Pages

Thursday, September 1, 2011

உபுண்டுவில் மவுஸ் ஸ்க்ரோல் பொத்தானை செயலிழக்க செய்ய


உபுண்டுவில் ஏதேனும் வலைப்பக்கத்தை பார்த்துகொண்டு இருக்கும்போதோ அல்லது ஏதேனும் கடிதம் தட்டச்சு செய்யும் போது மவுஸ் ஸ்க்ரோல் பொத்தானை மேலும் கீழும் சென்று எளிதில் நம்முடைய வேலைகளை செய்ய பயன்படும்.

இந்த மவுஸ் ஸ்க்ரோல் பொத்தானை செயலிழக்க செய்ய முடியும். இதற்கு முதலில் டெர்மினலில் கீழ்கண்ட வரியை தட்டச்சு செய்ய வேண்டும்.

xinput list

இந்த கட்டளைக்கு கீழ்கண்டவாறு டெர்மினலில் திரை வரும்.


மேலே உள்ள படத்தில் மவுஸின் அடையாளம் கீழ்கண்ட வரியைபோல் வந்து இருப்பதை பார்க்கலாம்.

↳ Logitech USB Optical Mouse id=8 [slave pointer (2)]

இப்போது டெர்மினலில் கீழ்கண்ட வரியினை தட்டச்சு செய்தால் கீழ்கண்டவாறு திரை வந்திருக்கும்.

xinput get-button-map 8



1234567 என்றவாறு எண்கள் வந்திருக்கும். இந்த எண்களில்தான் மவுஸ் பொத்தானகளின் செயல்படுகள் அமைந்திருக்கின்றன. இதனை தெரிந்துகொள்ள டெர்மினலில் கீழ்கண்ட தட்டச்சு செய்ய வேண்டும்.

xinput list 8


இந்த எண்களில் 4 மற்றும் 5 ல் தான் மவுஸ் ஸ்க்ரோல் பொத்தான் வேலை செய்யும். இந்த செயல்பாட்டை தடுக்க டெர்மினலில் கீழ்கண்ட வரியினை தட்டச்சு செய்ய வேண்டும்.

xinput set-button-map 8 1 2 3 0 0

இந்த கட்டளையை கொடுத்தவுடன் மவுஸ் வீல் வேலை செய்யாது. இதனை மாற்ற டெர்மினலில் மீண்டும் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்ய வேண்டும்.

xinput set-button-map 8 1 2 3 4 5 6 7

இப்போது மவுஸ் வீல் வேலை செய்வதைப்பார்க்கலாம்.



No comments: