உபுண்டுவில் டெர்மினலில் ஒரு iso கோப்பினை உருவாக்கி அதனை சிடியில் எழுதவிட முடியும். இதற்கு brasero போன்ற மென்பொருள்கள் தேவையில்லை.
இதற்கு தேவையான மென்பொருள்களை நிறுவ கீழ்கண்ட கட்டளையே போதுமானது.
sudo apt-get install genisoimage wodim
உபுண்டுவில் பல பதிப்புகளை மேலே கண்ட நிரல்கள் இயல்பாக நிறுவப்பட்டிருக்கும். இல்லையேன்றால் நிறுவிக்கொள்ள வேண்டும்.
பின்னர் நாம் விரும்பும் ஒரு அடைவினை தேர்ந்தெடுத்து அதனை சிடியில் எழுதலாம். இதற்கு டெர்மினலில் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்ய வேண்டும்.
mkisofs -o some.iso /home/username/folder name
இப்போது some.iso என்ற கோப்பானது home அடைவினுள் உருவாகியிருக்கும். இதனை சிடியில் எழுத சிடி வன்பொருள் இருக்கிறதா என்று பார்க்க டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையிட வேண்டும்.
wodim --devices
கீழ்கண்டவாறு திரை தோன்றும்.
பின்னர் டெர்மினலில்
wodim -v -dao speed=8 dev='/dev/sg0' some.iso
என்று தட்டச்சு செய்தால் சிடியில் some.iso என்ற கோப்பானது எழுதப்பட்டுவிடும்.