Pages

Thursday, September 30, 2010

உபுண்டு 10.10 Maverick Meerkat நிறுவுதல் பற்றிய ஒரு slideshow

உபுண்டுவில் அடுத்து வரவிருக்கும் பதிப்பான 10.10ன் நிறுவுதல் பற்றிய ஒரு slideshow

உபுண்டுவில் package version lock செய்ய

உபுண்டுவில் நிறுவப்பட்ட நிரல்களை மேம்படுத்தாமல் அதாவது update செய்யாமல் வைத்துக்கொள்ளமுடியும். இதற்கு

System->Administration->Synaptic package manager->package->lock version சென்றால் லாக் செய்துவிடமுடியும். இப்படி செய்வதால் நிரலை மேம்படுத்த முடியாது. இந்த வசதி தேவையில்லை என்றால் மீண்டும் System->Administration->Synaptic package manager->package->lock version சென்றால் போதும்.

உதாரணமாக தண்டர்பேர்டு நிரலை பார்ப்போம்.



இதில் தண்டர்பேர்டு ன் பதிப்பை 3.1.4ல் வைக்க package->lock version செல்ல வேண்டும்.




இடதுபக்க ஒரத்தில் சிறிய பூட்டு போன்ற ஒரு படம் இருப்பதை பார்க்கலாம். இதனால் நிரலை மேம்படுத்தமுடியாது.

Sunday, September 26, 2010

உபுண்டுவில் படங்களின் slideshow வை desktop wallpaperஆக வைப்பதற்கு

உபுண்டுவில் படங்களின் slideshow வை அப்படியே desktopல் wallpaper ஆக வைக்கலாம். இதற்கு முதலில் OpenJDK Java 6 Runtime என்ற நிரலை ubuntu software centreல் தேடிப்பார்த்து நிறுவிக்கொள்ளவேண்டும்.



பின்னர் இந்த சுட்டியிலிருந்து jar கோப்பினை தரவிறக்கி கொள்ளவேண்டும்.


இந்த கோப்பின் மீது கர்ஸரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் properties->Permissions சென்று அதில் execute என்பதற்கு நேராக டிக் மார்க் செய்ய வேண்டும்.


பின்னர் close பொத்தானை அழுத்தி வெளியேறிவிடவேண்டும்.

இப்போது தரவிறக்கப்பட்ட jar கோப்பின் மீது கர்ஸரைவைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் open with other applications->OpenJDK Java 6 Runtime என்பதனை தேர்ந்தெடுத்து open பொத்தானை அழுத்தவேண்டும்.


இப்போது கீழ்கண்ட விண்டோ வரும்.


இதில் browse பொத்தானை அழுத்தி எந்த அடைவினுள் படங்களை இருக்கிறதோ அதை தேர்ந்தெடுக்கவேண்டும். Durationல் வால்பேப்பர் எத்தனை விநாடிகள் தோன்ற வேண்டுமொ அதை அமைத்துக்கொள்ளவேண்டும்.



எல்லாவற்றையும் அமைத்த பின்னர் create xml என்ற பொத்தானை அழுத்தியவுடன் Background.xml என்ற கோப்பு படங்கள் அடங்கிய அடைவினுள் உருவாகிவிடும்.


பின்னர் desktopல் வெற்று இடத்தில் கர்ஸரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் change desktop background என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.


மேல் கண்ட விண்டோவில் 1 என்ற இடத்தில் all files என்பதனை தேர்ந்தெடுத்தால் 2 என்ற இடத்தில் புதியதாக உருவாகி இருக்கும் xml கோப்பினை தேர்ந்தெடுத்து open பொத்தானை அழுத்தி வெளியேறிவிடவேண்டும்.

இப்போது desktopல் படங்கள் slideshow ஆக தொன்றுவதை பார்க்கலாம்.

Saturday, September 25, 2010

உபுண்டுவில் அதிகம் பயன்படுத்திய டெர்மினல் கட்டளைகளை தெரிந்துகொள்ள

உபுண்டுவில் நாம் அதிகம் பயன்படுத்திய டெர்மினல் கட்டளைகளை தெரிந்து கொள்ள கீழ்கண்ட கட்டளையை முனையத்தில் கொடுக்க வேண்டும்.

history | awk '{print $2}' | sort | uniq -c | sort -rn | head -10

இதன் விடை கீழ்கண்ட படத்தில் உள்ளவாறு வரும்.


