Pages

Thursday, November 19, 2009

உபுண்டு 9.10 gnome display manager 2.28லிருந்து 2.20 க்கு கீழிறக்குதல்

உபுண்டு 9.10ல் gnome display manager (gdm) 2.28ஆக இருக்கும். இதை 2.20 ஆக தரம் இறக்கலாம். காரணம் 2.28 இன்னுமும் முழுமையடவில்லை.

குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் கணியின் இயங்கு தளத்தை பாதித்துவிடும் அபாயம் இருப்பதால் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

முதலில் டெர்மினலில்

#sudo /etc/init.d/gdm stop என்று தட்டச்சு செய்தால் கணினி login செய்யசொல்லும். user name and password கொடுத்து login செய்யவேண்டும்.

மீண்டும் gdm கொண்டுவர டெர்மினலில்

#sudo gdm என்று தட்டச்சு செய்தால் பழைய நிலை வந்துவிடும்.

gdm 2.20 நிறுவ

#sudo apt-get install gdm-2.20 என்று தட்டச்சு செய்தால் நிரல் நிறுவப்பட்டுவிடும்.

இதனால் 2.28லிருந்து 2.20ஆக குறைந்து விடும். பின்னர் gdm.conf கோப்பை சரிசெய்ய கீழ்கண்ட கட்டளையிடவேண்டும்.

sudo sed ’s|X11R6/||’ gdm.conf >/tmp/gdm.conf

sudo mv /tmp/gdm.conf . இங்கு .conf அடுத்து '.' வைக்கவேண்டும்.

மீண்டும் gdm தொடங்க

#sudo gdm தட்டச்சு செய்யவேண்டும்.

No comments: