Pages

Friday, July 29, 2011

உபுண்டுவில் பெரிய அளவுள்ள கோப்புகளை பிரிக்க/சேர்க்க

உபுண்டுவில் பெரிய அளவுள்ள கோப்புகளை பிரித்து பின்னர் அவற்றை ஒன்றாக சேர்க்க உதவும் மென்பொருள் gnome-split. இதனை நிறுவ கீழ்கண்ட வரிகளை டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo add-apt-repository ppa:gnome-split-team/ppa
sudo apt-get update
sudo apt-get install gnome-split

இப்போது நிரல் நிறுவப்பட்டு விடும். இதனை இயக்க Applications-> accessories-> nome split செல்ல வேண்டும்.


இதனை இயக்கவுடன் மேலே உள்ள திரை வரும். இதனுடன் Assistant எனும் திரையும் வரும். அதையும் பயன்படுத்திக்கொள்ளலாம் இல்லையேன்றால் cancel பொத்தானை அழுத்தி அந்த திரையை எடுத்துவிடலாம்.

ஒரு வீடியோ கோப்பினை எப்படி பிரிப்பது என்பது பற்றிப்பார்ப்போம்.


இந்த கோப்பானது 1024mb அளவுள்ளது.


இதில் file என்பதில் கோப்பினை தேர்ந்தெடுக்க வேண்டும். 1 மற்றும் 2
Destination என்பதில் கோப்பு சேமிக்கும் இடத்தை குறிப்பிட வேண்டும். 3 மற்றும் 4
5 என்பது கோப்பு எத்தனை கோப்புகளாக பிரிக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
6 Split in என்பது கோப்புகள் எத்தனை அளவு பிரிக்க வேண்டும் என்பதை குறிக்கிறது
7 இதில் கோப்புகள் எந்த வித பார்மெட்களில் பிரிக்க வேண்டும் என்பதை குறிக்கும்.

பின்னர் மேலே அம்பு குறி இடத்தில் கிளிக் செய்தால் கோப்புகள் பிரிந்து விடும்.


பின்னர் கோப்புகளை சேர்ப்பதற்கு splitற்க்கு பதிலாக merge தேர்ந்தெடுத்து மேலே சொன்ன வழிமுறைகளை மீண்டும் பின்பற்ற கோப்புகள் சேர்ந்துவிடும்.



கோப்புகள் சேர்ந்து முடிந்ததும் முழு கோப்பு முன்பு இருந்ததை போலவே இருப்பதை காணலாம்.

மேலே உள்ள படம் வீடியோ கோப்பு பிரிக்கப்பட்டு மீண்டும் ஒன்று சேர்ந்தவுடன் விஎல்சியில் இயங்குவதை காணலாம்.

No comments: