Pages

Friday, December 25, 2009

உபுண்டுவில் usb mount ஆகாமல் இருப்பதை சரி செய்ய

உபுண்டுவில் usb mount ஆகாமல் இருப்பதற்கு அல்லது usb detect செய்யாமல் போவதற்கான சில தீர்வுகள்.

நீங்கள் உபுண்டு 9.04 பயன்படுத்துபவராக இருந்தால். டெர்மினலில்

#sudo gedit /boot/grub/menu.lst என்று தட்டச்சு செய்தால் menu.lst கோப்பு திறக்கும். அதில்

#defoptions=quiet splash என்ற வரிகளை தேடி அந்த வரிகளுக்கு பதிலாக கீழ்கண்டவாறு அமைத்துகொள்ளவேண்டும்.

# defoptions=quiet splash acpi=force irqpoll

பின்னர் டெர்மினலில்

#sudo update-grub என்று தட்டச்சு செய்தால் grub menu.lst ல் நாம் சரிசெய்த வரிகள் சேர்ந்துவிடும்.

நீங்கள் உபுண்டு 9.10 பயன்படுத்துபவர்களாக இருந்தால் டெர்மினலில்

#sudo gedit /etc/default/grub என்று தட்டச்சு செய்தால் grub என்ற கோப்பு திறக்கும். அதில்

GRUB_CMDLINE_LINUX=”” என்ற வரியை கீழ்கண்டவாறு மாற்றிகோள்ளவேண்டும்.

GRUB_CMDLINE_LINUX="acpi=force irqpoll" என்றவாறு மாற்றி பின்னர் டெர்மினலில்

#sudo update-grub2 என்று கட்டளையிட்டால் grub update ஆகிவிடும்.


No comments: