Pages

Sunday, October 24, 2010

உபுண்டு 10.10 ல் grub2வின் பின்புல படத்தை மாற்றுதல்



உபுண்டு grub2வின் பின்புல படம் கருப்பு வெள்ளையாகதான் இருக்கும். அதனை நமக்கு விருப்பமான படத்தை வரவழைக்க முடியும். இதற்கு முதலில் டெர்மினலில்

sudo gedit /etc/grub.d/05_debian_theme என்று தட்டச்சு செய்து கோப்பினை திறந்து கொள்ள வேண்டும். அதில் கீழ்க்கண்ட வரியை கண்டுபிடித்து மாற்றம் செய்யவேண்டும்.

WALLPAPER="/usr/share/images/desktop-base/moreblue-orbit-grub.png"

இதில் "/usr/share/images/desktop-base/moreblue-orbit-grub.png" என்பதற்கு பதிலாக நமக்கு விருப்பமான படத்தின் பெயரை கொடுக்க வேண்டும்.

WALLPAPER="/home/username/Pictures/filename.jpg என்று மாற்றிக் கொள்ள வேண்டும்.


இறுதியில் டெர்மினலில்

sudo update-grub என்ற கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும். இப்போது கணினியை மீள துவங்க grub2வில் பின்புல படம் மாறி இருப்பதை பார்க்கலாம்.

2 comments:

இரா.கதிர்வேல் said...

அருமையான பதிவு சார் , உபுண்டு 10.10 ல் செய்து பார்த்துவிட்டேன் நன்றாக உள்ளது.

arulmozhi r said...

நன்றி கதிர்வேல்