Pages

Friday, August 3, 2012

உபுண்டு மேசையில் android கைப்பேசியின் call/sms தகவல்களை notifierஆக பெற

உபுண்டுவில்  android  கைப்பேசியில்  வரும்  call/smsக்களை notifier ஆக பெறலாம். அதற்கு android கைப்பேசியிலும்  உபுண்டுவிலும் தேவையான மென்பொருள்களை நிறுவிக்கொண்டால்  போதும்.

இந்த மென்பொருள்கள் இலவசமாகவே நமக்கு கிடைக்கின்றன. இதற்கான சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான சுட்டி. இதில் உபுண்டுவிற்கான மென்பொருளும் android டிற்க்கான மென்பொருளும்  கிடைக்கிறது.

Androidடிற்க்கான  மென்பொருளை googleலும் பெறலாம். அதற்கான சுட்டி.



Tuesday, May 1, 2012

உபுண்டு 12.04 Precise Pangolin

உபுண்டு 12.04 சில  நாட்களுக்கு முன் வெளியானது. வழக்கம்போல் LTS க்கே உரித்தான பல்வேறு  புதிய  வசதிகளுடன் வெளிவந்துள்ளது.

முதலில் இதனை தரவிறக்கி சிடியில் பதிந்து செயல்படதுவங்கியவுடன் இதில் உள்ள  Installation type ல்  உள்ள நான்கு  பிரிவினுள் Upgrade 11.04 to 12.04 ம் அடக்கம்.


முந்தைய பதிப்புகளில் இதற்கே தனியாக  alternate cd தரவிறக்க வேண்டியிருக்கும்.

நெருப்பு நரி புதிய பதிப்புடன் 11.0 வெளியாகி உள்ளது. நிறுவியப்பின் புதிய பதிப்பு நெருப்பு நரி 12.0 update மூலம் நிறுவிக்கொள்ளலாம்.


தண்டர் பேர்டு 11.0.1 பதிப்புடன் வந்துள்ளது.


இந்த புதிய பதிப்பினை நிறுவியப்பின் startup sound வரவில்லை. இதனை startup applicationல்  சேர்த்துக்கொள்ள வேண்டும். தேவையில்லை என்றால் விட்டுவிடலாம்.

கெர்னலும் புதிய பதிப்பு 3.2.0.23 உடன் வந்துள்ளது.updateல்  3.2.0.24 ஆக  மேம்படுத்தப்பட்டுள்ளது.

முக்கியமாக தமிழ் உள்ளீடு முந்தைய 11.10ல் உள்ளதுபோல் அமைத்துகொள்ள வேண்டும்.இதற்கான சுட்டி உபுண்டு 11.10. Ibus முறையிலேயே அமைத்துக்கொள்ளலாம்.

லிபர் ஆபிஸ் புதிய பதிப்பான  3.5.2.2


System settings பகுதியில் இரண்டு புதிய வசதிகள் சேர்த்திருக்கிறார்கள்.


1.Privacy இதில் நாம் இயக்கிய கோப்புகளை பிறர் பார்க்கதவாறு மறைக்க முடியும்.
2. Management service என்பது Canonicalன் வர்த்தக ரீதியான சேவைகளை காண முடியும்.

இடது பக்கத்தில் உள்ள யுனிட்டி பார் நெருப்பு நரி இயக்கும்போது மறையவில்ல இதனை system settings மூலம் மறையவைக்கலாம்.

எந்தவிதமான பிரச்சனையில்லாமல் நிறுவ முடிந்தது. ஆடியோ, வீடியோ கோடக்குகளை வழக்கம்போல் எளிதாக நிறுவிக்கொள்ளலாம்.





Thursday, April 5, 2012

உபுண்டு சில தகவல்கள்

ஜீஎன்யு/லினக்ஸ் மற்றும் சுதந்திர மென்பொருள் இயக்கத்தினை தோற்றுவித்த திரு. ரிச்சர்ல் ஸ்டால்மென் அவர்களின் Linux for you இதழுக்கு அளித்த நேர்காணல் தமிழில் தந்திருக்கிறார் நண்பர் மகேஷ் அவர்கள். அவருக்கு என் நன்றிகள் பல அதற்கான சுட்டி

நண்பர் ந.ர.செ.ராஜ்குமார் அவர்கள் Liebster Blog விருதினை வழங்கியிருக்கிறார். அவருக்கு என் நன்றிகள் பல. அதற்கான சுட்டி

