Pages

Friday, October 9, 2009

உபுண்டுவில் ஒரு driveஐ image கோப்பாக மாற்றுதல்

உபுண்டுவில் ஒரு driveஐ image file ஆக காப்பி செய்து வேறொறு driveல் காப்பி செய்தல் அல்லது அதே driveல் restore செய்தல்.

#sudo apt-get install partimageஎன்று தட்டச்சு செய்தால் நிரல் நிறுவப்பட்டுவிடும். இந்த நிரலை செயற்படுத்த

#sudo partimage என்று தட்டச்சு செய்தால் கீழ்கண்டவாறு விண்டோ விரியும்.

இதில் பல partitionகள் தெரியும். அதில் எந்த partitionஐ காப்பி செய்ய வேண்டுமொ அதை தேர்வு செய்து Tab பொத்தனை அழுத்தி Image file to create/use என்ற இடத்தில் image file name தர வேண்டும். பின்னர் action to be done என்ற தலைப்பின் கீழ் உள்ள கட்டத்தில் Save partition into a new image file என்பதை தேர்வு செய்து F5 பொத்தனை அழுத்தினால் கீழ்கண்ட விண்டோ விரியும்.

இதில் Compression levelல் gzip அல்லது bzip2 தேர்வு செய்து பின்னர் image file ஒரே கோப்பாகவோ அல்லது பல கோப்புக்களாகவோ பிரித்து கோள்ளலாம். Image split modeல் Into file whose size என்பதனை தேர்வு செய்து எவ்வளவு sizeல் கோப்பு வேண்டுமோ அதை தட்டச்சு செய்யவேண்டும்.பின்னர் F5 தட்டச்சு செய்தால் கீழ்கண்ட விண்டோ விரியும்.
இதில் ok அழுத்தவும்.Save partition to image file என்ற தலைப்பில் விண்டோ விரியும்

இதில் ok கொடுத்து அழுத்தவும்.NTFS Information என்ற விண்டோ விரியும்


இங்கும் ok அழுத்தவும்.Save partition to image file


இந்த விண்டோவில் drive save ஆக தொடங்கும். நிரல் முடிந்தவுடன்

இங்கே ok அழுத்தி நிரலை முடிக்கலாம். restore செய்யவேண்டுமானாலும் இந்த நிரலில் முடியும்.முதல் படத்தில் Save partition into image file என்பதற்கு பதிலாக Restore partition from an image file என்பதனை தேர்வு செய்யவேண்டும்.சேமிக்கப்பட்டimage கோப்பு home folderல் சேமிக்கபட்டுவிடும்.

No comments: