உபுண்டு டெர்மினலில் history என்று தட்டச்சு செய்தால் நாம் உபுண்டு நிறுவியதிலிருந்து என்ன கட்டளைகள் கொடுக்கிறோமொ அந்த விவரங்கள் வந்துவிடும். வரிசை எண்களுடன் வந்து நிற்கும்.
இந்த தவல்களை ஒரு கோப்பில் பதிவு செய்வதற்கு டெர்மினலில்
history -w ~/userhistory.txt
என்று தட்டச்சு செய்தால் userhistory.txt என்னும் கோப்பில் சேமிக்கப்படும். இந்த கோப்பின் பெயர் நம் விருப்பம் போல் அமைத்துக்கொள்ளலாம்.
இந்த கோப்பின் அளவை மாற்ற டெர்மினலில்
sudo gedit ~/.bashsrc என்னும் கோப்பின திறந்துக்கொள்ளவேண்டும். அதில் கீழ்கண்ட வரியை கோப்பின் ஆரம்பத்தில் சேர்த்துவிட வேண்டும்.
export HISTFILESIZE=3000
userhistory.txt கோப்பினை சரிப்பார்க்க home அடைவினுள் இருக்கும் bash_history என்னும் கோப்பினை திறந்து பார்த்திக்கொள்ளலாம். இந்த கோப்பு bash shell லினால் தானாகவே உருவாக்கப்பட்ட கோப்பாகும்.
Friday, July 30, 2010
உபுண்டுவில் bash shell history கோப்பும் அதன் அளவை மாற்றுதல்
லேபிள்கள்:
bash
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment