உபுண்டு 9.10ல் IPv6ஐ disable செய்வது இரு வழிகளில் செய்யமுடியும்.
1.எளிமையான வழி இது firefox மூலம் செய்யமுடியும்.
firefoxன் address barல் about:config என்று தட்டச்சு செய்தால் வரும் விண்டோவில் search boxல்
network.dns.disableIPv6 என தட்டச்சு செய்யவேண்டும். பின்னர் அதன் valueவை 'True' ஆக மாற்ற வேண்டும்.
2.சற்று கடினமான வழி. மிகவும் கவனமாக செய்யவேண்டும். இல்லையன்றால் கணினி boot ஆகாது.
#sudo gedit /etc/default/grub என்ற கோப்பினை திறந்து கொள்ளவேண்டும். பின்னர் அந்த கோப்பில்
GRUB_CMDLINE_LINUX என்ற வரியை தேடி கண்டுபிடித்து அந்த வரியை கீழ்கண்டவாறு மாற்றம் செய்யவேண்டும்.
GRUB_CMDLINE_LINUX="ipv6.disable=1" அந்த கோப்பினை சேமித்துகொள்ளவேண்டும்.
இதன் பின்னர் டெர்மினலில்
#sudo update-grub2 என்று தட்டச்சு செய்து grub2 வை update செய்யவேண்டும்.
grub2 இல்லாவிட்டால்
#sudo update-grub என்று தட்டச்சு செய்யவேண்டும். பின்னர் கணினியை restart செய்யவேண்டும்.
Monday, November 9, 2009
உபுண்டு 9.10ல் IPv6 disable செய்வது எப்படி
லேபிள்கள்:
ubuntu9.10
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
உபுண்டு 9.10ல் என்னுடைய ubuntu software centre வேலை செய்யவில்லை. எதாவது அப்ளிகேசனை நிறுவுவதற்காக இன்ஸ்டலேசன் பொத்தானை அழுத்தும் போது அது எந்த செயலையும் செய்வதில்லை. அப்படியே நிற்கிறது (அரை மணி நேரத்துக்கு மேலாகவும்.) என்ன செய்யலாம்?
it is good that you have added tamilish button and made one post per page. but you will not reply to my mail
//உபுண்டு 9.10ல் என்னுடைய ubuntu software centre வேலை செய்யவில்லை. எதாவது அப்ளிகேசனை நிறுவுவதற்காக இன்ஸ்டலேசன் பொத்தானை அழுத்தும் போது அது எந்த செயலையும் செய்வதில்லை. அப்படியே நிற்கிறது (அரை மணி நேரத்துக்கு மேலாகவும்.) என்ன செய்யலாம்?//
வாருங்கள் சுப.தமிழினியன் உபுண்டு software centre வேலை செய்யாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.முதலில் இணைய இணைப்பை சரிபார்க்கவும்.பின்னர் டெர்மினலில் sudo agt-get update என்று தட்டச்சு செய்து பார்க்கலாம். Synaptic package manager சென்று reload பண்ணி பார்க்கவும். எதற்கும் software centre சென்று எல்ல software source களும் சரியாக இருக்கிறத என்று பார்க்கவும்.
//It is good that you have added tamilish button and made one post per page. but you will not reply to my mail//
வாருங்கள் shridi saidasan
நன்றி. mailஐ திரும்ப அனுப்ப முடியுமா?
தமிழில் இப்படி ஒரு தளத்தைக் காண மகிழ்ச்சி.
நீங்களும் நண்பர்களும் TamilFOSS தளத்தில் பங்கு கொண்டு உதவினால் நன்றாக இருக்கும். நன்றி.
வாருங்கள் ரவிசங்கர் உங்கள் அழைப்பிற்கு நன்றி கூடிய விரைவில் உங்களுக்கு இதுபற்றி பதில் அளிக்கிறேன்.
Post a Comment