உபுண்டுவில் panelல் உள்ள கடிகாரத்தை அமைப்பை மாற்றலாம்.

இப்படி இருக்கும் கடிகாரம் கீழ்கண்டவாறு மாற்றலாம்.

முதலில் Alt+F2 என்று தட்டச்சு செய்து வரும் விண்டோவில் gconf-editorஐ திறந்துகொள்ளவேண்டும்.

இதில் Apps > Panel > Applets > Clock_Screen* > Prefs சென்று அதில் formatல் வலது சொடுக்கி வரும் விண்டோவில் edit keyஐ தேர்ந்தெடுத்து custom என்று தட்டச்சு செய்யவும்.
பின்னர் custom_formatல் வலது சொடுக்கி வரும்விண்டோவில் edit keyஐ தேர்ந்தெடுத்து அதில் கீழ்கண்ட சுட்டியிலிருந்து வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும். இப்போது ok கொடுத்து வெளியேறவும்.
clock panel
இப்போது top panel ல் மாறி இருக்கும். அவ்வாறு மாறவில்லை என்றால் டெர்மினலில்
killall gnome-panel என்று தட்டச்சு செய்தால் மாறிவிடும்.
No comments:
Post a Comment