Sony யின் bluetooth headset ஒன்று இதற்கு பயன்படுத்தப்பட்டது.

முதலில் bluetooth tanggleஐ கணினியில் பொருத்திப்பட்டது. பின்னர் bluetooth headset ஆன் செய்தேன். பின்னர் கணினியில் top panel ல் இருந்த ஐகானில் வலது சொடுக்க வந்த விண்டோவில் setup new device தேர்ந்தெடுத்தேன்.

மேலே உள்ள படத்தில் உள்ளது போல் என்னுடைய headset கணினியில் தெரிந்தது. பின்னர் forward பொத்தானை அழுத்தினால் அடுத்த விண்டோ வந்தது.

இப்போது close பொத்தானை அழுத்தி விண்டோவை மூடவேண்டும். sound preference சென்று சில அமைப்புகளை கொடுக்க வேண்டும்.

மேலே உள்ள படத்தில் headset தெரிவதை பார்க்கலாம். கீழே உள்ள test speakers அழுத்தினால் headsetல் ஒலி தெளிவாக கேட்கும்.

இப்போது input ஆப்ஷனிலும் தெரிவதை காணலாம்.

மேலே உள்ள படத்தில் output optionல் உள்ளது. இங்கே bluetooth headset ஐ தேர்ந்தெடுத்து close பொத்தானை அழுத்தி வேளியேறவேண்டும். இப்போது விஎல்சிஐ இயக்கினால் காதில் பொருத்தப்பட்டுள்ள headsetல் பாடல்கள் கேட்கும். கணினியின் வேளிப்புற speakerகளில் ஒலி கேட்பதில்லை. ஏதேனும் நடுவில் தடங்கல் இருந்தால் ஒலியின் தரம் சற்று குறைகிறது.
No comments:
Post a Comment