Pages

Monday, November 22, 2010

உபுண்டுவில் gnome panel font bold/italic/font size மாற்ற

உபுண்டுவில் top panelல் உள்ள எழுத்துக்களை பளீச்சென்று, சாய்வாக மற்றும் எழுத்துருவின் அளவை மாற்ற முடியும். இதற்கு டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo gedit .gtkrc-2.0 என்று தட்டச்சு செய்து .gtkrc-2.0 என்ற கோப்பினை திறந்துகொள்ள வேண்டும். கோப்பு இல்லையேன்றால் காலி கோப்பாக திறக்கும். அதில் கீழ்கண்ட வரிகளை சேர்த்துவிடவும்.


style "modpanel"
{
font_name = "Bold 10"
}
widget "*PanelWidget*" style "modpanel"
widget "*PanelApplet*" style "modpanel"
widget "*fast-user-switch-applet*" style "modpanel"

பின்னர் செமித்து வெளியேறிவிடவேண்டும். மேற்கண்ட கோப்பினை செயல்படுத்த டெர்மினலில்

killall gnome-panel என்று தட்டச்சு செய்ய வேண்டும்.

சாதாரண நிலையில் பேனல்


மேலே உள்ள வரிகளில் font_name="Italic 10" என்று மாற்றினால்


font_name="Bold 10" என்று மாற்றினால்


font_name="Bold 12" என்று மாற்றினால்


இதில் ( ") குறியீடு நேராக இருக்க வேண்டும். சாய்வாக இருக்க கூடாது.

1 comment:

HariV is not a aruvujeevi said...

நன்றி , அப்படியே gnome panel -ஐ தவறுதலாக remove செய்து விட்டால் மீண்டும் கொண்டுவருவது எப்படி என்று ஒரு ப்ளாக் எழுத வேண்டும் ப்ளீஸ்.