Pages

Thursday, June 9, 2011

உபுண்டுவில் shutdown செய்யும்போது trash அடைவில் உள்ள கோப்புகளை அழித்தல்

உபுண்டுவில் நாம் கணினியை மூடும்போது trashல் உள்ள கோப்புகள் அப்படியே இருக்கும். trashனை திறந்து பின்னர் Empty trashனை அழுத்தினால் தான் நீங்கும். அப்படியில்லாமல் கணினியை மூடும்போதே trashல் உள்ள கோப்புகளை அழிக்க முடியும். முக்கியமான கோப்புகளை கவனக்குறைவாக அழிக்காமல் பார்த்துகொள்ள வேண்டும். அழிக்கப்பட்ட கோப்புகள் கணினியில் home அடைவினுள் .local/share/Trash என்ற அடைவினுள் இருக்கும். இது ஒரு மறைக்கப்பட்ட அடைவாகும்.


முதலில் டெர்மினலில் ஒரு டெக்ஸ்ட் கோப்பினை திறந்து அதில் கீழ்கண்ட வரிகளை சேர்த்துவிட வேண்டும்.

#!/bin/sh
rm -rf /home/username/.local/share/Trash/*

இதனை நம் விருப்பம் போல் ஒரு பெயர் கொடுத்து சேமித்துகொள்ள வேண்டும். நான் இதற்கு refi.sh என்ற பெயர் கொடுத்துள்ளேன். இந்த கோப்பினை இயங்கு நிலையில் வைக்க டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையினை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo chmod +x refi.sh

பின்னர் கீழ்கண்ட கட்டளைகளை கொடுத்து இதனை கணினியை மூடும்போது செயல்படுமாறு செய்ய வேண்டும்.

sudo cp refi.sh /etc/init.d
sudo ln -s /etc/init.d/refi.sh /etc/rc0.d/K10refi.sh
sudo ln -s /etc/init.d/refi.sh /etc/rc6.d/K10refi.sh

இப்போது கணினியை shutdown செய்துவிட்டு மீண்டும் இயக்க trashல் உள்ள கோப்புகள் அழிந்துவிட்டு இருப்பதை பார்க்கலாம்.

நெருப்பு நரியின் cache கோப்புகளை கூட அழிக்க முடியும்.இதற்கு refi.sh கோப்பில்

rm -rf /home/username/.mozilla/firefox/xxxxxxx.default/Cache/*

என்ற வரியை சேர்த்துவிட வேண்டும். இதில் xxxxxxxxx.default என்பது நம்முடைய கணினியில் நெருப்பு நரியின் பல்வேறு அமைப்புகள் இருக்கும் அடைவாகும். இதனை profile.ini கோப்பிலும் குறிப்பிடப்பட்டிருப்பதை காணலாம்.

1 comment:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பயனுள்ள தகவல்...
நன்றி..