையில்லை என்றால் விட்டுவிடலாம்.
கெர்னலும் புதிய பதிப்பு 3.2.0.23 உடன் வந்துள்ளது.updateல் 3.2.0.24 ஆக மேம்படுத்தப்பட்டுள்ளது.
முக்கியமாக தமிழ் உள்ளீடு முந்தைய 11.10ல் உள்ளதுபோல் அமைத்துகொள்ள வேண்டும்.இதற்கான சுட்டி உபுண்டு 11.10. Ibus முறையிலேயே அமைத்துக்கொள்ளலாம்.
லிபர் ஆபிஸ் புதிய பதிப்பான 3.5.2.2
System settings பகுதியில் இரண்டு புதிய வசதிகள் சேர்த்திருக்கிறார்கள்.
1.Privacy இதில் நாம் இயக்கிய கோப்புகளை பிறர் பார்க்கதவாறு மறைக்க முடியும்.
2. Management service என்பது Canonicalன் வர்த்தக ரீதியான சேவைகளை காண முடியும்.
இடது பக்கத்தில் உள்ள யுனிட்டி பார் நெருப்பு நரி இயக்கும்போது மறையவில்ல இதனை system settings மூலம் மறையவைக்கலாம்.
எந்தவிதமான பிரச்சனையில்லாமல் நிறுவ முடிந்தது. ஆடியோ, வீடியோ கோடக்குகளை வழக்கம்போல் எளிதாக நிறுவிக்கொள்ளலாம்.