இதேபோல் இன்னொரு கட்டளையும் உண்டு.

history | awk '{if ($2=="sudo") print $3; else print $2; }' | sort | uniq -c | sort -rn | head -10

இதன் விடை கீழ்கண்ட படத்தில் உள்ளது போல் வரும்


Friday, September 24, 2010

உபுண்டுவில் e-mail notification appelet

உபுண்டுவில் நமக்கு e-mail வரும்போது notification வருமாறு செய்ய முடியும். அதற்கு பதில் thunderbird உதவியுடன் அனுப்ப முடியும். இந்த நிரல் top panel ல் செயல்படுமாறு உள்ளது.



இந்த நிரலை தரவிறக்கி நிறுவ சுட்டி.

இந்த நிரலை இயக்க Applications->Internet->Popper configurator சென்று சில அமைப்புகளை அமைத்தால் போதும்.





மேலே உள்ள படத்தில் 5 இமெயில் முகவரி வரை வைத்துக்கொள்ளலாம். எத்தனை நிமிடத்திற்கு ஒருமுறை செக் செய்திடவேண்டும் என்வும் அமைத்துக்கொள்ளலாம். இதில் incoming mail server பெயர் உபயோகிப்பாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் அமைக்கவேண்டும்.


மேலே உள்ள படத்தில் தண்டர்பேர்டு உபயோகப்படுத்தினால் menu entriesல் மேற்கண்டவாறு அமைத்துக்கொள்ளவேண்டும். புதிய இமெயில் அனுப்ப முகவரி புத்தகத்தை பார்க்க என்று கட்டளைகள் கொடுக்க வேண்டும். இந்த நிரலின் default email client evolution ஆகும்.


மேலே உள்ள படத்தில் புதிய இமெயில் வந்தால் எந்த message notification ஆக வரவேண்டும் என்பதையும், எந்த ஒலி வரவேண்டும் என்பதையும் அமைக்கலாம்.


மேலே உள்ள மெனுவில் நாம் அமைத்த அமைப்புகள் சரியாக உள்ளத என சோதனை செய்ய test email connection பொத்தானை அழுத்துவதன் மூலம் அறியலாம்.


மேலே உள்ள மெனு உதவிகுறிப்புகள் அடங்கிய மெனுவாகும். எல்லாம் முடிந்தவுடன் save &exit பொத்தானை அழுத்தி வெளியேறிவிடவேண்டும். இப்போது புதியாதாக இமெயில் வந்தால் நமக்கு desktopல் தெரிவிக்கும். இதன் படம் மேலே கொடுத்துள்ளேன்.

உபுண்டுவில் படங்களை கையாள converseen

உபுண்டுவில் படங்களை கையாள்வதற்கு அதாவது format மாற்றுவதற்கு, அளவுகளை மாற்ற மற்று சுருக்குவதற்கு உதவும் நிரல் converseen. மொத்தமாக படங்களின் அளவுகள் மற்றும் format போன்றவற்றை மாற்றமுடியும். இந்த நிரலை நிறுவ முதலில் டெர்மினலில்

sudo add-apt-repository ppa:samrog131/ppa
sudo apt-get update && sudo apt-get install converseen

என்று தட்டச்சு செய்து நிறுவக்கொள்ளவேண்டும். பின்னர் Applications->Graphics->converseen செல்ல வேண்டும்.




இதில் add images என்ற பொத்தானை அழுத்தி படங்களை சேர்த்துக்கொள்ளலாம்.


இங்கு படத்தின் அளவுகள் மற்றும் format போன்றவற்றை மாற்றிக்கொள்ளமுடியும். பின்னர் convert பொத்தானை அழுத்தினால் படங்கள் நாம் விரும்பியபடி மாறிவிடும்.




படங்களை மொத்தாமாக மாற்றுவதற்கும் இதில் வசதி உள்ளது.


இந்த நிரலை deb கோப்பாக பெறுவதற்கான சுட்டி.

Monday, September 20, 2010

உபுண்டுவில் time zone முனையத்தில் மாற்றுதல்

உபுண்டுவில் time zone மாற்றுவதற்கு System->Administration->Time and Date செல்ல வேண்டும்.


அப்படியில்லாமல் டெர்மினலில் மாற்ற முடியும். முதலில் இதற்கு காரணமான கோப்புகள் எங்கிருக்கிறது என்பதை பற்றி பார்ப்போம்.

/use/share/zoneinfo/ என்ற அடைவினுள் பல்வேறு நாடுகளின் தேதி மற்றும் நேரங்கள் கொண்ட கோப்புகள் இருக்கும்.


நம்முடைய பகுதி இந்தியாவாக இருப்பதால் இந்த கோப்பு /use/share/zoneinfo/Asia என்ற அடைவினுள் இருக்கிறது.

அடுத்ததாக /etc/localtime என்ற கோப்பாகும்.


இந்த இரண்டு கோப்புகளுக்கு ஒரு link கொடுத்தால் போதும்.

