Pages

Saturday, July 31, 2010

உபுண்டுவில் force quit

உபுண்டுவில் சில நிரல்கள் இயங்கும் போது உதாரணமாக நெருப்பு நரி இயங்கும்போது சிலசமயங்களில் அப்படியே hang ஆகி நின்றுவிடும். உடனே நாம் close போத்தானை அழுத்தி மூட முயற்சி செய்வோம். ஆனால் சிறிது நேரம் கழித்துதான் மூடமுடியும். இப்போது அப்படியில்லாமல் உடனடியாக மூடுவதற்கு வழி ஒன்று உள்ளது.

முதலில் top panelல் வலது சொடுக்க வரும் விண்டோவில் force quit என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.


add பொத்தானை அழுத்தினால் இதனுடைய icon top panelல் தெரியும்.


இப்போது ஏதேனும் ஒரு நிரல் இயங்க மறுத்து நின்றுபோனால் top panelல் உள்ள iconல் இடது சொடுக்க எந்த விண்டோவை மூட வேண்டுமோ அந்த விண்டோவில் கர்சரை வைத்து இடது அழுத்தினால் விண்டோ உடனடியாக மூடப்பட்டுவிடும்.




Friday, July 30, 2010

உபுண்டுவில் bash shell history கோப்பும் அதன் அளவை மாற்றுதல்

உபுண்டு டெர்மினலில் history என்று தட்டச்சு செய்தால் நாம் உபுண்டு நிறுவியதிலிருந்து என்ன கட்டளைகள் கொடுக்கிறோமொ அந்த விவரங்கள் வந்துவிடும். வரிசை எண்களுடன் வந்து நிற்கும்.


இந்த தவல்களை ஒரு கோப்பில் பதிவு செய்வதற்கு டெர்மினலில்

history -w ~/userhistory.txt

என்று தட்டச்சு செய்தால் userhistory.txt என்னும் கோப்பில் சேமிக்கப்படும். இந்த கோப்பின் பெயர் நம் விருப்பம் போல் அமைத்துக்கொள்ளலாம்.

இந்த கோப்பின் அளவை மாற்ற டெர்மினலில்

sudo gedit ~/.bashsrc என்னும் கோப்பின திறந்துக்கொள்ளவேண்டும். அதில் கீழ்கண்ட வரியை கோப்பின் ஆரம்பத்தில் சேர்த்துவிட வேண்டும்.

export HISTFILESIZE=3000

userhistory.txt கோப்பினை சரிப்பார்க்க home அடைவினுள் இருக்கும் bash_history என்னும் கோப்பினை திறந்து பார்த்திக்கொள்ளலாம். இந்த கோப்பு bash shell லினால் தானாகவே உருவாக்கப்பட்ட கோப்பாகும்.

Wednesday, July 28, 2010

உபுண்டுவில் nautilus pyextensions

உபுண்டுவில் nautilus pyextensions என்பது உபுண்டுவில் nautilus file managerஐ எளிதாக உபயோகப்படுத்துவதற்க்கான ஒரு நிரல் ஆகும். இதனை இயக்குவது மிகவும் எளிதாக இருக்கிறது. மேற்கண்ட சுட்டியிலிருந்து இதனை தரவிறக்கி நிறுவிக்கொள்ளவேண்டும். இது .deb கோப்பாகவே கிடைக்கிறது. பின்னர்

Applications->Accessories->Nautilus PyExtensions செல்ல வேண்டும்.



இந்த நிரலின் பயன்கள்

1. open-as-root.py இது எந்த ஒரு கோப்பு/அடைவுயும் root user ஆக திறக்க முடியும். இது administrative rightsஉடன் கூடியது.



2.set-as-desktop-background.py எந்த ஒரு பட கோப்பையும் வால் பேப்பராக்க முடியும்.

3.open-terminal-geometry.py இது எந்த அடைவினுள் இருந்துகொண்டும் டெர்மினல் செல்ல முடியும்.


4.replace-in-filenames.py இது கோப்பில் உள்ள ஒரு சில டெக்ஸ்ட்களை மாற்றக்கூடியது.


5.kdiff3-compare.py மற்றும் meld-compare.py எனப்படுவது எந்த ஒரு கோப்பு/அடைவையும் compare செய்ய பயன்படுவது.

இப்போது ஏதாவது கோப்பு/அடைவின் மீது கர்சரை வைத்து வலது சொடுக்க

Sunday, July 25, 2010

உபுண்டுவில் remote desktop

உபுண்டுவில் remote desktopல் உள்ளவற்றை பார்க்க முடியும். இதற்கு முதலில்

system->preferences->remote desktop செல்ல வேண்டும்.



இதில் allow other users to view your desktop என்பதில் டிக் செய்யவும். பின்னர் நம்முடைய ip address தெரியும். இதை நம்முடைய நண்பர்களிடம் கொடுத்தால் அவர்கள நம்முடைய desktopஐ பார்க்க முடியும்.இதில் securityயில் your must confirm each access to the machine என்பதில் டிக் செய்ய வேண்டும்.

பின்னர் applications->internet->remote desktop viewer என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.


இதில் connect பொத்தானை அழுத்த


மேற்கண்ட விண்டோவில் protocoல் vnc என்பதனை தேர்ந்தெடுத்து hostல் ip address கொடுத்து connect பொத்தானை அழுத்தவேண்டும். இதில் find அழுத்தினால் remote desktop list தெரியும்.

connect பொத்தானை அழுத்தியபின் நம்மிடம் அனுமதி கேட்கும்.


இதில் allow பொத்தானை அழுத்த remote desktop நம்முடைய கணினியில் தெரியும்.



இப்போது top panelல் இதனுடைய icon வந்துவிடும்.


இந்த iconஇல் வலது சொடுக்க வரும் விண்டோவில் Disconnect என்பதனை அழுத்த தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடும்.

Saturday, July 24, 2010

உபுண்டு நெருப்பு நரி address bar drop down list clear செய்ய

உபுண்டு நெருப்புநரி உலாவியில் முகவரி பெட்டியில் ஏதெனும் ஒரு இணைய முகவரி தட்டச்சு செய்ய ஆரம்பித்தால் அதன் தொடர்புடைய எல்ல இணைய முகவரிகளும் drop down list ஆக வரும்.



இதை வராமல் செய்வதற்கு முகவரி பெட்டியில் about:config என்று தட்டச்சு செய்து I'll be careful, I promise என்பதனை அழுத்தி வரும் விண்டோவில் browser.urlbar.maxRichResults என்பதனை தேடி அதன் மதிப்பை 12லிருந்து 0 ஆக மாற்ற வேண்டும்.

மேற்கண்ட வரியில் கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் modify தேர்ந்தெடுக்க வேண்டும்.



இப்போது மீண்டும் நெருப்பு நரியை திறக்க drop down list வராது.

Thursday, July 22, 2010

உபுண்டுவில் தேதி மற்றும் நேரத்தை டெர்மினலில் மாற்ற

உபுண்டுவில் டெர்மினலில் தேதி மற்றும் நேரத்தை டெர்மினலில் மாற்றுவதற்கு

டாஸ் ஒஸ்ஸில் தேதி மற்றும் நேரத்தை மாற்ற டெர்மினலில் வழி உண்டு. ஆனால் லினக்ஸில் அவ்வாறு மாற்ற முடியும்.

தேதியை மாற்ற

டெர்மினலில்

date -d mm/dd/yyyy

அல்லது

date --date=mm/dd/yyy

இதில் mm=மாதம், dd=தேதி, yyyy=வருடம்.

