உபுண்டுவில் txt கோப்புகளின் ஆடியோவினை கேட்க உதவுவது gespeaker. இது espeakன் gui வடிவமாகும். இதனை இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.
இந்த நிரலினை இயக்க் Applications->Sound & video->Gespeaker செல்ல வேண்டும். இந்த நிரல் செயல்பட துவங்கியவுடன் ஆங்கிலத்தில் வார்த்தைகள் இருக்கும். இதனை தமிழில் மாற்றிக்கொள்ளலாம்.

இதில் insert text to play என்ற இடத்தில் தமிழில் தேவையான வார்த்தைகளை தட்டச்சு செய்ய வேண்டும். பின்னர் language என்ற இடத்தில் tamilஐ தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் play பொத்தானை அழுத்தினால் தமிழில் வார்த்தைகள் கேட்கும்.
இந்த தமிழ் வார்த்தைகளை நிரல் ஆரம்பிக்கும்போது கேட்க Edit->preference சென்றால் use custom welcome messageல் டிக் செய்துவிட்டு custom messageல் தமிழில் தட்டச்சு செய்துவிட வேண்டும்.

பின்னர் ஒரு கோப்பில் உள்ளதை படிக்க வேண்டுமென்றால் open சென்று கோப்பினை திறக்க வேண்டும். இப்போது play பொத்தானை அழுத்தினால் நிரல் படிக்க ஆரம்பிக்கும்.

1 comment:
பிடிஎப் கோப்பை தமிழில் படிக்க ஏதாவது வழி இருக்கா?
Post a Comment