உபுண்டுவில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட pdf கோப்புகளை இணைக்க பயன்படும் டூல் pdftk என்பதாகும். இந்த நிரலை கீழ்கண்ட வரியினை டெர்மினலில் கட்டளையாக கொடுப்பதன் மூலம் எளிதாக நிறுவிக்கொள்ளலாம்.
sudo apt-get install pdftk
இந்த நிரலை கீழ்கண்ட வகைகளில் பயன்படுத்தலாம்.
1. ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை இணைக்க
pdftk A=12.pdf B=13.pdf C=14.pdf [...] cat A B C output 15.pdf
இதில் ABC என்பது கோப்புகளை குறிக்கும்.இந்த கட்டளையானது கோப்புகளில் இருக்கும் எல்லா பக்கங்களையும் இணைக்கும். இதை கொடுக்காமலும் பயன்படுத்தலாம்.
pdftk 12.pdf 13.pdf 14.pdf [..] cat 15.pdf
2.கோப்புகளிலிருந்து தேவையான பக்கங்களை மட்டும் இணைக்க
pdftk A=12.pdf B=13.pdf C=14.pdf [...] cat A2-5 B2-5 C2-5 output 15.pdf
இதில் A2-5, B2-5 மற்றும் C2-5 என்பது கோப்புகளில் எந்தெந்த பக்கங்களை சேர்க்க வேண்டும் என்பதாகும்.
3. wild card பயன்படுத்துதல்
pdftk *.pdf cat output 15.pdf
3 comments:
எனது மடிக்கணினியில் உபுண்டு மென்பொருள் இறக்கி அதில் நெருப்புநரியும் தரவிறக்கி இணையத்தை இணைத்தால் இணைப்பு கிடைக்கவே மாட்டேன்கிறது.
இணையம் உபுண்டு+நெருப்புநரியில் இணப்புதெரிய வழி கூறுங்கள்.
உபுண்டு தரவிறக்கி நெருப்புநரி மூலம் இணையம் காண விரும்பினால் இணைய இணைப்பு கிடைக்க மாட்டேன்கிறது.[அல்லது இணைய வாசல் திறக்க முடியவில்லை.]
வழி கூறுங்களேன்.
நன்றி சுரன் நீங்கள் என்ன பதிப்பு பயன்படுத்திவருகிறீர்கள் என்பதை தெரியப்படுத்தவும். என்னமாதிரி இணையம் பயன்படுத்துகிறீர்கள் என்பதை கூறவும்.
Post a Comment