Pages

Friday, November 5, 2010

உபுண்டுவில் டெர்மினலில் good morning உடன் ஆரம்பிக்க

உபுண்டுவில் டெர்மினலுக்கு செல்லும் போது காலை நேரம் என்றால் Good Morning, மதியம் என்றால் Good afternoon மற்றும் மாலை நேரம் என்றால் Good Evening என்ற வாழ்த்துகளுடன் ஆரம்பிக்க வைக்கலாம்.


முதலில் கீழ்கண்ட வரிகளை காப்பி செய்து ஒரு டெக்ஸ்ட் கோப்பில் பேஸ்ட் செய்து சேமித்துக்கொள்ளவேண்டும். இதற்கு ஏதேனும் ஒரு பெயர் அவரவர் விருப்பப்படி கொடுத்துக்கொள்ளலாம். நான் இங்கு good.sh என்று கொடுத்துள்ளேன்.

#!/bin/bash
# Shell program which gets executed the moment the user logs in, it should
# display the message "Good morning", "Good Afternoon", or "Good Evening"
# depnding upon the time which the user logs in.
# =====================================================================

# get current hour (24 clock format i.e. 0-23)
hour=$(date +"%H")

# if it is midnight to midafternoon will say G'morning
if [ $hour -ge 0 -a $hour -lt 12 ]
then
greet="Have a Nice Day Good Morning, $USER"
# if it is midafternoon to evening ( before 6 pm) will say G'noon
elif [ $hour -ge 12 -a $hour -lt 18 ]
then
greet="Good Afternoon, $USER"
else # it is good evening till midnight
greet="Good evening, $USER"
fi

# display greet
echo $greet


இந்த கோப்பினை home அடைவினுள் வைத்துக்கொள்ளலாம். பின்னர் அதே அடைவினுள் உள்ள .bashrc என்ற கோப்பினை திறந்துகொள்ளவேண்டும். இந்த கோப்பானது hidden கோப்பாகும். இதை திறப்பதற்கு home அடைவினுள் சென்று view->show hidden files என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த கோப்பில் கீழ்கண்ட வரியை சேர்த்துவிடவேண்டும்.

/home/username/good.sh அதாவது ஸ்கிரிப்ட் அடங்கிய கோப்பு எந்த அடைவினுள் உள்ளதோ அந்த அடைவின் பெயரோடு இருக்க வேண்டும்.


இப்போது Applications0>accessories->terminal சென்றால் வாழ்த்துக்களுடன் ஆரம்பிக்கும்.

கீழ்கண்ட படத்தில் மாலை வணக்கதுடன் டெர்மினல் ஆரம்பிக்கிறது.


இந்த வாழ்த்தை ஒலியுடன் பெற முடியும். அதற்கு ஸ்கிரிப்டில் சில மாறுதல்கள் செய்ய வேண்டும்.

Have a Nice Day Good Morning, $USER என்பதற்கு பதிலாக அதன் நடுவில் உள்ள space இல்லாமல் இருக்க வேண்டும். அதாவது

HaveaNiceDayGoodMorning,$USER என்று இருக்க வேண்டும். பின்னர் ஸ்கிரிப்டின் அடியில் கீழ்கண்ட வரியை சேர்த்துவிடவேண்டும்.

espeak $greet


2 comments:

HariV is not a aruvujeevi said...

சூப்பர் அண்ணா, இந்த ப்ளாக் எழுதிய கையோடு காலையில் அலாரம் வைப்பது போலே, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உபுண்டு பூட் ஆகி, சுப்ரபாதம் பாட வைக்க ஒரு வழி சொல்லுங்க ப்ளீஸ். தீபாவளி நல்வாழ்த்துகள்.

arulmozhi r said...

வாருங்கள் ஹரி வி. உபுண்டு ஆரம்பிக்கும் போது லாகின் ஒலியை வேண்டுமானால் மாற்றலாம். இதோ அதற்கான சுட்டி

http://ubuntuintamil.blogspot.com/2010/04/910-login-sound.html