உபுண்டுவில் ஏதேனும் வேலை செய்துகொண்டிருக்கும்போது அவசரகாரணமாக சிறிது நேரம் வேறு வேலை பார்க்கவேண்டியிருந்தால் shoutdown அல்லது hibernate செய்துவிட்டு போவோம். ஆனால் இந்த நிரல் மூலம் தானாகவே screen lock ஆகிவிடுமாறு அமைக்கலாம்.
Applications->ubuntu software center சென்று Blueproximity என்ற நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்
இந்த நிரலை நிறுவியவுடன் நம்முடைய கைபேசியிலுள்ள bluetooth ஐ ஆன் செய்து கணினியிலுள்ள bluetooth ற்க்கு இணைப்பை ஏற்படுத்தவேண்டும்.
பின்னர் Applications->Accessories->Blueproximity
இதில் bluetooth deviceஐ scan for devices மூலம் தேடினால் நம்முடைய கைபேசியிலுள்ள bluetooth device கணினியில் வந்துவிடும்.
use selected device தேர்வு செய்துகொள்ளவேண்டும். பின்னர் proximity details ஐ தேர்வு செய்யவேண்டும்.
இதில் locki ng/unlockingல் தூரம் மற்றும் நேரம் ஆகியவற்றை தெர்வு செய்யவேண்டும்.Measure atm தானாகவே செலக்ட் செய்துகொள்ளும்.
பின்னர் locking சென்று கட்டளைகளை இடவேண்டும்.
இங்கு logging கீழ் syslogல் local7க்கு பதிலாக 'user' என்பதனை தெர்வு செய்துகொள்ளவேண்டும். பின்னர் file என்பதில் டிக் செய்துவிட்டு நாம் விரும்பும் கோப்பின் பெயரை கொடுத்தால் log பதிவாகும். கணினியில் bluetooth இல்லையென்றால் ஒரு usb bluetooth dongle வாங்கிகூட பயன்படுத்தலாம்.
நாம் proximity detailsல் குறிப்பிட்ட தூரத்திற்க்கு மேல் கைபேசியிடன் சென்று விட்டால் screen lock ஆகிவிடும்.
Saturday, November 21, 2009
உபுண்டு 9.10ல் bluetooth வழியாக screen locking/unlocking
லேபிள்கள்:
bluetooth
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment