உபுண்டு 9.10ல் grub2 defaultஆக அமைந்துள்ளது. இதில் தேவையான மாற்றம் செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.
முந்தைய பதிப்பில் உள்ளது போல் நேரிடையாக மாற்றம் செய்ய இயலாது. அதாவது
/boot/grub ல் சென்று மாற்றம் செய்ய முடியாது. 9.10ல் /boot/grub ல் இதன் கோப்பு
/boot/grub/grub.cfg என்று அமைந்திருக்கும். இது read only கோப்பாகும். இதில் திருத்தம் செய்தால் எதுவும் பதிவாகாது.
இதனால் இதன் இன்னொரு கோப்பான
/etc/default/grub என்ற ஒரு கோப்பில்தான் மாற்றங்கள் செய்யமுடியும்.
மேலே உள்ள படத்தில் கோப்பின் உள்ளடக்கம் உள்ளது. இதில் மாற்றங்கள் செய்துகொள்ளமுடியும்.
GRUB DEFAULT இதில் நமக்கு வேண்டிய osஐ முதலில் தொடங்கலாம்.
GRUB_TIMEOUTல் os தொடங்கும் நேரத்தை வினாடியில் அமைக்கலாம்.
எல்லா மாற்றங்களையும் செய்தபின் கோப்பினை செமித்துவிடவும்.
பின்னர் டெர்மினலில்
#sudo update-grub2 என்று தட்டச்சு செய்தால் grub2ல் default மற்றும் கால அளவு மாறியிருக்கும்.
Thursday, December 17, 2009
உபுண்டு 9.10 default மற்றும் கால அளவை மாற்ற
லேபிள்கள்:
grub2
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
I upgraded from 9.0 to 9.1. As you said the file is not available in /etc/default/grub. The file /boot/grub/menu.lst is available. Why this difference? I installed ubuntu windows version and dual boot...
உங்கள் வருகைக்கு நன்றி
புதியதாக நிறுவும் போதுதான் grub2 நிறுவப்படுகிறது. ஆனால் மேம்படுத்தும் போது grub 1.5 தான் உள்ளது. இதை என்பதிவில் எழுதவில்லை. மன்னிக்கவும்.சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
It is difficult to click a post link in your blog, because of the "Latest" gadget which is under Last time visit of visitors. If you remove this "Latest" gadget it will be very useful for the visitos, please...
Post a Comment