Pages

Friday, December 18, 2009

உபுண்டு 9.10 grub2வில் விண்டோ மற்றும் os களை சேர்த்தல்

உபுண்டு 9.10 grub2வில் விண்டோ மற்றும் வேறு சில osகளை நாம் manualஆக சேர்க்கலாம்.
இதற்கு நேரிடையாக /boot/grub.cfgல் சேர்க்க முடியாது. /etc/grub.d/ என்ற அடைவினுள் இருக்கும் 40_custom என்ற கோப்பில் தான் சேர்க்க முடியும். டெர்மினலில்

#sudo gedit /etc/grub.d/40_custom என்று தட்டச்சு செய்தால் கோப்பு திறக்கும்.

அதில் கீழ்கண்ட வரிகளை சேர்க்க வேண்டும்.

விண்டொஸை சேர்க்க
menuentry "Microsoft Windows XP Professional (on /dev/sda1)" {
insmod ntfs
set root=(hd0,1)
search --no-floppy --fs-uuid --set 3a387ed7387e921d
drivemap -s (hd0) ${root}
chainloader +1
}

வேறு ஏதேனும் osக்களையும் சேர்க்கலாம். நான் mandriva 2010 சேர்த்துள்ளேன்.

menuentry "Mandriva2010 (on /dev/sda3)" {
insmod ext2
set root=(hd0,3)
search --no-floppy --fs-uuid --set c9d1ca16-914d-458d-afbb-6835d04a7ea6
linux /boot/vmlinuz BOOT_IMAGE=linux-nonfb root=UUID=c9d1ca16-914d-458d-afbb-6835d04a7ea6 resume=UUID=3529d991-6e4e-4b3c-8f99-3a5f4dcecd64
initrd (hd0,3)/boot/initrd.img
}

இங்கு uuid=xxx என்பது அந்தெந்த கணினி வன்தட்டின் குறியீடு ஆகும். அதனால் இங்கு தரப்பட்டவை என்னுடைய கணினியுடைதாகும்.

விண்டொஸ் ஏற்கனேவெ நிறுவியிருந்தால் மீண்டும் சேர்க்க தேவையில்லை. தானாகவே சேர்ந்துகொள்ளும். வேறு லினக்ஸ் நிறுவியிருந்தால் நாம் சேர்த்துக்கொள்ளலாம். இங்கு hdo,3 என்பது லினக்ஸ் நிறுவிய வன்தட்டை குறிக்கும்.

முக்கியமாக /etc/grub.d/40_custom என்ற கோப்பினை மாற்றங்கள் செய்யுமுன் backup எடுத்துகொள்வது நல்லது.

/etc/grub.d/ என்ற அடைவினுள் பல கோப்புக்கள் இருக்கும்.

1.00_header
2.05_debian_theme இந்த கோப்பினுள் நம் விருப்பம் போல் text colour,theme அமைத்துக்கொள்ளலாம்.
3.10_linux இந்த கோப்பு linux kernalகளை கண்டறிய பயன்படுகிறது.
4.20_memtest86+ memory test செய்வதற்கு
5.30_os_prober லினக்ஸ் மற்றும் மற்ற osக்களை ஏணைய partitionகளி இருப்பதையும் menuவில் சேர்க்க
5.40_custom நமக்கு தேவையான osகளை சேர்க்க.

மேற்கண கோப்புகளில் 40_custom கோப்பில் தான் ஏதேனும் மாற்றங்கள் செய்ய முடியும்.
மாற்றங்கள் செய்தபின் கோப்பினை செமித்து வெளியேறவும். பின்னர் டெர்மினலில்

#sudo update-grub2 என்று தட்டச்சு செய்தால் /boot/grub.cfg கோப்பினுள் சேர்ந்துவிடும்.

No comments: