உபுண்டுவில் டெர்மினல் செல்வதற்கு Applications->Accessories-Terminal செல்ல வேண்டும். ஆனால் nautilus file managerல் இதற்கு வழி உள்ளது.
முதலில் டெர்மினலில்
sudo add-apt-repository ppa:flozz/flozz
sudo apt-get update
sudo apt-get install nautilus-terminal
என்று தட்டச்சு செய்தால் nautilus-terminal நிறுவப்பட்டுவிடும். பின்னர் Alt+F2 என்று பொத்தான்களை அழுத்தினால் வரும் விண்டோவில் nautilus -q என்று தட்டச்சு செய்து run பொத்தானை அழுத்தினால் nautilus-terminal nautilus file browserல் வந்துவிடும்.
இதில் பக்கத்தில் அம்புகுறி சுட்டிக்காட்டியுள்ள இடத்தில் இருக்கும் பொத்தானை அழுத்தினால் வண்ணம்,எழுத்துரு போன்றவைகளை மாற்றிக்கொள்ளலாம்.
இந்த டெர்மினலி மறைத்துவைக்கலாம். இதற்கு 'x' குறியை அழுத்தினால் மறைந்துவிடும்.
Sunday, September 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment