Pages

Saturday, November 20, 2010

உபுண்டுவில் youtube வீடியோக்களை முழுத்திரையில் உறைந்து போகாமல் காண

உபுண்டுவில் youtube வீடியோக்களை முழுத்திரையில் காணும்போது சில சமயம் உறைந்து நின்றுவிடுகிறது. மீண்டும் சின்னதாக அமைத்து மீண்டும் முயற்சிகையில் தான் சரியானது. இப்போது இதற்கு ஒரு வழி உள்ளது.

டெர்மினலில்

sudo mkdir /etc/adobe என்று தட்டச்சு செய்து /etc/adobe என்ற ஒரு அடைவினை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

sudo gedit /etc/adobe/mms.cfg என்று தட்டச்சு செய்து mms.cfg என்ற ஒரு காலி டெக்ஸ்ட் கோப்பினை திறந்துகொள்ள வேண்டும். அதில் கீழ்கண்ட வரியை சேர்த்துவிடவும்.

OverrideGPUValidation=true

சேமித்து வெளியேறிவிடவும்.

இப்போது youtube வீடியோக்களை முழுத்திரையில் காணும்போது உறைந்து போவதில்லை.

1 comment:

Kartook said...

perfect mate .yeah its working

1920x1200 screen :)