Pages

Tuesday, June 8, 2010

உபுண்டுவில் பூமியின் மாறும் வால்பேப்பர்கள்

உபுண்டுவில் தினமும் பூமியின் மாறும் படத்தினை வால்பேப்பர்களாக அமைத்துக்கொள்ளலாம். இதற்கு முதலில் டெர்மினலில்

sudo apt-get install gnome-schedule என்று தட்டச்சு செய்து நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.

பின்னர் applications->system tools->scheduled tasks தேர்ந்தெடுக்க வேண்டும்.


இதில் new என்பதனை அழுத்தினால் நாம் புதியதாக tasks அமைத்துக்கொள்ளலாம்.



இதில் description->rotating wallpaper

Command->wget -r -N http://static.die.net/earth/mercator/1600.jpg

பின்னர் அடுத்த கட்டத்தை supress output என்று அமைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் apply அழுத்தவேண்டும். இப்படி தரவிறங்கும் படமானது ஹோம் அடைவினுள் சேமித்துக்கொள்ளும்.

/home/usrname/static.die.net/earth/mercator/1600.jpg என்ற இடத்தில் இருக்கும்.

பின்னர் நம்முடைய மேசைமீது கர்சரை வலது சொடுக்க வரும் ஆப்ஷனில் Change desktop backgrounds->backgrounds வந்து நிற்கும். பின்னர் Add பொத்தனை அழுத்தி மேலே சொன்ன இடத்தில் இருக்கும் 1600.jpg கோப்பினை தேர்ந்தெடுக்க வேண்டும்.



இப்போது தினமும் புதியதாக படங்கள் வால்பேப்பர்களாக இருக்கும்.இந்த வால்பேப்பர்கள் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படுகிறது.

Sunday, June 6, 2010

உபுண்டுவில் filesystemதினை திறப்பதற்கு ஒரு எளிய வழி

உபுண்டுவில் filesystem தினை திறப்பதற்கு places சென்று தான் திறப்போம். அப்படியில்லாமல் desktopலிருந்தே திறக்க முடியும். file systemதினை மட்டும் அல்லாமல் ஒரு அடைவினை கூட desktop லிருந்தே திறக்கலாம். இதை top panelல் வைத்துக்கொள்ளலாம்.

முதலில் மேசைமேது ஒரு வெற்றிடத்தில் வலது சொடுக்க வரும் optionல் Create Launcher ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.


இதில் Nameல் File system என்று கொடுத்துக்கொள்ளலாம்.

Commandல் nautilus / என்று தட்டச்சு செய்துவிட்டு பின்னர் ok அழுத்தவேண்டும். இந்த iconஐ மாற்ற வேண்டுமானல் icon பகுதியில் சென்று சொடுக்கினால் வரும் பல்வேறு iconல் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.



இப்போது திரையில்


இதிலேயே சொடுக்கி திறக்கலாம் இல்லையேன்றால் icon மீது கர்சரை வைத்து அப்படியே இழுத்துக்கொண்டுபோய் top panelல் விட்டுவிடலாம்.


இதன் மீது கர்சரை வைத்து சொடுக்கினால் file system திறக்கும்.



இது வேறு அடைவுகளையும் திறக்கலாம். அதன் commandல் கொடுத்துள்ள கட்டளையில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் செய்யலாம்.

nautilus / பதிலாக nautilus /media என்று தட்டச்சு செய்தால் media அடைவு திறக்கும்.



உபுண்டுவில் கடவுச்சொல்லை சோதிக்க ஒரு script



உபுண்டுவில் கடவுச்சொல்லை சோதிக்க ஒரு எளிய script. இதில் ஒரு கடவுச்சொல் தரப்பட்டுள்ளது. அதை சரியானதுதான என்று பார்ப்போம்.

முதலில் டெர்மினலில் ஒரு காலியான ஒரு டெக்ஸ்ட் கோப்பினை திறந்து கொண்டு அதில் கீழ்கண்ட வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்து செமிக்கவும்.



#!/bin/bash
# Script accept password using read commnad
# Not *very secure*, this script is for learning purpose only
# -------------------------------------------------------------------------
PASS="abc123"
read -s -p "Password: " mypassword
echo ""
[ "$mypassword" == "$PASS" ] && echo "Password accepted" || echo "Access denied"


பின்னர் டெர்மினலில்

sudo chmod +x pass.sh இங்கு pass.sh என்பது நான் கொடுத்துள்ள பெயர்.

sudo ./pass.sh என்று தட்டச்சு செய்தால் கடவுச்சொல் கேட்கும். இதில் abc123 என்ற கடவுச்சொல் தரப்பட்டுள்ளது.




இந்த ஸ்கிரிப்ட் ஏதேனும் நிரலினை எழுதி அதை கடவுச்சொல் கொண்டு பாதுகாக்க பயன்படும்.

Saturday, June 5, 2010

உபுண்டுவில் URL shortcut

உபுண்டுவில் url shorcut ஐ மேசைமீது கொண்டுவர முடியும். இதற்கு நெருப்பு நரியின் ஒரு add on உதவுகிறது.

Deskcut இந்த add onஐ நிறுவிக்கொண்டால் short cutஐ மேசைமீது வைத்துக்கொள்ளமுடியும்.



