Pages

Saturday, June 19, 2010

உபுண்டுவில் கர்சரை தானாக மறைய வைக்க

உபுண்டுவில் கர்சர் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் எந்த வித அசைவும் இல்லாமல் 5 வினாடிகள் இருந்தால் தானாகவே மறைய வைக்கலாம்.

முதலில் Applications-ubuntu software centre சென்று அதன் செர்ச் பெட்டியில் unclutter என்று தட்டச்சு செய்தால் நிரல் வந்துவிடும்.


பின்னர் install பொத்தானை அழுத்த நிரல் நிறுவப்பட்டுவிடும். பின்னர் இந்த நிரலை இயக்க
alt+f2 பொத்தான்களை ஒருசேர அழுத்த வரும் விண்டோவில் command line ல் unclutter என்று தட்டச்சு செய்து run பொத்தானை அழுத்தவேண்டும்.


இப்போது 5 வினாடிகள் கழித்து கர்சர் தானாகவே மறைவதை பார்க்கலாம். மீண்டும் தோன்ற வைக்க மவுஸை நகர்த்தினால் போதும்.

Friday, June 18, 2010

உபுண்டுவில் bootloaderஐ அழகுபடுத்த

உபுண்டுவில் பூட்லோடர் கருப்பு வெள்ளையில் படங்கள் ஏதும் இல்லாமல் இருக்கிறது. அழகிய splash images ஏற்கனவே பார்த்தோம். இப்போது burg என்ற நிரல் பல்வேறு அழகிய splash image உடன் வருகிறது. இதை கணினியில் நிறுவுவது சுலபம்.

முதலில் டெர்மினலில்

sudo add-apt-repository ppa:bean123ch/burg

sudo apt-get update && sudo apt-get install burg burg-themes

இப்போது நிரல் நிறுவப்பட்டுவிடும். பின்னர் mbr ல் நிறுவ

sudo burg-install "(hd0)" இங்கு hd0 என்பது burg நிறுவவேண்டிய வன்தட்டை குறிக்கிறது.

sudo update-burg என்று தட்டச்சு செய்துவிட்ட கணினியை மீளதுவங்கவேண்டும்.




மேலே உள்ள படம் போல் gurb loader வரும்போது 't' என்ற எழுத்தை அழுத்த பல்வேறு படங்களின் பெயர்கள் தேர்வுக்காக தோன்றும்.



இதிலிருந்து நமக்கு தேவையனதை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.


பின்னர் டெர்மினலில்

burg-emu என்று தட்டச்சு செய்தால் நடப்பிலிருக்கும் splash image தெரியும்.

உபுண்டுவில் ubuntu systemm panel

உபுண்டுவில் application, places, system ஆகிய மூன்று மெனுக்களையும் எளிதில் இயக்குவதற்கு உதவுவது ubuntu system panel ஆகும். இதை நிறுவிக்கொண்டால் இவை அனத்திற்கும் தனிதனியே போக வேண்டிய அவசியம் இல்லை

முதலில் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை இடவேண்டும்.

sudo add-apt-repository ppa:malacusp/ppa
sudo apt-get update
sudo apt-get install usp2 usp2-extras

பின்னர் top panel சென்று வலது சொடுக்க வரும் விண்டோவில் add to panel சென்று Ubuntu system panel என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது top panelல் இந்த நிரல் இருக்கும்.



இது எப்படி இயங்குகிறது என்பது பற்றி ஒரு வீடியோ


Tuesday, June 15, 2010

உபுண்டுவில் grub 2 வில் அழகிய splash images

உபுண்டுவில் grub2 load ஆகும்போது கருப்பு வெள்ளையாகதான் தெரியும். இதை அழகிய கலராக மாற்றலாம்.

கீழ்கண்ட சுட்டியிலிருந்து deb நிரல்களாக இருக்கிறது. அதை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளலாம்.


1. blue-splash-image.deb



2. brown-splash-image.deb



3. lucid-splash-image.deb


இந்த நிரல்களை நிறுவிய பின்னர் மீண்டும் கணினியை மீளதுவங்கவேண்டும்.

