Pages

Sunday, November 29, 2009

உபுண்டுவில் புகைப்படங்களை பெரிதாக அச்சு எடுத்தல்

உபுண்டுவில் நம்முடைய புகைப்படங்களை அளவில் பெரியதாக அச்சுஎடுக்க முடியும். இதற்கு உதவுவது தான் PosteRazor என்ற நிரல் பயன்படுகிறது. இதை நிறுவுவதற்கு

Applications->Ubuntu software center சென்று PosteRazor தெர்ந்தெடுத்து நிறுவிகொள்ளவேண்டும்.
பின்னர்

Applications->Graphics->PosteRazor



மேலே உள்ள படத்தில் settings தெர்வு செய்து படங்களின் அளவுகளை தெர்வு செய்யலாம்.

இதில் நமக்கு வேண்டிய அளவுகளை தெர்ந்தேடுத்துக் கொள்ளலாம்.

input image தெர்வு செய்து அச்சுஎடுக்கும் படத்தினை தெர்வு செய்யவேண்டும்.



next அழுத்தினால் அடுத்த விண்டொ விரியும்.

இங்குதான் நமக்கு வேண்டிய அளவுகளை நாம் தரவேண்டும்.

paper formatன் கீழ் இரண்டு option இருக்கும். இதில் standardல் landscap அல்லது portrait தெர்ந்தேடுக்கவேண்டும்.

custom ல் நீளம், அகலம் நாமே நமக்கு தேவையான அளவுகளை கொடுக்கலாம்.




மேலே உள்ள விண்டொவில் படம் பலபிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கும். image sizeன் கீழ் absolute size, size in pages, size percentல் நமக்கு வேண்டிய அளவுகளை கொடுத்து கொள்ளலாம். பின்னர் next அழுத்தினால்.



மேலே உள்ள படத்தில் save the posterன் கீழ் இருக்கும் பகுதியில் அழுத்தினால் கோப்பு செமிக்கப்படும்.

pdf வடிவில் கோப்பு செமிக்கப்படும். பின்னர் adobe pdf அல்லது document viewverல் கோப்பை திறந்து நாம் அச்சு எடுத்துகொள்ளலாம். பல பக்கங்களை உடைய கோப்பாக இருக்கும். அச்சுஎடுத்து பின்னர் சேர்த்து கொள்ளலாம்.

Friday, November 27, 2009

உபுண்டுவில் winff gui video converter

உபுண்டுவில் winff என்ற நிரல் gui வீடியோ மாற்றியாக பயன்படுத்தக்கூடிய ஒரு மென்பொருள். இந்த நிரலை நிறுவுவதற்கு

Applications->ubuntu software center

இதில் பல்வேறு வீடியோ மற்றும் ஆடியோ க்களின் வடிவங்களை மாற்றலாம்.


எந்தவிதமான codecக்களின் துணையுமின்றி மாற்றலாம். இதில்
add பொத்தனை அழுத்தி வீடியோ கோப்புக்களை அல்லது ஆடியோ கோப்புகளை இணைக்கலாம். remove பொத்தனை அழுத்தினால் சேர்க்கப்பட்ட கோப்புகளை நீக்கலாம்.
play பொத்தனை அழுத்தினால் வீடியோ கோப்புகளை பார்க்கலாம்.
convert அழுத்தினால் வீடியோ நாம் விரும்புக் வடிவில் மாற்றமடையும்.




output detailsன் கீழ்
conver to வில் நாம் விரும்பும் formatஐ தேர்ந்தேடுக்கலாம்.
device presetல் ntsc அல்லது pal தேர்ந்தேடுக்கலாம்.
output folder ல் நாம் விரும்பும் இடத்தில் கோப்புகளை செமிக்கலாம்.

options பொத்தனை அழுத்தினால் additional option வரும் இதில் நாம் விரும்பும் வீடியோ அல்லது ஆடியோ க்களை bitrate, framesize, framerate நம் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.
பின்னர்

Edit->Preference



இங்கு default folder நம் விருப்பதிற்கேற்ப மாற்றி அமைக்கலாம். பின்னர் linux சென்றால் அங்கு முக்கியாமன நிரலை இயக்ககூடிய கோப்புகள் அமைந்திருக்கும்.


நம்முடைய கைபேசிக்கேன வடிவங்களையும் இந்த நிரலை பயன்படுத்தி மாற்றிக்கோள்ளலாம்.

Tuesday, November 24, 2009

உபுண்டுவில் sound converter

உபுண்டுவில் sound converter என்பது நம்மிடம் இருக்கும் mp3 பாடல்களை ogg formatக்கு மாற்ரிக் கொள்ளலாம். mp3 என்பது விலை கொடுத்து வாங்ககூடியது. ஆனால் ogg format அப்படியல்ல. சுதந்திரமான கட்டற்ற format.

இந்த நிரலை நிறுவுவதற்க்கு ubuntu software centerக்கு சென்று நிறுவிக்கொள்ளலாம். பின்னர்


Applications->Sound & video->Sound converter தெர்வு செய்தால் நிரல் வேலை செய்ய துவங்கும்.


இதில் add file பொத்தனை அழுத்தி mp3 கோப்புகளையோ அல்லது ogg கோப்பையோ தேர்வு செய்யலாம்.


பின்னர் convert பொத்தனை அழுத்தினால் கோப்பு மாறதுவங்கும்.

இதில் mp3,ogg,flv & wmv ஆகிய கோப்புகளிடையே மாற்ரிக்கொள்ளலாம். mp3 கோப்பாக மாறுவதற்க்கு lame plugin தேவை.இது ஒரு எளிமையான மென்பொருள். lame plugin நிறுவுவதற்கு நிரலிலேயே வழி இருக்கிறது.

Sunday, November 22, 2009

உபுண்டு 9.10 dual panel nautilus file manager

உபுண்டுவில் dual panel nautilus file managerஐ நிறுவலாம்.



இதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

வழிமுறை 1:

மூன்று .deb கோப்புகளை தரவிறக்க வேண்டும்.

1.https://launchpad.net/%7Eberndth/+archive/ppa/+files/libnautilus-extension1_2.28.1-0ubuntu3%7Ehb1%7Ekarmic1_i386.deb
2.nautilus-data_2.28.1-0ubuntu3%7Ehb1%7Ekarmic1_all.deb
3.nautilus_2.28.1-0ubuntu3%7Ehb1%7Ekarmic1_i386.deb

மேற்கண்ட மூன்று நிரல்களையும் பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவேண்டும். பின்னர் டெர்மினலில்

killall nautilus && nautilus & என்று தட்டச்சு செய்யவேண்டும்.பின்னர் F3 பொத்தனை அழுத்தவேண்டும்.

வழிமுறை 2.

software source listல் ppa சேர்த்தும் நிறுவலாம்.கீழ்கண்ட சுட்டியில் விளக்கம் பெறலாம்.

இங்கே அழுத்தவும்

டெர்மினலில் sudo apt-get update என்று தட்டச்சு செய்து update செய்ய வேண்டும்.




Saturday, November 21, 2009

உபுண்டு 9.10ல் bluetooth வழியாக screen locking/unlocking

உபுண்டுவில் ஏதேனும் வேலை செய்துகொண்டிருக்கும்போது அவசரகாரணமாக சிறிது நேரம் வேறு வேலை பார்க்கவேண்டியிருந்தால் shoutdown அல்லது hibernate செய்துவிட்டு போவோம். ஆனால் இந்த நிரல் மூலம் தானாகவே screen lock ஆகிவிடுமாறு அமைக்கலாம்.


Applications->ubuntu software center சென்று Blueproximity என்ற நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்







இந்த நிரலை நிறுவியவுடன் நம்முடைய கைபேசியிலுள்ள bluetooth ஐ ஆன் செய்து கணினியிலுள்ள bluetooth ற்க்கு இணைப்பை ஏற்படுத்தவேண்டும்.

பின்னர் Applications->Accessories->Blueproximity

இதில் bluetooth deviceஐ scan for devices மூலம் தேடினால் நம்முடைய கைபேசியிலுள்ள bluetooth device கணினியில் வந்துவிடும்.

use selected device தேர்வு செய்துகொள்ளவேண்டும். பின்னர் proximity details ஐ தேர்வு செய்யவேண்டும்.



இதில் locki ng/unlockingல் தூரம் மற்றும் நேரம் ஆகியவற்றை தெர்வு செய்யவேண்டும்.Measure atm தானாகவே செலக்ட் செய்துகொள்ளும்.

பின்னர் locking சென்று கட்டளைகளை இடவேண்டும்.


இங்கு logging கீழ் syslogல் local7க்கு பதிலாக 'user' என்பதனை தெர்வு செய்துகொள்ளவேண்டும். பின்னர் file என்பதில் டிக் செய்துவிட்டு நாம் விரும்பும் கோப்பின் பெயரை கொடுத்தால் log பதிவாகும். கணினியில் bluetooth இல்லையென்றால் ஒரு usb bluetooth dongle வாங்கிகூட பயன்படுத்தலாம்.
நாம் proximity detailsல் குறிப்பிட்ட தூரத்திற்க்கு மேல் கைபேசியிடன் சென்று விட்டால் screen lock ஆகிவிடும்.

Thursday, November 19, 2009

உபுண்டு 9.10 gnome display manager 2.28லிருந்து 2.20 க்கு கீழிறக்குதல்

உபுண்டு 9.10ல் gnome display manager (gdm) 2.28ஆக இருக்கும். இதை 2.20 ஆக தரம் இறக்கலாம். காரணம் 2.28 இன்னுமும் முழுமையடவில்லை.

குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் கணியின் இயங்கு தளத்தை பாதித்துவிடும் அபாயம் இருப்பதால் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

முதலில் டெர்மினலில்

#sudo /etc/init.d/gdm stop என்று தட்டச்சு செய்தால் கணினி login செய்யசொல்லும். user name and password கொடுத்து login செய்யவேண்டும்.

மீண்டும் gdm கொண்டுவர டெர்மினலில்

#sudo gdm என்று தட்டச்சு செய்தால் பழைய நிலை வந்துவிடும்.

gdm 2.20 நிறுவ

#sudo apt-get install gdm-2.20 என்று தட்டச்சு செய்தால் நிரல் நிறுவப்பட்டுவிடும்.

இதனால் 2.28லிருந்து 2.20ஆக குறைந்து விடும். பின்னர் gdm.conf கோப்பை சரிசெய்ய கீழ்கண்ட கட்டளையிடவேண்டும்.

sudo sed ’s|X11R6/||’ gdm.conf >/tmp/gdm.conf

sudo mv /tmp/gdm.conf . இங்கு .conf அடுத்து '.' வைக்கவேண்டும்.

மீண்டும் gdm தொடங்க

#sudo gdm தட்டச்சு செய்யவேண்டும்.

Wednesday, November 18, 2009

உபுண்டு 9.10ல் bsc beesoft commander) கோப்புகளை கையாளும் நிரல்

உபுண்டு 9.10ல் bsc (beesoft commander) கோப்புகளை கையாளும் நிரல்

உபுண்டு 9.10 ல் bsc (beesoft commander) கோப்புகளை கையாளுவதற்கான நிரல். இது gui வகை நிரல் ஆகும். இரண்டு panel களில் கோப்புகள் தெரியும். இதனால் கோப்புகளை கையாளுவது எளிதாகிறது.
  • காப்பி,பேஸ்ட், நகர்த்துதல், பெயர் மாற்றுதல், கோப்புகளை தனியாகவோ மொத்தமாகவோ அல்லது folder ஆகவோ
  • கோப்பின் தன்மையை மாற்றலாம்.
  • கோப்பில் உள்ளதை எடிட் செய்யலாம்.பார்வையிடலாம்.
இந்த நிரலை நிறுவ

Applications->ubuntu software center சென்று நிறுவிக்கொள்ளலாம்.

நிறுவியபின்

Applications->Accessories->bsc சென்று நிரலை இயக்கலாம்.

இதில் system,operations,language,help என்று மெனு உள்ளது. இதை பயன்படுத்தி நம்முடைய கோப்புகளை எளிதில் கையாள முடியும்.

Tuesday, November 17, 2009

உபுண்டு 9.10க்கு மேம்படுத்தும் போது விஎல்சி சரிசெய்ய

உபுண்டு 9.10 மேம்படுத்தும் போது vlc சிலசமயங்களில் சரிவர வேலை செய்யாது. அப்போது கீழ்கண்ட சில வழிமுறைகளை கையாண்டு சரிசெய்யலாம்.

வழிமுறை 1.

டேர்மினலில் கீழ்கண்ட கட்டளையிட்டால் சரிசெய்யலாம்.

#sudo apt-get install libavcodec52

வழிமுறை 2.

ubuntu-restricted-extras நிறுவப்பட்டுள்ளதா என்று உறுதி செய்துகொள்ளவேண்டும். இல்லையேனில்

#sudo apt-get install ubuntu-restricted-extras என்று டேர்மினலில் தட்டச்சு செய்து நிறுவி கொள்ளவேண்டும்.

வழிமுறை 3.

mediubunt resipo வை செயலிழக்க செய்யப்பட்டதை உறுதி செய்து கொள்ளவேண்டும். பின்னர் டெர்மினலில்
#sudo apt-get remove --purge ffmpeg gstreamer0.10-ffmpeg gstreamer0.10-fluendo-mp3 gstreamer0.10-plugins-ugly liba52-0.7.4 libavcodec52 libavformat52 libavutil49 libdvdnav4 libdvdread4 libgsm1 libid3tag0 libmad0 libmpeg2-4 libpostproc51 libschroedinger-1.0-0 libsidplay1 libswscale0 libtwolame0 ubuntu-restricted-extras libavcodec52 libavformat52 libswscale0 libvlc2 libvlccore2 vlc vlc-data vlc-nox vlc-plugin-pulse
என்று தட்டச்சு செய்து எல்லவகையான codeக்களையும் அழித்துவிடவும்.

பின்னர் டெர்மினலில்

#sudo apt-get install ubuntu-desktop நிறுவி கொள்ளவேண்டும். ஏனெனில் இந்த நிரல் அழிக்கப்பட்டுஇருக்கும்.

பின்னர் கணினியை மீளதுவக்கி டெர்மினலில்

#sudo apt-get install ubuntu-restricted-extras என்று நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.

வழிமுறை 4.

mediubuntu repo வை செயலிழக்க செய்யவேண்டும்.
#sudo apt-get --purge remove libx264-67 என்று தட்டச்சு செய்து குறிப்பிட்ட கோப்பை அழித்து மீண்டும் அதே கோப்பை நிறுவிக்கொள்ளவேண்டும்.

வழிமுறை 5

பின்வரும் கட்டளையை டெர்மினலில் தட்டச்சு செய்யவேண்டும்.
#sudo apt-get remove smplayer
#sudo apt-get remove mplayer
#sudo apt-get remove libx264-67 –purge
#sudo apt-get install libx264-67
#sudo apt-get install smplayer
#sudo apt-get install mplayer
#sudo apt-get install vlc

மேற்கண்ட முறைகளினால் விஎல்சி வேலை செய்ய துவங்கும்.

Monday, November 16, 2009

உபுண்டுவில் bluetooth

உபுண்டுவில் bluetooth பயன்படுத்திப்பார்க்க வேண்டுமென்ற ஆசை நேற்றுதான் நிறைவேறியது. நேற்று மாலையில் தான் ஒரு bluetooth dongle வாங்கி வீட்டில் உள்ள கணினியில் பொருத்தினேன். நன்றாக வேலை செய்தது.

Frentech என்ற பெயருடைய இந்த bluetooth dongle என்னுடைய இரண்டும் செல்பேசிகளிலும் இணைந்தது.
இதற்காக ubuntu software centre சென்று bluetooth manager என்ற நிரலை நிறுவிக்கொண்டேன்.
default ஆக இருந்த நிரல் வேலை செய்யவில்லை. நிரல் வேலை செய்ய ஆரம்பித்ததும் டாப் பேனலில் அமர்ந்துகொண்டது.


என்னுடைய இரண்டு செல்பேசிகளில் bluetooth on செய்து போது இரண்டும் நன்றாக வேலை செய்தது.


பின்னர் bluetooth ஐ இயக்கியபோது.