Sunday, March 18, 2012

உபுண்டுவில் sector 32 Flexnet problem -grub

உபுண்டுவுடன் விண்டோஸ் நிறுவியிருந்தால் தோன்றும் பிழை இது. அதாவது விண்டோஸில் ஏதேனும் வைரஸ் பதிப்பு இருந்தால் இது மாதிரியான பிழை செய்தி வரும். கணினியானது மீண்டும் மீண்டும் மீளத்துவங்கும். grub மேனுவினுள் செல்லாது. சிடி மூலம் grub மீண்டும் நிறுவினால் Sector 32 being in use by FlexNet என்ற செய்தி தோன்றும். அதாவது sector 32 வில் வேறு ஏதுவும் பதிவாகாது.

இதனை எவ்வாறு சரி செய்வது பற்றிப்பார்க்கலாம்.

1. முதல் வழி
முதலில் 1லிருந்து 63 sector வரையுள்ள தகவல்களை கீழ்கண்ட கட்டளையின் மூலம் ஒரு backup எடுத்துக்கொள்ள வேண்டும்.

sudo dd if=/dev/sda of=~/first_63_sectors bs=512 count=63

பின்னர் 1 லிருந்து 62 வரையிலான sector களின் பதிவுகளை அழிக்க பின்வரும் கட்டளை கொடுக்க வேண்டும். இதன் மூலம் இந்த sector களில் grubனை மீண்டும் நிறுவவும் flexnet தகவல்களை அழிக்கவும் முடியும்.

sudo dd if=/dev/zero of=/dev/sda bs=512 count=62 seek=1

இப்போது லைவ் சிடி மூலம் grub நிறுவிக்கொள்ளலாம். அந்தந்த பதிப்பு சிடியை பயன்படுத்த வேண்டும்.

அல்லது sector 32 வில் உள்ள flexnet தகவல்களை மட்டும் அழிக்க கீழ்கண்ட கட்டளை கொடுக்க வேண்டும்.

sudo dd if=/dev/zero of=/dev/sda bs=512 count=1 seek=32

இங்கு 32 என்பது sector 32 என்பதாகும். 1லிருந்து 62 வரையிலான எந்த sectorல் flexnet பிழை இருக்கிறதோ அந்த sector என்ணை கொடுக்க வேண்டும்.

குறிப்பு: இந்த வழி அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டும்.

2.இரண்டாவது வழி

இதனை PPA மூலமும் செயல்படுத்த முடியும்.

sudo add-apt-repository ppa:yannubuntu/boot-repair
sudo apt-get update
sudo apt-get install boot-repair

பின்னர் boot-repair என்ற நிரலை இயக்கி பிழையினை சரிசெய்து கொள்ளலாம்.

மேற்கொண்டு grub பிழையினை பற்றி தெரிந்து கொள்ள கீழ்கண்ட சுட்டியை பார்க்கவும்.

https://help.ubuntu.com/community/Boot-Repair

Thursday, January 26, 2012

உபுண்டு டெர்மினலில் iso கோப்பினை உருவாக்குதலும் மற்றும் சிடியில் எழுதுதலும்

உபுண்டுவில் டெர்மினலில் ஒரு iso கோப்பினை உருவாக்கி அதனை சிடியில் எழுதவிட முடியும். இதற்கு brasero போன்ற மென்பொருள்கள் தேவையில்லை.

இதற்கு தேவையான மென்பொருள்களை நிறுவ கீழ்கண்ட கட்டளையே போதுமானது.

sudo apt-get install genisoimage wodim

உபுண்டுவில் பல பதிப்புகளை மேலே கண்ட நிரல்கள் இயல்பாக நிறுவப்பட்டிருக்கும். இல்லையேன்றால் நிறுவிக்கொள்ள வேண்டும்.

பின்னர் நாம் விரும்பும் ஒரு அடைவினை தேர்ந்தெடுத்து அதனை சிடியில் எழுதலாம். இதற்கு டெர்மினலில் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்ய வேண்டும்.

mkisofs -o some.iso /home/username/folder name

இப்போது some.iso என்ற கோப்பானது home அடைவினுள் உருவாகியிருக்கும். இதனை சிடியில் எழுத சிடி வன்பொருள் இருக்கிறதா என்று பார்க்க டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையிட வேண்டும்.

wodim --devices

கீழ்கண்டவாறு திரை தோன்றும்.



பின்னர் டெர்மினலில்

wodim -v -dao speed=8 dev='/dev/sg0' some.iso

என்று தட்டச்சு செய்தால் சிடியில் some.iso என்ற கோப்பானது எழுதப்பட்டுவிடும்.

Saturday, January 21, 2012

உபுண்டுவில் libreoffice 3.4.5 புதிய பதிப்பு

உபுண்டுவில் libreoffice ன் புதியபதிப்பு 3.4.5வினை நிறுவுவதைப்பற்றிப் பார்க்கலாம். இதனை PPA மூலம் எளிதாக நிறுவிக்கொள்ளலாம்.

டெர்மினலில் கீழ்கண்ட கட்டளைகளை தட்டச்சு செய்வதன் மூலம் நிறுவிக்கொள்ளமுடியும்.

sudo add-apt-repository ppa:libreoffice/ppa

sudo apt-get update

sudo apt-get upgrade


இதை பற்றிய அறிவிப்பினை காண இந்த சுட்டியை பார்க்கவும்.

Monday, January 16, 2012

உபுண்டு டெர்மினலில் wireless இணைப்புகளை காண

உபுண்டு டெர்மினலில் நமக்கு அருகில் இருக்கும் wifi இணைப்புகளை காண கீழ்கண்ட கட்டளையினை டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.

iwlist scan

உடனே கீழ்கண்ட திரை டெர்மினலில் தோன்றும்.


இதிலிருந்து wifi யின் தன்மைகளை வேகம் போன்ற தகவல்களை டெர்மினலில் அறிந்து கொள்ளலாம்.

Sunday, December 18, 2011

உபுண்டு மடிக்கணினியில் power buttonஐ அழுத்தி உடனடியாக நிறுத்த


உபுண்டு மடிக்கணினியினை power button அழுத்தி உடனடியாக நிறுத்த முடியும்.

உபுண்டு மடிக்கணினியில் power buttonஐ அழுத்தினால் திரையில் கீழ்கண்டவாறு வரும்.


அப்படியில்லாமல் கணினியை உடனடியாக நிறுத்த முடியும். இதற்கு முதலில் இதற்கான கோப்பினை காணலாம். கோப்பானது /etc/acpi/powerbtn.sh ல் இருக்கிறது. எனவே இந்த கோப்பினை ஒரு பேக்கப் எடுத்துகொள்ள வேண்டும். இதற்கு முதலில் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையினை கொடுக்க வேண்டும்.

sudo cp /etc/acpi/powerbtn.sh /etc/acpi/powerbtn.sh.back

இந்த கோப்பில் கீழ்கண்டவாறு இருக்கும்.



டெர்மினலில்

sudo gedit /etc/acpi/powerbtn.sh என கட்டளையிட்டு கோப்பில் கீழ்கண்டாவாறு மாற்றிக்கொள்ள வேண்டும்.


இப்போது power buttonஐ அழுத்தினால் மடிக்கணினி உடனடியாக நின்றுவிடும்.

Saturday, November 26, 2011

உபுண்டுவில் pdf கோப்புகளை இணைக்க

உபுண்டுவில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட pdf கோப்புகளை இணைக்க பயன்படும் டூல் pdftk என்பதாகும். இந்த நிரலை கீழ்கண்ட வரியினை டெர்மினலில் கட்டளையாக கொடுப்பதன் மூலம் எளிதாக நிறுவிக்கொள்ளலாம்.

sudo apt-get install pdftk

இந்த நிரலை கீழ்கண்ட வகைகளில் பயன்படுத்தலாம்.

1. ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை இணைக்க

pdftk A=12.pdf B=13.pdf C=14.pdf [...] cat A B C output 15.pdf

இதில் ABC என்பது கோப்புகளை குறிக்கும்.இந்த கட்டளையானது கோப்புகளில் இருக்கும் எல்லா பக்கங்களையும் இணைக்கும். இதை கொடுக்காமலும் பயன்படுத்தலாம்.

pdftk 12.pdf 13.pdf 14.pdf [..] cat 15.pdf

2.கோப்புகளிலிருந்து தேவையான பக்கங்களை மட்டும் இணைக்க

pdftk A=12.pdf B=13.pdf C=14.pdf [...] cat A2-5 B2-5 C2-5 output 15.pdf

இதில் A2-5, B2-5 மற்றும் C2-5 என்பது கோப்புகளில் எந்தெந்த பக்கங்களை சேர்க்க வேண்டும் என்பதாகும்.

3. wild card பயன்படுத்துதல்

pdftk *.pdf cat output 15.pdf

Saturday, November 19, 2011

உபுண்டுவில் application launcher உருவாக்குதல்

உபுண்டு 11.10ல் application launcher எப்படி உருவாக்குவது என்பது பற்றி பார்க்கலாம்.

முதலில் விஎல்சியின் launcher உருவாக்குவதைப்பற்றி பார்க்கலாம்.

இதற்கு முதலில் டெர்மினலில் கீழ்கண்ட வரியினை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo apt-get install --no-install-recommends gnome-panel


பின்னர் டெர்மினலில் கீழ்கண்ட வரியினை தட்டச்சு செய்ய வேண்டும்.

gnome-desktop-item-edit ~/Desktop/ --create-new

இதனை தட்டச்சு செய்தபின் கீழ்கண்ட விண்டோ தோன்றும்.


இதில் Nameல் VLC என்று தட்டச்சு செய்தபின் commandல் vlc என்று தட்டச்சு செய்து ok பொத்தானை அழுத்த வேண்டும்.


இப்போது மேசைமீது launcher உருவாகி இருப்பதை பார்க்கலாம்.

Thursday, November 10, 2011

உபுண்டுவில் கணினி 3D ஆதரிக்கிறதா என்பதை காண

உபுண்டுவில் நம்முடைய கணினி 3D யினை ஆதரிக்கிறதா என்பதை காண உதவும் டூல் glxgears ஆகும்.

இதனை இயக்க முதலில் mesa-utils என்னும் நிரலை நிறுவிக்கொள்ள வேண்டும். முதலில் டெர்மினலில் கீழ்கண்ட வரியினை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo apt-get install mesa-utils

நிரலை நிறுவிய பிறகு டெர்மினலில் glxgears என்று தட்டச்சு செய்ய வேண்டும். இதன் வெளிப்பாடாக இடது மேல் முலையில் மூன்று கியர்கள் சுழல்வது போல் படம் வரும்.


10 முதல் 12 விநாடிகளுக்கு பிறகு திரையில் fps போன்ற தகவல்கள் வரும். fps என்பது frame per second ஆகும். இதன் மதிப்பு 1000க்கு மேல் இருந்தால் 3D acceleration மற்றும் graphics னை ஆதரிப்பதக கொள்ளலாம்.

Tuesday, October 25, 2011

உபுண்டுவில் guest sessionனை நீக்குதல்

உபுண்டு 11.10 லாகின் செய்யும்போது guest session வரும். இதில் பலரும் உள் நுழைய வாய்ப்பு இருக்கிறது. இதை நீக்கிவிடலாம். டெர்மினலில் கீழ்கண்ட வரியினை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo gedit /etc/lightdm/lightdm.conf

இப்போது கோப்பு திறந்து கொள்ளும்.


இதில் கீழ்கண்டவாறு வரிகள் இருக்கும்.

[SeatDefaults]
greeter-session=unity-greeter
user-session=ubuntu
autologin-user=

மேற்கண்ட வரியின் கீழ்பகுதியில் allow-guest=false என்பதனை சேர்த்துவிட வேண்டும்.


பின்னர் டெர்மினலில்

sudo restart lightdm என்று தட்டச்சு செய்தால் கணினி மீண்டும் லாகின் திரைக்கு சென்றுவிடும். அதில் guest session இல்லாதிருப்பதை காணலாம்.

Wednesday, October 19, 2011

உபுண்டு 11.10ல் multimedia codecs நிறுவுதல்

உபுண்டு 11.10 நிறுவியபின் அதில் medibuntu repositaryஐ பயன்படுத்தி multimedia codecs நிறுவுதல் பற்றி பார்க்கலாம்.

இதனால் encrypted dvdக்களையும் பார்க்க முடியும்.கீழே உள்ள கட்டளைகலை டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo apt-get update

sudo wget http://www.medibuntu.org/sources.list.d/$(lsb_release -cs).list --output-document=/etc/apt/sources.list.d/medibuntu.list

sudo apt-get -q update

sudo apt-get --yes -q --allow-unauthenticated install medibuntu-keyring

sudo apt-get -q update

Crash reports பதிவு செய்வதற்கு

sudo apt-get --yes install app-install-data-medibuntu apport-hooks-medibuntu

பின்னர் கீழ்கண்ட கட்டளையை டெர்மினலில் தட்டச்சு செய்தால் codecs நிறுவப்பட்டு விடும்.

sudo apt-get install w32codecs libdvdcss2

Monday, October 17, 2011

உபுண்டு 11.10

உபுண்டு 11.10 சில நாட்களுக்கு முன் வெளியாகிஉள்ளது. இதன் code name oneiric ocelot என்பதாகும். இதனை பற்றி ஒரு பார்வை இப்போது பார்க்கலாம்.

இதனை என்னுடைய மடிக்கணினியில் நிறுவியவுடன் முதலில் தமிழ் தட்டச்சு எப்படி என்பது பற்றித்தான் யோசித்தேன். Scim முறை இதில் சரிப்பட்டு வரவில்லை. 11.04ல் கூட சரியாக வரவில்லை.

இதற்கேன எனக்கு உதவியது மு.மயுரன் என்பவர் எழுதிய பதிவுதான். இதை பயன்படுத்தி தமிழில் ஒலிப்பியல் முறையில் தட்டச்சு செய்ய முடிந்தது. அவர் ibus என்ற முறையில் தமிழ் தட்டச்சு பற்றி எழுதியிருந்தார். அதுவே எனக்கு உதவியது. இதோ அதற்கான சுட்டி. அவருக்கு என் நன்றிகள் .

இதன் மேசை கீழ்கண்ட படத்தில் உள்ளதுபோல் இருக்கும்.


இந்த பதிப்பில் libre office புதிய பதிப்பை சேர்த்திருக்கிறார்கள்.


நெருப்பு நரி 7.0.1 புதிய பதிப்புடன் வந்திருக்கிறது.



Evalaution mailக்கு பதிலாக thunderbirdனை சேர்த்திருக்கிறார்கள்.


விஎல்சி போன்றவைகூட புதிய பதிப்பில் இருக்கிறது.


இதனுடைய software center புதிய வடிவில் இருக்கிறது.

Rhythamboxற்க்கு பதில் Banshee சேர்த்திருக்கிறார்கள்.

shutdown பொத்தானில் system update,printers,system settings,display போன்றவற்றை சேர்த்திருக்கிறார்கள்.

மேலும் இதில் உள்ள நிறுவப்பட்ட நிரல்களை காண மேலே இடது மூலையில் சொடுக்க கீழ்கண்ட வாறு திரை வரும். அதில் நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.



எனவே இந்த பதிப்பு அனவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Wednesday, September 28, 2011

உபுண்டு பற்றி CNN-IBN தொலைக்காட்சியில் ஒரு விவாதம்

உபுண்டுவை பற்றி இந்திய செய்தி தொலைக்காட்சியில் ஒரு விவாதம். கீழ்கண்ட வீடியோவை பார்க்கவும்.




மேற்கண்ட வீடியோ சுமார் 22 நிமிடங்கள் ஒடக்கூடியது. 15வது நிமிடத்திலிருந்து உபுண்டுவைப்பற்றிய உரையாடல் தொடங்குகிறது.

Thursday, September 22, 2011

உபுண்டுவில் இரண்டு கணினிகளுக்கிடையே சாட் செய்ய

உபுண்டுவில் நெட்வோர்க் மூலம் இணைக்கப்பட்ட இரண்டு கணினிகளுக்கிடையே சாட் செய்ய முடியும். இதற்கான நிரல் ஏற்கனவே உபுண்டுவில் நிறுவப்பட்டு இருக்கும். அப்படியில்லை என்றால் synaptic package manager மூலம் நிறுவிக்கொள்ளலாம்.



முதலில் முதலாம் கணினி டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையினை தட்டச்சு செய்ய வேண்டும்.

nc -l 55555

பின்னர் இரண்டாம் கணினி டெர்மினலில் முதலாம் கணினியின் ஐபி முகவரியினை கீழ்கண்டவாறு தட்டச்சு செய்ய வேண்டும்.

nc 192.168.1.2 55555

இதில் 55555 என்பது கணினியின் போர்ட் எண்ணாகும்.

இப்போது டெர்மினலில் தட்டச்சு செய்து எண்டட் கீயை அழுத்த இரண்டாம் கணினி திரையில் தெரியும்.



இங்கு சொல்லப்பட்ட இரண்டு கணினிகளும் wifi மூலம் இணைக்கப்பட்டது.

Sunday, September 18, 2011

உபுண்டுவில் இரண்டு கணினி ஒரு அச்சு இயந்திரம்.

உபுண்டுவில் இரண்டு கணினி ஒரு அச்சு இயந்திரம் எப்படி இணைப்பது என்பது பற்றி பார்க்கலாம்.

என்னிடம் ஒரு மேசை கணினி, ஒரு HP 530 மடிக்கணினி wifi வசதி உள்ளது மற்றும் ஒரு HP Desktop F4288 ஆகிய மூன்றையும் ஒரு wifi வசதியுள்ள bsnl modem உதவியுடன் இணைக்கலாம்.

முதலில் மடிக்கணினியையும் அச்சு இயந்திரத்தையும் இணைத்தேன். அச்சு இயந்திரத்திற்கு உபுண்டுவிலேயே டிரைவர் உள்ளதால் தானாகவே இணைந்து கொண்டது.இதனை system->printing சென்றால் காணலாம்.


பின்னர் system->printing->server->settings செல்ல வேண்டும். இதில் show printers shared by other systems, publish shared printers connected to this system, allow printing from the internet, allow remote administration போன்றவைகளில் டிக் செய்து ok பொத்தானை அழுத்த வேண்டும்.


இந்த கணினியின் ip முகவரி network manager iconஇல் கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் connection information ல் தெரிந்து கொள்ளலாம்.



இப்போது இந்த அச்சு இயந்திரத்தில் test pageனை எடுத்து பார்த்துக்கொள்ளலாம்.



இப்போது சற்று தொலைவில் உள்ள மேசை கணினியினை எப்படி இணைப்பது என்று பார்க்கலாம்.

இதிலும் system->printing->server->settingsனை முன்னர் குறிப்பிட்டது போலவே அமைத்துகொண்டாலே அச்சு இயந்திரம் இணைந்துவிடும்.


அப்படியில்லை என்றால் add பொத்தானை அழுத்தி வரும் விண்டோவில் internet printing protocol என்பதனை தேர்ந்தெடுத்து வலது புறம் உள்ள விண்டோவில்

host என்பதில் 192.168.1.3:631/printers/Deskjet-F4200-series என்று தட்டச்சு செய்ய வேண்டும்.

இதில் அச்சு இயந்திரம் எந்த கணினியுடன் இணைந்திருக்கிறதோ அதன் ip முகவரியினை கீழ்கண்டவாறு தர வேண்டும்.

பின்னர் forward பொத்தானை அழுத்த அச்சு இயந்திரம் தயாரகிவிடும். இரண்டு கணினியிலும் அச்சு இயந்திரத்தின் டிரைவர்கள் இருக்க வேண்டும்.


இப்போது மேசைக்கணினியிலும் அச்சு இயந்திரம் செயல்படுவதைப்பார்க்கலாம்.

Saturday, September 17, 2011

உபுண்டுவில் wifiஐ பயன்படுத்தி இரண்டு கணினிகளுக்கிடையே கோப்புகளை பகிர்தல்

உபுண்டுவில் இரண்டு கணினிகளுக்கிடையே கோப்புகளை பகிர wifi ஐ பயன்படுத்தாம். இதற்காக இரண்டு கணினிகளிலும் shared option உடைய அடைவுகள் இருக்க வேண்டும். ஒரு அடைவிற்கு shared option ஏற்படுத்துவது எளிதானது.

ஹோம் அடைவினுள் ஒரு அடைவினை ஏற்படுத்தியோ அல்லது ஏற்கனவே இருக்கும் ஒரு அடைவில் மீது கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் shared options என்று இருப்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.



மேலே உள்ள படத்தில் வருவது போல் விண்டோ வரும் அதில் share this folder என்பதை டிக் செய்திட வேண்டும். இப்போது service நிறுவவில்லை என்று செய்தி வரும். அதாவது samba நிரல் நிறுவவில்லை என்றால் இப்படி ஒரு செய்தி வரும். கூடவே install services என்று இருக்கும் பொத்தானை அழுத்தினால் நிரல் நிறுவப்பட்டுவிடும். அதேபோல் இன்னோரு கணினியிலும் நிறுவிக்கொள்ள வேண்டும்.