Sunday, June 13, 2010

உபுண்டுவிலிருந்து youtubeற்கு படங்களை ஏற்றுவதற்கு

உபுண்டுவில் desktop record செய்யும் போது ogv வடிவில் தான் பதிவாகும். ஆனால் இந்த படத்தை youtubeல் ஏற்றமுடிவதில்லை. எனவே avi ஆக மாற்றி தரவேற்றலாம்.

Desktopபை record செய்து முடித்தவுடன் ogv வடிவில் பதிவாகிவிடும். இதை avi ஆக மாற்ற டெர்மினலில் கீழ்கண்ட கட்டளை கொடுக்க வேண்டும்.

mencoder ram.ogv -o ram.avi -oac mp3lame -lameopts fast:preset=standard -ovc lavc -lavcopts vcodec=mpeg4:vbitrate=4000

இதில் ram.ogv என்று பதிவாகி உள்ளது. இதை ram.avi என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.




கீழே youtubeல் தரவேற்றப்பட்ட வீடியோ

Saturday, June 12, 2010

உபுண்டுவில் கணினியில் இடத்தை சேமித்தல்

உபுண்டு கணினியில் நாம் update செய்யும்போது அதன் நிரல்கள் கணினியில் தரவிறக்கப்பட்டுவிடும். /var/cache/apt/archieves/ என்ற அடைவினுள் இருக்கும்.


இந்த நிரல்கள் அப்டேட் ஆனவுடன் தேவையிருக்காது. இதை அழித்துவிட எளிய வழி உள்ளது.

System->Administration->Synaptic package manager சென்று அதன் settings செல்ல வேண்டும்.



பின்னர் files ஆப்ஷன் சென்று அதில் உள்ள Delete downloded package after installation என்பதை டிக் செய்து ok கொடுத்து வேளியேறவேண்டும். இப்போது நிரல்கள் நிறுவி முடிந்தவுடன் தானாகவே அழிக்கப்பட்டிருக்கும்.

உபுண்டுவில் விஎல்சி உதவியுடன் internet radio record செய்ய

உபுண்டுவில் விஎல்சி உதவியுடன் இணையத்தில் கேட்கும் பல்வேறு ரேடியோக்களை கணினியில் சேமித்துக்கொள்ளமுடியும்.

முதலில் டெர்மினலில்

sudo gedit recordint.sh என்ற ஒரு காலியான கோப்பினை திறந்து அதில் கீழ்கண்ட வரிகளை காப்பி பேஸ்ட் செய்யவேண்டும்.

#!/bin/sh

vlc --run-time=10800 http://www.live365.com/play/319909? --sout "#duplicate{dst=std{access=file,mux=raw,dst=/home//mfn.mp3}" vlc://quit ;

பின்னர் சேமித்து வேளியேறவேண்டும்.

மீண்டும் டெர்மினலில் இந்த ஸ்கிரிப்டை இயங்குநிலையில் வைக்க

sudo chmod +x recordint.sh என்று தட்டச்சு செய்யவேண்டும்.

sudo ./recordint.sh என்று தட்டச்சு செய்தவுடன் வானொளி இயங்க தொடங்கும். இது mfn.mp3 என்ற கோப்பில் பதிவாகும்.



இதில் record செய்வதற்கு சிகப்பு பொத்தானை அழுத்த வேண்டும்.


இதில் mfn.mp3 என்பது இணைய ரேடியோவிலிருந்து நேரடியாக பதிவிறக்கம் ஆனது. இதில் உள்ள இன்னொரு கோப்பு விஎல்சி மூலம் record செய்யப்பட்டது.

நேரடியாக கணினியின் speakerல் கேட்பதற்கு கீழ்கண்ட கட்டளையை டெர்மினலில் கொடுக்க வேண்டும்.

vlc --run-time=10800 http://www.live365.com/play/319909?


இப்போது speakerல் கேட்க முடியும்.