Pages

Saturday, June 12, 2010

உபுண்டுவில் விஎல்சி உதவியுடன் internet radio record செய்ய

உபுண்டுவில் விஎல்சி உதவியுடன் இணையத்தில் கேட்கும் பல்வேறு ரேடியோக்களை கணினியில் சேமித்துக்கொள்ளமுடியும்.

முதலில் டெர்மினலில்

sudo gedit recordint.sh என்ற ஒரு காலியான கோப்பினை திறந்து அதில் கீழ்கண்ட வரிகளை காப்பி பேஸ்ட் செய்யவேண்டும்.

#!/bin/sh

vlc --run-time=10800 http://www.live365.com/play/319909? --sout "#duplicate{dst=std{access=file,mux=raw,dst=/home//mfn.mp3}" vlc://quit ;

பின்னர் சேமித்து வேளியேறவேண்டும்.

மீண்டும் டெர்மினலில் இந்த ஸ்கிரிப்டை இயங்குநிலையில் வைக்க

sudo chmod +x recordint.sh என்று தட்டச்சு செய்யவேண்டும்.

sudo ./recordint.sh என்று தட்டச்சு செய்தவுடன் வானொளி இயங்க தொடங்கும். இது mfn.mp3 என்ற கோப்பில் பதிவாகும்.



இதில் record செய்வதற்கு சிகப்பு பொத்தானை அழுத்த வேண்டும்.


இதில் mfn.mp3 என்பது இணைய ரேடியோவிலிருந்து நேரடியாக பதிவிறக்கம் ஆனது. இதில் உள்ள இன்னொரு கோப்பு விஎல்சி மூலம் record செய்யப்பட்டது.

நேரடியாக கணினியின் speakerல் கேட்பதற்கு கீழ்கண்ட கட்டளையை டெர்மினலில் கொடுக்க வேண்டும்.

vlc --run-time=10800 http://www.live365.com/play/319909?


இப்போது speakerல் கேட்க முடியும்.