உபுண்டுவின் புதிய பதிப்பான 11.04 Natty Narwhal கடந்த 28.04.2011 அன்று வெளியிடப்பட்டது.
வழக்கம் போலவே இதிலும் பல புதிய பதிப்புகளை சேர்த்து இருக்கிறார்கள்.
1.Open officeற்க்கு பதிலாக Libreoffice சேர்த்திருக்கிறார்கள்.
2.நெருப்பு நரியின் புதிய பதிப்பான 4ஐ இதில் சேர்த்திருக்கிறார்கள்.
இந்த பதிப்பில் scim input சரிவர வேலை செய்யவில்லை. control+space அழுத்தினால் வேலை செய்ய வில்லை. ஆனால் text editorல் வேலை செய்கிறது.
3.Rythomboxற்க்கு பதில் Banshee சேர்த்திருக்கிறார்கள்
இந்த மீடியா ப்ளேயரை sound iconலும் சேர்த்திருக்கிறார்கள்.
4.Thunderbird ubuntu software centerல் புதிய பதிப்பாக இருக்கிறது.
உபுண்டு புதிய பதிப்பினை என்னுடை மடி கணினியில் முதலில் நிறுவினேன். Gnomeற்க்கு பதிலாக unity desktop மாற்றியிருக்கிறார்கள். முதலில் சிறிது தடுமாற்றமாக இருந்தாலும் எளிதில் பழகிவிடுகிறது.
இதில் + குறியிள்ள இடத்தில் சொடுக்க நிறுவப்பட்ட நிரல்களை காணலாம்.
Network Managerல் wired மற்றும் wireless இணைப்புகள் நல்ல முறையில் இயங்கின.
என்னுடைய broadband modem wifi வசதியிள்ளதால் அதிலிருந்தே இணைப்பினை மடிக்கணினியில் ஏற்படுத்திகொண்டேன். இதற்க்காக எந்த ஒரு driver நிரலையும் நிறுவ தேவையில்லை. எல்லா driver களும் உள்ளிணைந்தே வருகிறது.
என்னுடைய broadband modem wifi வசதியிள்ளதால் அதிலிருந்தே இணைப்பினை மடிக்கணினியில் ஏற்படுத்திகொண்டேன். இதற்க்காக எந்த ஒரு driver நிரலையும் நிறுவ தேவையில்லை. எல்லா driver களும் உள்ளிணைந்தே வருகிறது.
இந்த பதிப்பில் shutdown கீயை சொடுக்கினால் வரும் விண்டோவில் system settings என்ற ஆப்ஷனை சொடுக்கினால் ubuntu control centre வருகிறது.