உபுண்டு 11.10 லாகின்  செய்யும்போது guest session வரும். இதில்  பலரும் உள் நுழைய  வாய்ப்பு  இருக்கிறது. இதை நீக்கிவிடலாம். டெர்மினலில்  கீழ்கண்ட  வரியினை தட்டச்சு  செய்ய வேண்டும்.
sudo gedit /etc/lightdm/lightdm.conf
இப்போது கோப்பு திறந்து கொள்ளும்.

இதில் கீழ்கண்டவாறு வரிகள் இருக்கும்.
[SeatDefaults]
greeter-session=unity-greeter
user-session=ubuntu
autologin-user=
மேற்கண்ட வரியின் கீழ்பகுதியில் allow-guest=false என்பதனை சேர்த்துவிட வேண்டும்.

பின்னர் டெர்மினலில்
sudo restart lightdm என்று  தட்டச்சு  செய்தால்  கணினி மீண்டும்  லாகின்  திரைக்கு  சென்றுவிடும். அதில்  guest session இல்லாதிருப்பதை  காணலாம்.
 
 


 
 Posts
Posts
 
 

 
 
 
No comments:
Post a Comment