Pages

Sunday, October 18, 2009

உபுண்டுவில் text to speech

உபுண்டுவில் text to speech நிறுவ முதலில் espeak நிறுவி கொள்ளவேண்டும்.
System->Administration->Synaptic Package Manager சென்று அதன் search boxல் espeak என்று தட்டச்சு செய்து நிரலை தெர்வு செய்து பின் Apply பொத்தனை அழுத்தினால் நிரல் நிறுவப்பட்டுவிடும்.

பின்னர் டெர்மினலில்
#espeak "this is test" என்று தட்டச்சு செய்தால் நமக்கு தெளிவாக கேட்கும்.
#espeak என்று தட்டச்சு செய்தால் நாம் என்ன தட்டச்சு செய்கின்றோமோ அது கேட்க ஆரம்பிக்கும். மறக்கமால் ஒரு வார்த்தையை தட்டச்சு செய்து முடித்தவுடன் என்டர் கீ அழுத்தவேண்டும்.
#espeak --voices என்று தட்டச்சு செய்தால் எந்தெந்த மொழிகளில் நாம் கேட்கலாம் என்பது தெரியும்.
இதில் தமிழிலும் பேசும். அதற்க்காக
#espeak -vta "தமிழ் வாழ்க" என்று தட்டச்சு செய்தால் englishகாரன் குரல் கேட்கும்.
பல்வேறு குரல்களை கேட்க /etc/speech-dispatcher/speech.conf என்ற கோப்பில்
# currently supported: MALE1, MALE2, MALE3, FEMALE1, FEMALE2, FEMALE3,
# CHILD_MALE, CHILD_FEMALE

DefaultVoiceType "MALE1" என்ற இடத்தில் நமக்கு வேண்டிய குரலை தேர்வு செய்துகொள்ளலாம்.
பின்னர் ஒரு டெக்ஸ்ட் கோப்பில் இருக்கும் எழுத்துக்களை தட்டச்சு செய்து கொண்டு அவற்றை wav கோப்புக்களாக மாற்றிகோள்ளலாம்.
#espeak -f xxx.txt -w xxx.wav -vta என்று தட்டச்சு செய்தால் கோப்பு மாறி விடும்.mp3 கோப்புகளாக கூட மாற்றிகோள்ளலாம்
#espeak -v xxx.txt --stdout | lame - xxx.mp3 -vta ஆங்கிலத்தில் மட்டும் இது வேலை செய்கிறது.

தேதி நேரம் தெரிந்து கொள்ள டெர்மினலில்
#date "+The time sponsered by ram is %H hours %M minutes and %S seconds" | espeak என்று தட்டச்சு செய்தால் குரல் கேட்கும்.
pdf கோப்புகளை கூட கேட்க முடியும். அதற்கு pdf கோப்புகளை text கோப்புகளாக மாற்றிகோள்ள வேண்டும்.
#pdftotext xxx.pdf xxx.txt என்று தட்டச்சு செய்தால் கோப்பு மாறிவிடும். பின்னர் wav ஆகவோ அல்லது mp3 கோப்புகளாகவோ மாற்றி கோள்ளலாம்.

3 comments:

Unknown said...

very very useful post thanks

arulmozhi r said...

உங்கள் வருகைக்கு நன்றி

Anonymous said...

தமிழ் பேசும் உபுண்டு என்று தலைப்பு வைத்திருந்தால் சரியாக இருக்கும்.