டெர்மினலில்

sudo ln -sf /usr/share/zoneinfo/Asia/Kolkata /etc/localtime

என்று தட்டச்சு செய்ய வேண்டும்.

Sunday, September 19, 2010

உபுண்டுவில் nautilus terminal

உபுண்டுவில் டெர்மினல் செல்வதற்கு Applications->Accessories-Terminal செல்ல வேண்டும். ஆனால் nautilus file managerல் இதற்கு வழி உள்ளது.

முதலில் டெர்மினலில்

sudo add-apt-repository ppa:flozz/flozz

sudo apt-get update

sudo apt-get install nautilus-terminal

என்று தட்டச்சு செய்தால் nautilus-terminal நிறுவப்பட்டுவிடும். பின்னர் Alt+F2 என்று பொத்தான்களை அழுத்தினால் வரும் விண்டோவில் nautilus -q என்று தட்டச்சு செய்து run பொத்தானை அழுத்தினால் nautilus-terminal nautilus file browserல் வந்துவிடும்.



இதில் பக்கத்தில் அம்புகுறி சுட்டிக்காட்டியுள்ள இடத்தில் இருக்கும் பொத்தானை அழுத்தினால் வண்ணம்,எழுத்துரு போன்றவைகளை மாற்றிக்கொள்ளலாம்.


இந்த டெர்மினலி மறைத்துவைக்கலாம். இதற்கு 'x' குறியை அழுத்தினால் மறைந்துவிடும்.

Saturday, September 18, 2010

உபுண்டுவில் compiz settings to default settings



உபுண்டுவில் நாம் compize settings manager பயன்படுத்தி பல்வேறு வகையில் அமைப்புகள் செய்திருப்போம்.

இந்த அமைப்புகள் தேவையில்லை என்றால் டெர்மினலில் ஒரே ஒரு கட்டளையின் மூலம் பழைய system default settings கிற்கு போக முடியும்.

gconftool-2 --recursive-unset /apps/compiz என்ற கட்டளை தருவதன் மூலம் செயல்படுத்த முடியும். பின்னர் கணினியை ஒருமுறை restart செய்ய வேண்டும்.


பின்னர் preference->Compizconfig settings manager சென்று பார்த்தால் நாம் அமைத்த அமைப்புகள் எல்லாம் மீண்டும் பழைய நிலைக்கு வந்திருப்பதை பார்க்கலாம்.

Friday, September 17, 2010

உபுண்டுவில் ntfs drive திறக்கும்போது கடவுச்சொல் செயல்படுத்துதல்

உபுண்டு 10.04 ல் விண்டோ ntfs drive திறக்கும்போது கடவுச்சொல் கேட்பதில்லை. இது நம்முடைய சொந்த கணினியாக இருக்கும்போது வைத்துக்கொள்ளலாம். ஆனால் பொது கணினியாக இருக்கும்போது கடவுச்சொல் இருப்பதே பாதுக்காப்பானதே.

இதற்கு முதலில் டெர்மினலில்

sudo -i என்று தட்டச்சு செய்து root ற்க்கு செல்ல வேண்டும். பின்னர்

gedit /var/lib/polkit-1/localauthority/10-vendor.d/com.ubuntu.desktop.pkla

என்று தட்டச்சு செய்து com.ubuntu.desktop.pkla என்ற கோப்பினை திறந்து கொள்ளவேண்டும். அதில் முதல் நான்கு வரிகளின் முன் # என்ற குறியை சேர்த்துகொண்டு சேமித்து வெளியேற வேண்டும்.

#[Mounting, checking, etc. of internal drives]
#Identity=unix-group:admin
#Action=org.freedesktop.udisks.filesystem-*;org.freedesktop.udisks.drive-ata-smart*
#ResultActive=yes

அதாவது கீழ்கண்ட படத்தினை போல் இருக்கும்



இப்போது விண்டோ ntfs drive திறந்தால் கடவுச்சொல் கேட்கும்.



com.ubuntu.desktop.pkla என்ற கோப்பானது /var/lib/polkit-1/localauthority/10-vendor.d/ என்ற அடைவினுள் உள்ளது.

உபுண்டுவில் 4.10 லிருந்து 10.10 வரைக்குமான wall papers

உபுண்டுவில் 4.10 வரையிலிருந்து 10.10 வரைக்குமான wall papers.

4.10 Warty Wathog


5.04 Hoary hedgehog

5.10 Breezy bedger



6.06 Dapper drake


6.10 Edgy Eft


7.04 Feisty Fawn


7.10 Gutsy gibbon


8.04 Hardy Heron


8.10 Intrepid ibex


9.04 Jaunty Jackalope


9.10 Karmic koala


10.04 Lucid lynx



10.10 Marverick Meerkat