இந்த add onஐ நிறுவியவுடன் நெருப்பு நரியை restart செய்யவேண்டும். இப்போது நெருப்பு நரியை திறந்து அதன் முகவரி பெட்டியில் url ஐ தட்டச்சு செய்து அதை முழுவதும் தேர்ந்தெடுத்து அப்படியே இழுத்து மேசைமீது விடவேண்டும். இப்போது நாம் விரும்பிய url மேசைமீது ஒரு சிறிய icon ஆக வந்துவிடும்.

Thursday, June 3, 2010

உபுண்டுவில் pendrive format - disk utility வழியாக

உபுண்டுவில் pendrive format செய்வது டெர்மினலில் கட்டளை கொடுத்து செய்யமுடிந்தது. ஆனால் disk utility என்ற நிரல் இதற்கு உதவுகிறது.

முதலில் pendrive அதற்க்கான இடத்தில் சொருகினால் mount ஆகி அதற்கான icon திரையில் வந்துவிடும்.


இந்த iconல் கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் format தேர்ந்தெடுக்க வேண்டும்.


இதில் type உள்ள optionகள் லினக்ஸ் மட்டும் உள்ளது. அதனால் disk utility தேர்ந்தெடுக்க வேண்டும்.


மேலே உள்ள விண்டோவில் pendriveஐ பற்றி எல்லாவிதமான தகவல்களும் இருக்கும். Format செய்வதற்கு முன் unmount volume சொடுக்கி pendriveவை unmount செய்ய வேண்டும். .

இப்போது format volume அழுத்தினால் கீழ்கண்ட விண்டோ வரும்.இதில் typeல் எந்த வகை format மற்றும் பெயர் கொடுத்திக்கொள்ளலாம்.



இதில் format பொத்தானை அழுத்தினால் பார்மட் ஆக தொடங்கும்



இதிலும் format அழுத்த வேண்டும்.


Format ஆன பின்னர் mount volume அழுத்த pendrive பற்றிய எல்லா தகவல்களும் கிடைக்கும்.


Format செய்தபிறகு பெயர் மாற்ற வேண்டுமென்று விரும்பினால் Edit file system label தேர்ந்தெடுக்கலாம்.


இதில் apply அழுத்தினால் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும். பின்னர் edit partition அழுத்தினால் partition வகையை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.


இந்த நிரலில் hardiskஐ கூட format செய்துவிட முடியும். எனவே பயன்படுத்துமுன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

Tuesday, June 1, 2010

உபுண்டுவில் notificationosd நம் விருப்பம் போல் அமைத்துகொள்ள

உபுண்டுவில் notification osd ஐ நம் விருப்பம் போல் பின்புல நிறத்தையும், எழுத்து நிறத்தையும் மாற்ற முடியும்.Default ஆக கருப்பு நிறம் இருக்கும்.




கீழ்கண்ட PPA க்களை நம்முடைய கணினியில் software source ல் சேர்த்துக்கொள்ளவேண்டும். டெர்மினலில்

sudo add-apt-repository ppa:leolik/leolik
sudo add-apt-repository ppa:amandeepgrewal/notifyosdconfig

பின்னர்

sudo apt-get update && sudo apt-get upgrade என்று தட்டச்சு செய்து கணினியை update செய்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் டெர்மினலில்
sudo apt-get install notifyosdconfig என்று தட்டச்சு செய்து notifyosdconfig நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும். இந்த நிரலை இயக்க

Applications->accessories->notifyosd configuration செல்ல வேண்டும். இதில்தான் பின்புல நிறம் மற்றும் எழுத்து நிறம் மாற்றவேண்டும்.



இதில் background colour ஐ மாற்றிக்கொள்ளவேண்டும். பின்னர் apply அழுத்தவேண்டும்.



இதில் text title colour நிறத்தை மாற்றிக்கொண்டு apply அழுத்தவேண்டும். இப்போது notifyosdயின் பின்புல நிறம் மற்றும் எழுத்து நிறம் மாறியிருக்கும்.


இதில் File option சென்றால் இந்த தீமை செமித்துக்கொள்ளமுடியும். இது தேவையில்லை பழைய நிறமே போதும் என்றால் reset பொத்தான் இருக்கிறது.

உபுண்டுவில் multige download manager

உபுண்டுவில் கோப்புகளை இணையத்தில் இருந்து எளிதாக தரவிறக்கம் செய்ய பயன்படுக் நிரல்தான் multiget. இது ubuntu software centreல் இருக்கிறது.

எனவே Applications->ubuntu software centre சென்று அதன் search boxல் multiget என்று தட்டச்சு செய்தால் நிரல் வந்துவிடும். பின்னர் நாம் நிறுவிக்கொள்ளலாம்.


நிரலை இயக்க applications->internet->multiget தேர்ந்தெடுக்க வேண்டும்.


இதில் add பொத்தானை அழுத்தி நமக்கு வேண்டிய தரவிறக்கம் செய்யவேண்டிய முகவரியை சேர்த்துக்கொள்ளலாம்.


இதில் ok அழுத்தினால் கோப்பு தரவிறக்க ஆரம்பிக்கும்.


இதில் option சென்று நமக்கு தேவையான அமைப்புகளை வைத்துக்கொள்ளலாம்.