என்னுடையது ஒன்று மேசை கணினி மற்றது மடிக்கணினி. இரண்டிலும் அடைவுகளிலும் மேலே சொன்னது போல் shared option ஏற்படுத்திக்கொண்டேன்.



இப்போது Places->network சென்றால் கீழ்கண்டவாறு விண்டோ வரும்.



இதில் desk என்று இருப்பது மேசைகணினி மற்றது HP-53 என்று இருப்பது மடிகணினி ஆகும். இரண்டின் மீதும் கர்சரைவைத்து அழுத்த கடவுச்சொல் கேட்கும். இதில் கணினியின் கடவுச்சொல்லை கொடுக்க வேண்டும். இரண்டு கணினியும் மேசை மீது வந்துவிடும்.



நான் மேசைக்கணினியில் இருந்தாவாறு மடிக்கணியில் கோப்புகளை பகிர்ந்து கொண்டேன். இந்த வீடுகளிலும் கணினிகளை எளிதில் இணைத்துக்கொள்ளலாம்.

Thursday, September 8, 2011

உபுண்டுவில் defaultஆக உள்ள அடைவுகளை மாற்ற

உபுண்டுவில் default உள்ள அடைவுகளான downloads, music,videos போன்றவற்றை நம் விருப்பம் போல் மாற்றிக்கொள்ள முடியும்.

உதாரணமாக இணையத்திலிருந்து ஏதேனும் கோப்பினை தரவிறக்கும்போது Downloads என்ற அடைவினுள் சேமிக்கப்பட்டுவிடும். அவ்வாறில்லாமல் நம் விருப்பம் போல் அடைவினை உருவாக்கி அதில் சேமிக்க முடியும்.

Home அடைவினுள் ஒரு அடைவாக Down என்ற அடைவினை உருவாக்கினேன். இதனை default ஆக மாற்ற கீழ்கண்ட வழிமுறையினை பின்பற்றலாம்.


மேற்கண்ட படத்தில் அடைவு உருவாகி இருப்பதை காணலாம். மேலும் view->show hidden files சென்றால் அதில் மறைக்கப்பட்ட அடைவுகள் தெரிவதை காணலாம். அதில் .conig அடைவிற்கு சென்று அதில் user-dirs.dirs என்ற கோப்பினை திறந்துகொள்ள வேண்டும்.


கோப்பினை திறந்தால்


அதில் கீழ்கண்டவாறு வரிகள் இருக்கும்.

XDG_DESKTOP_DIR="$HOME/Desktop"
XDG_DOWNLOAD_DIR="$HOME/Downloads"
XDG_TEMPLATES_DIR="$HOME/Templates"
XDG_PUBLICSHARE_DIR="$HOME/Public"
XDG_DOCUMENTS_DIR="$HOME/Documents"
XDG_MUSIC_DIR="$HOME/Music"
XDG_PICTURES_DIR="$HOME/Pictures"
XDG_VIDEOS_DIR="$HOME/Videos"

இதில்

XDG_DOWNLOAD_DIR="$HOME/Downloads" என்பதற்கு பதிலாக
XDG_DOWNLOAD_DIR="$HOME/Down" என்று மாற்றிவிட்டால் போதும். தரவிறக்கப்படும் கோப்புகள் இந்த அடைவினுள் சேமிக்கப்படும்.


இதைப்போல் மற்ற அடைவுகளான video, pictures போன்ற அடைவுகளையும் நம் விருப்பம் போல் மாற்றிக்கொள்ளலாம்.

Tuesday, September 6, 2011

உபுண்டுவில் டெர்மினலில் நாம் தட்டச்சு செய்த கட்டளைகளை மறைக்க

உபுண்டு டெர்மினலில் சிலசமயம் நாம் சில கட்டளைகளை தட்டச்சு செய்து பயன்படுத்தி இருப்போம். அவற்றை பார்க்க டெர்மினலில் arrow விசையை கொண்டு மேலும் கீழும் நகர்த்தி பார்க்கலாம்.

இந்த கட்டளைகளை மறைக்க டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.

#stty -echo


இப்போது arrow விசையை மேலும் கீழும் அசைத்தால் எந்த ஒரு கட்டளையும் வராது.

மீண்டும் டெர்மினலில் கட்டளைகள் தெரிய கீழ்கண்ட வரியினை தட்டச்சு செய்ய வேண்டும்.

#stty echo