நேரத்தை மாற்ற

date -s hh:mm:ss

அல்லது

date --set=hh:mm:ss

இதில் hh=மணி, mm=நிமிடம், ss=வினாடி

உதாரணம்

date -d 07/22/2010

date -s 08:41:00

Tuesday, July 20, 2010

உபுண்டுவில் இந்திய ரூபாய்க்கான குறியீடு.

உபுண்டுவில் இந்திய ரூபாய்க்கான குறியீட்டை தட்டச்சு செய்வது என்பது பற்றி பார்ப்போம்.

Rupee Font Version 2.0 என்ற சுட்டியிலிருந்து எழுத்துருவை தரவிறக்கிக்கொள்ளவேண்டும்.

பின்னர் தரவிரக்கப்பட்ட எழுத்துரு கோப்பின் மீது இரட்டை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ விரியும்.


இந்த எழுத்துருவை நிறுவ install font என்பதனை கிளிக் செய்தால் போதும். எழுத்துரு நிறுவப்பட்டு விடும்.

இதை சோதிக்க openoffice word processorஐ திறந்து அதில் எழுத்துருவை தேர்ந்தெடுத்து கொள்ளவேண்டும்.



விசை பலகையில் tabற்க்கு மேல் உள்ள கீயை அழுத்தினால் போதும்



Sunday, July 18, 2010

உபுண்டுவில் random password உருவாக்க ஒரு ஸ்கிரிப்ட்

உபுண்டுவில் random password உருவாக்குவதை பற்றி ஏற்கனேவெ ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன். இதோ இன்னொரு பதிவு.

முதலில் டெர்மினலில் ஒரு டெக்ஸ்ட் கோப்பினை திறந்து கொள்ளவேண்டும். பின்னர் கீழ்கண்ட வரிகளை அதில் காப்பி பேஸ்ட் செய்யவேண்டும்.

#!/bin/bash
# This script creates a random password using sha1sum

MASTONE=x
MASTTWO=y

while [ $MASTONE != $MASTTWO ] ; do
echo "Enter the master password"
read -s MASTONE
echo "Retype the master password"
read -s MASTTWO
if [ $MASTONE != $MASTTWO ] ; then
echo "Password entries don't match, try again" 1>&2
fi
done

echo "Enter the reason"
read -s REASON
echo "Enter desired number of characters"
read -s DESNUM
echo
echo "Your random password is:"
echo $MASTONE $REASON | sha1sum | cut -c1-$DESNUM
echo


மேற்கண்ட இந்த ஸ்கிரிப்டை நான் pass.sh என்ற ஒரு டெக்ஸ்ட் கோப்பில் காப்பி செய்து சேமித்துள்ளேன். அவரவர் விருப்பம் போல் கோப்பிற்கு பெயர் கொடுத்துக்கொள்ளலாம்.

பின்னர் இந்த கோப்பினை இயங்கு நிலையில் வைக்க டெர்மினலில்

sudo chmod +x pass.sh

இந்த நிரலை இயக்குவதற்கு டெர்மினலில்

./pass.sh என்று தட்டச்சு செய்யவேண்டும். இப்போது நிரல் இயங்க தொடங்கியதும். ஒரு சில கேள்விக்கு பதில் தட்டச்சு செயதவுடன் கடவுச்சொல் வந்துவிடும்.

Friday, July 16, 2010

உபுண்டுவில் delete permanently ஆப்ஷன்

உபுண்டு மேசைமீது ஏதெனும் ஒரு கோப்பின் மீது கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் delete option இருப்பதில்லை. இந்த ஆப்ஷனை கொண்டுவர முடியும்.

முதலில் Alt+F2 பொத்தான்களை அழுத்த வரும் விண்டோவில் gconf-editorஐ ஒடவிடவேண்டும்.


பின்னர் வரும் விண்டோவில் apps->nautilus->preferences சென்று அதில் enable_delete என்ற ஆப்ஷனுக்கு சென்று அதை டிக் செய்துவிடவேண்டும்.



இப்போது desktopல் உள்ள ஏதெனும் ஒரு கோப்பின் மீது கர்சரை வைத்து வலது சொடுக்க


இப்போது delete ஆப்ஷனை அழுத்தினால் கோப்பு நிரந்தரமாக அழிந்துவிடும்.

உபுண்டுவில் ஆடியோ பதிவு செய்ய ஒரு ஸ்கிரிப்ட்

உபுண்டுவில் ஆடியோ ஒலிக்கும்போது அதை அப்படியே பதிவு செய்வதற்கு உதவும் ஒரு ஸ்கிரிப்டை பற்றி பார்க்கலாம்.

முதலில் டெர்மினலில் ஒரு டெக்ஸ்ட் கோப்பினை திறந்து கொள்ளவும். பின்னர் அதில் கீழ்கண்ட வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்யவேண்டும்.

#!/bin/bash
#
# Records the PulseAudio monitor channel.
#
WAV="$1"
if [ -z "$WAV" ]; then
echo "Usage: $0 OUTPUT.WAV" >&2
exit 1
fi
rm -f "$WAV"

# Get sink monitor:
MONITOR=$(pactl list | grep -A2 '^Source #' | \
grep 'Name: .*\.monitor$' | awk '{print $NF}' | tail -n1)

# Record it raw, and convert to a wav
echo "Recording to $WAV ..."
echo "Ctrl-C or Close this window to stop"
parec -d "$MONITOR" | sox -t raw -r 44100 -sLb 16 -c 2 - "$WAV"


பின்னர் டெக்ஸ்ட் கோப்பினை சேமித்து வெளியேறவும்.இந்த ஸ்கிரிப்டை இயங்கவைக்க
டெர்மினலில்

sudo chmod u+x pa-clone என்று தட்டச்சு செய்யவேண்டும். pa-clone என்பது டெக்ஸ்ட் கோப்பின் பெயராகும்.வேறு பெயர்கூட கொடுத்துக்கொள்ளலாம்.

பின்னர் ஒரு ஆடியோ ஒடவிட்டு டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்யவேண்டும்.

,/pa-clone output.wav இந்த ஸ்கிரிப்டில் wav வடிவில் ஆடியோ பதிவாகும். output.wav என்ற பெயரில் இருக்கும். பின்னர் இந்த பெயரை மாற்றிக்கொள்ளலாம்.

இந்த ஸ்கிரிப்டை இயக்கும்போது கீழ்கண்ட பிழை செய்தி வரும்.

arulmozhi@arulmozhi-desktop:~$ sudo ./pa-clone output.wav
Recording to output.wav ...
Ctrl-C or Close this window to stop
./pa-clone: line 21: sox: command not found
write() failed: Broken pipe

இவ்வாறு வந்தால் டெர்மினலில்

sudo apt-get install sox என்று தட்டச்சு செய்து sox என்ற நிரலை நிறுவ்க்கொள்ளவேண்டும்.

Thursday, July 15, 2010

உபுண்டுவில் numeric pad பயன்படுத்தி கர்சரை நகர்த்த

உபுண்டுவில் numeric pad னை பயன்படுத்தி திரையில் தெரியும் கர்சரை மவுஸ் இல்லாமல் செயபட வைக்க முடியும்.

முதலில் left-Alt+LeftShift+Numlock ஆகிய மூன்று பொத்தான்களை ஒரு சேர அழுத்த வேண்டும்.

இப்போது numeric padiல் உள்ள எண்களை அழுத்த திரையில் தெரியும் கர்சர் நகர தொடங்கு.

மேலும் ஏதேனும் ஒரு கோப்பினை திறக்க இடது கிளிக் செய்வோம். இதில் 5 என்ற எண் அல்லது என்டர் என்ற பொத்தான்களை அழுத்தவேண்டும்.

இதை செய்ல்படாமல் வைக்க மீண்டும் left-Alt+LeftShift+Numlock ஆகிய மூன்று பொத்தான்களை ஒரு சேர அழுத்த வேண்டும்.

