உபுண்டுவி நிறுவியவுடன் gnome partition editor நிறுவுவதற்க்கு.
Applications->Add/Remove சென்று அதன் search boxல் partition என டைப் செய்து தேடினால் 'Gnome Partition Editor' என்ற நிரலை தேர்வு செய்து apply பொத்தானை அழுத்தினால் நிரல் நிறுவப்பட்டுவிடும். பின்னர்
Systems->Administration->Partition Editor சென்றால் கீழ்கண்ட விண்டோ விரியும்.

இதில் 1)partition->பிரிக்கப்பட்ட partition ஒன்றன்கீழ் ஒன்றாக இருக்கும்.
2)File system->பல்வேறு வகையான partitionகள் இருக்கும். இதில் ntfs என்பது விண்டோஸ் வகையான partitionகள்.இவ்வகை partitionகளை உபுண்டுவில் format செய்ய முடியும்.விண்டோஸ் நிறுவி இருந்தால் எச்சரிக்கை தேவை.
3)Mount Point-> விண்டோஸ் டிரைவ்கள் நாம் mount செய்திருந்தால் தெரியும். உபுண்டுவில் ext3 அல்லது ex4 உபுண்டு நிறுவியுருக்கும் partition.இதன் mount point->'/' ஆகும்.
4.Label->விண்டோஸ் மற்றும் உபுண்டுவில் partition களின் பெயர்கள் இருக்கும்.
5.Size->partitionகளின் இடஅளவு குறிக்கப்பட்டு இருக்கும்.
6.used->partitionகளின் உபயோகப்படுத்தப்பட்ட diskspace தெரியும்.
7.unused->paritionகளின் மீதமுள்ள diskspace தெரியும்.
8.Flags->booting எந்த partitionல் ஆரம்பிக்கிறதோ அதில் 'boot' என்று தெரியும்.
இதில் edit செய்யும்வழிமுறைகளை பார்ப்போம். partitionல் கர்சரை வைத்து right clickசெய்தால் வரும் boxல் பல்வேறு optionகளை பயன்படுத்தி partitionனை format செய்யலாம். பல்வேறு file systemகளிலும் format செய்யலாம். unallocatted space இருந்தால் புதியதாக ஒரு partitionஐ உருவாக்கிக்கொள்ளலாம்.
Gnome Partition Editor(GParted) யை பயன்படுத்தும்போது எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
No comments:
Post a Comment