Pages

Sunday, July 11, 2010

உபுண்டுவில் ppasearch

உபுண்டுவில் ஏதேனும் ஒரு நிரலை நிறுவ வேண்டுமென்றால் deb கோப்புகளாகவோ அல்லது ppa மூலமாகவோதான் நிறுவிக்கொள்ளவேண்டும்.

சரியான ppa வை தேடிக்கண்டுபிடிப்பது சற்று சிரமமாக இருக்கும். அதற்கு எளிதான வழி ஒன்று உள்ளது. ppasearch நிறுவுவதன் மூலம் சரிசெய்யலாம். டெர்மினலில் மூலமாக தேடிக்கொள்ளலாம்.

முதலில் டெர்மினலில் கீழ்கண்ட வரிகளை தட்டச்சு செய்து software cources சேர்த்துக்கொள்ளவேண்டும்.



sudo add-apt-repository ppa:wrinkliez/ppasearch && sudo apt-get update

sudo apt-get install ppasearch

பின்னர் டெர்மினலில்

ppasearch தட்டச்சு செய்தால் நிரல் செயல்பட துவங்கும்.


உதாரணத்திற்க்கு vlc என்று கொடுத்துள்ளேன். இதில் சுமார் 75 ppa இருப்பதாக காட்டுகிறது.

கடைசியாக எந்த ppa தேர்ந்தெடுப்பதற்கு குறிப்பிட்ட எண் கேட்கும்.



எண் கொடுத்தவுடன் software sourceல் சேர்க்கவ என்று கேட்கும். yes கொடுத்தவுடன் சேர்ந்துவிடும். பின்னர் எளிதாக நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.

3 comments:

மணிகண்டன்.பா said...

வணக்கம் சார் !

நான் மணிகண்டன்(engg stu) , (கணினி அறிவியல் வலைப்பூ ) .எனக்கு லினக்ஸில் ஒரு சந்தேகம் சார் ! "remastering sys " என்றால் என்ன.

என் நண்பன்(kathirvel) இந்த மென்பொருள் மூலம் புதியதாக லினக்ஸ் இயங்குத்தளம் உருவாக்கலாம் என்று கூறினார் .இது உண்மையா ! இவற்றை பற்றி தகவல் தெரிவித்தால் எனக்கு மிக பயன் உள்ளதாக இருக்கும்.

arulmozhi r said...

வாருங்கள் மணிகண்டன் remastersys என்பது ஒரு backup எடுப்பதற்கான மென்பொருளாகும். ஆனால் இதில் backupம் எடுக்கலாம் அல்லது distro copyஆக எடுக்கலாம். distro copy என்பது நம்முடைய கணினியில் உள்ளவற்றை எடுத்து இன்னொரு கணினியில் அப்படியே நிறுவிவிடலாம். எல்ல video and audio கோடக்குகளுடன். இதை பற்றி அறிய இந்த சுட்டியை பார்க்கவும்

http://ubuntuintamil.blogspot.com/2010/01/remastersys-distrolivecddvd-copy.html

arulmozhi r said...

//வணக்கம் சார் !

நான் மணிகண்டன்(engg stu) , (கணினி அறிவியல் வலைப்பூ ) //

மணிகண்டன் உங்களை போல் மாணவர்கள் அதிக அளவில் லினக்ஸ் பற்றி அறிய விரும்புவது லினக்ஸ் உலகை ஆளும் என்ற நம்பிக்கையை பலமடங்கு அதிகரிக்க செய்கிறது