Wednesday, July 14, 2010

உபுண்டுவில் redshiftgui நம் கண்களை பாதுகாக்க

உபுண்டுவில் இரவு நேரங்களில் வேலை செய்யும் போது நம்முடைய கண்களை அதிக வெளிச்சத்திலிருந்து பாதுகாக்க redshiftgui என்ற நிரல் பயன்படுகிறது. சரியாக இரவு நேரம் வந்தவுடன் கணினி திரை சற்று மங்கலாக தெரியும். இந்த நிரலை நிறுவுவதற்கு சுட்டியிலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளவேண்டும்.

Redshiftgui

Applications->accessories->redshiftgui செல்ல வேண்டும்.






பின்னர் location தேர்ந்தெடுத்து நம்முடைய ip முகவரியோ அல்லது ஊரின் பெயரையோ கொடுக்க வேண்டும்.


இதில் சேவ் பொத்தானை அழுத்தி வெளியேறவேண்டும்.

பின்னர் தானாகவே brightnessஐ சரிசெய்துகொள்கிறது.

இதில் settings பொத்தானை அழுத்தி வெப்பநிலையை சரிசெய்துகொள்ளலாம்.



பின்னர் இந்த நிரல் தானாகவே தொடங்க

Systems->Preferences->Startup applicationsல் சேர்த்துவிட வேண்டும்.




Sunday, July 11, 2010

உபுண்டுவில் ppasearch

உபுண்டுவில் ஏதேனும் ஒரு நிரலை நிறுவ வேண்டுமென்றால் deb கோப்புகளாகவோ அல்லது ppa மூலமாகவோதான் நிறுவிக்கொள்ளவேண்டும்.

சரியான ppa வை தேடிக்கண்டுபிடிப்பது சற்று சிரமமாக இருக்கும். அதற்கு எளிதான வழி ஒன்று உள்ளது. ppasearch நிறுவுவதன் மூலம் சரிசெய்யலாம். டெர்மினலில் மூலமாக தேடிக்கொள்ளலாம்.

முதலில் டெர்மினலில் கீழ்கண்ட வரிகளை தட்டச்சு செய்து software cources சேர்த்துக்கொள்ளவேண்டும்.



sudo add-apt-repository ppa:wrinkliez/ppasearch && sudo apt-get update

sudo apt-get install ppasearch

பின்னர் டெர்மினலில்

ppasearch தட்டச்சு செய்தால் நிரல் செயல்பட துவங்கும்.


உதாரணத்திற்க்கு vlc என்று கொடுத்துள்ளேன். இதில் சுமார் 75 ppa இருப்பதாக காட்டுகிறது.

கடைசியாக எந்த ppa தேர்ந்தெடுப்பதற்கு குறிப்பிட்ட எண் கேட்கும்.



எண் கொடுத்தவுடன் software sourceல் சேர்க்கவ என்று கேட்கும். yes கொடுத்தவுடன் சேர்ந்துவிடும். பின்னர் எளிதாக நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.

உபுண்டுவை பற்றிய சில யூடியுப் படங்கள்

உபுண்டுவை பற்றிய சில you tube படங்கள் இணையத்தில் உலா வந்தபோது கண்ணில் பட்டவை.









Saturday, July 10, 2010

உபுண்டு system optionல் ஐகான் கொண்டுவர

உபுண்டு Applications,places போன்றவற்றில் நிரல்களுக்கு நேராக ஐகான் எனப்படும் சிறிய படங்கள் இருக்கும். ஆனால் system ஆப்ஷனில் அந்த படங்கள் இருக்காது.




இதிலும் சிறிய படங்களை கொண்டுவர கீழ்கண்ட கட்டளையை டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.

gconftool-2 --type Boolean --set /desktop/gnome/interface/menus_have_icons True

இப்போது சிறிய ஐகான்கள் இருப்பதை பார்க்கலாம்.


தேவையில்லை என்று கருதினால் 'True' க்கு பதில் 'False' என்று தட்டச்சு செய்தால் போதும்.

Thursday, July 8, 2010

உபுண்டுவில் முனையத்தில் gmail படிக்க

உபுண்டுவில் டெர்மினலில் email படிக்க அனுப்ப முடியும். இதற்கு கீழ்கண்ட நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.

முதலில் டெர்மினலில்

sudo apt-get install alpine என்ற நிரலை நிறுவியப்பின் டெர்மினலில்

alpine என்று தட்டச்சு செய்தால் நிரல் துவங்கிவிடும்.


இதில் enter கீயை அழுத்த வரும் விண்டோவில் செர்வர்களை அதாவது அனுப்ப, பெற வேண்டி அமைக்க வேண்டும்.


இதில் S என்ற எழுத்தை அழுத்த


இதில் C ஐ அழுத்த




1. Personal Name = இதில் நம் பெயரை கொடுத்துக்கொள்ள்லாம்.
2. User Domain = gmail.com இதில் நம்முடைய இமெயிலின் டொமைன் பெயரை கொடுக்க வேண்டும்.
3. SMTP Server (for sending) = smtp.gmail.com:587/tls/user=xxx@gmail.com இதில் xxx@gmail.com என்பது நம்முடைய இமெயில் முகவரி ஆகும். இந்த அமைப்பு இமெயில் அனுப்புவதற்கானது.

4. Inbox Path = {pop.gmail.com/pop3/ssl/novalidate-cert/user=xxx@gmail.com}INBOX இந்த அமைப்பு நமக்கு வந்த இமெயில்களை படிப்பதற்கு.

இந்த அமைப்புகள் போதுமானது.

இப்போது E என்ற எழுத்தை அழுத்தி முன்பக்கத்திற்கு வரவேண்டும். இது பல உதவிகள் விண்டோவின் கீழ்பக்கத்தில் இருக்கும்.

இப்போது L என்ற எழுத்தை அழுத்தினால் மூன்று அடைவுகளை காண்பிக்கும்.




இப்போது என்டர் கீயை அழுத்த வரும் விண்டோவில் நம் இமெயிலின் கடவுச்சொல் கேட்கும்.


கடவுச்சொல் கொடுத்தவுடன் நம்முடைய இமெயிலின் இன்பாக்ஸில் உள்ளது தெரியும்.



இப்போது main menuவிற்கு சென்று C என்ற எழுத்தை அழுத்தினால் இமெயில் அனுப்ப முடியும்.


அமைப்புகளை முதலில் இயக்கயவுடன் அமைத்துவிட்டால் மீண்டும் திறந்தால் கடவுச்சொல் மட்டும் கேட்டு இன்பாக்ஸை திறந்துவிடும்.

Wednesday, July 7, 2010

உபுண்டுவில் midnight commander file manager

உபுண்டுவில் கோப்புகளை கையாள்வதற்கு பெரும்பாலும் பயன்படுவது nautilus ஆகும். midnight commander என்ற மென்பொருள் இதற்க்காக பயன்படுகிறது.

முதலில் டெர்மினலில்

sudo apt-get install mc என்று தட்டச்சு செய்து நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.

பின்னர் டெர்மினலில் mc என்று தட்டச்சு செய்து ஆரம்பிக்க வேண்டும்.இதில் நகலெடுத்தல், திருத்துதல் போன்றவை எளிதாக செய்யலாம். deb,rpm போன்ற கோப்புகளின் உள்ளடக்கத்தை பார்க்கலாம்.பெயர்மாற்றுதல் போன்றவைகளையும் செய்துகொள்ளலாம்.



இதன் பல்வேறு options






இதன் பல்வேறு கட்டளைகள் நிரலின் மேல்பாகத்திலும், கீழ்பாகத்திலும் காணலாம்.