உபுண்டு டெர்மினலில் timezone எளிதில் அமைக்க முடியும். கீழ்கண்ட கட்டளையை டெர்மினலில் தட்டச்சு செய்வதன் மூலம் அமைக்க முடியும்.
tzselect என்று தட்டச்சு செய்தால் கீழ்கண்டவாறு டெர்மினலில் வரும்.

மேலே உள்ள விண்டோவில் நாம் எந்த கண்டமோ அதை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆசியா என்றால் 5 என்ற எண்ணை தட்டச்சு செய்து எண்டர் கீயை அழுத்தவேண்டும். இப்போது கீழ்கண்டவாறு டெர்மினலில் வரும்.

மேலே உள்ள விண்டோவில் பல்வேறு நாடுகளின் பெயர்களுடன் எண்களும் இருக்கும். இதில் இந்தியா என்றால் 14 என்பதனை தட்டச்சு செய்ய வேண்டும்.

இப்போது நாம் எந்த timezoneல் நம்முடைய கணினி இயங்கிகொண்டிருக்கிறது என்பதனை காட்டும். இதன் பின்னர் 1 என்று அழுத்த time zone உறுதியாகிவிடும்.
No comments:
Post a Comment