
கீழ்கண்ட PPA க்களை நம்முடைய கணினியில் software source ல் சேர்த்துக்கொள்ளவேண்டும். டெர்மினலில்
sudo add-apt-repository ppa:leolik/leolik
sudo add-apt-repository ppa:amandeepgrewal/notifyosdconfig
பின்னர்
sudo apt-get update && sudo apt-get upgrade என்று தட்டச்சு செய்து கணினியை update செய்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் டெர்மினலில்
sudo apt-get install notifyosdconfig என்று தட்டச்சு செய்து notifyosdconfig நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும். இந்த நிரலை இயக்க
Applications->accessories->notifyosd configuration செல்ல வேண்டும். இதில்தான் பின்புல நிறம் மற்றும் எழுத்து நிறம் மாற்றவேண்டும்.

இதில் background colour ஐ மாற்றிக்கொள்ளவேண்டும். பின்னர் apply அழுத்தவேண்டும்.

இதில் text title colour நிறத்தை மாற்றிக்கொண்டு apply அழுத்தவேண்டும். இப்போது notifyosdயின் பின்புல நிறம் மற்றும் எழுத்து நிறம் மாறியிருக்கும்.

இதில் File option சென்றால் இந்த தீமை செமித்துக்கொள்ளமுடியும். இது தேவையில்லை பழைய நிறமே போதும் என்றால் reset பொத்தான் இருக்கிறது.
3 comments:
மிகவும் பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி !
thank you very much... very useful...
நன்றி பனித்துளிசங்கர்
நன்றிசிவா
Post a Comment