மேற்கண்ட நிரலில் புதியதாக ஒன்றையும் search செய்யலாம். இதிலுருந்தபடியே இணையத்திற்கு இணைப்பு கொடுக்கலாம்.

blutooth icon ல் ரைட் கிளிக் செய்தால் செல்பேசிகளில் browse செய்து பார்க்கலாம். கோப்புகளை பரிமாறிக்கொள்ளலாம்.
கணினியிலுருந்து செல்பேசிக்கு



செல்பேசியிலிருந்து கணினிக்கு
mobile broadband

இது செல்பேசியில் இனைய உலாவியபோது எடுத்தது. புதியாதாக வேறு ஒன்றையும் நிறுவிக்கொள்ளலாம்.
விலையும் அதிகமில்லை. வெறும் 250 ரூபாய்தான் ஆனது.

Friday, November 13, 2009

உபுண்டு openoffice 3.1ல் தமிழ் இடைமுகப்பு

உபுண்டு openoffice3.1 ல் தமிழ் இடைமுகப்பு

இதற்காக உபுண்டுவில் தமிழ் மொழி support நிறுவி கொள்ளவேண்டும்.

System->Administration-Language support சென்றால் தேவையான மொழிகளின் package களை நிறுவிகொள்ளவேண்டும். நிறுவப்படும்போது openoffice க்கு தேவையான தமிழ் மொழியும் கூட நிறுவப்பட்டுவிடும். பின்னர்

Application->Office->Openoffice.org word processor ஐ தேர்ந்தெடுத்து கொள்ளவேண்டும். word கோப்பு திறந்தவுடன் அதில் Tools->options பகுதிக்கு செல்ல வேண்டும்.


பின்னர் Language Settings->Language

இங்கு நமக்கு வேண்டிய settings மாற்றிக்கொள்ளலாம்.

Language ofன் கீழ் User interface->Tamil , Locale settings->Tamil ஆகிய இரண்டையும் படங்களில் உள்ளவாறு மாற்றிக்கொள்ளவேண்டும்.

பின்னர் ok பொத்தனை அழுத்தினால்

openofficeஐ மீண்டும் துவங்க சொல்லும். மீண்டும் துவங்கியப்பின்

மீண்டும் ஆங்கிய இடைமுகப்பு வேண்டுமென்றால் language settings போய் மாற்றிக்கொள்ளவேண்டும்.

Thursday, November 12, 2009

உபுண்டு 9.10 vlc with imagination slideshow

உபுண்டு 9.10 vlc பலவித effectக்கள் நாம் பார்க்கலாம். இந்த வீடியோவில் முதலில் வரும் slideshow எவ்வாறு settings அமைத்திருப்பதை காட்டும். அதை தொடர்ந்து வரும் slide, settings எவ்வாறு அமைத்திருக்கிறோமோ அதை சார்ந்து வருவது. இந்த settings செய்ய
Applications->sound & video->VLC mediaplayer சென்று tools->Effects & filters தேர்வு செய்தால் நாம் விருபியவாறு அமைத்துகொள்ளலாம்.

imagination என்ற நிரல் ubuntu software centerல் உள்ளது. தரவிறக்கி பயன்படுத்தலாம்.

Wednesday, November 11, 2009

உபுண்டு 9.10ல் skype

உபுண்டு 9.10ல் skype

உபுண்டு 9.10 http://www.skype.com/download/skype/linux/choose இந்த சுட்டியில் போய் skype ubuntu 8.10+ ல் 32 அல்லது 64 நம்முடைய கணினிக்கு ஏற்றவாறு தரவிறக்கி நிறுவிக்கோள்ளவேண்டும். பின்னர்

Applications->Internet->Skype தேர்ந்தெடுத்தால் skype வேலை செய்ய ஆரம்பிக்கும்.


ஆடியோ மற்றும் வீடியோ settings கீழ்வரும் படங்களில் உள்ளது.


test call செய்தால் நன்றாக வருகிறது. நம்முடைய குரல் நமக்கு தெளிவாக கேட்கிறது. இதற்காக கணினியின் sound system கீழ்கண்டவாறு அமைத்துக் கொள்ளலாம்.



skypeல் மேலே கண்டவாறு அமைத்துக்கொண்டால் நன்றாக உள்ளது.