
உபுண்டுவும் libre officeக்கு மாற போவதாக செய்திகள் வந்திருக்கின்றன். முதலில் இதை எப்படி நிறுவுவது என்று பார்ப்போம்.
டெர்மினலில் கோப்பினை தரவிறக்கிகொள்ளலாம்.
cd Desktop
wget http://download.documentfoundation.org/libreoffice/testing/LO_3.3.0-beta1_Linux_x86_install-deb_en-US.tar.gz
இந்த கோப்பினை நம்முடைய மேசையின் மீதே வைத்துக்கொள்ளலாம்.பின்னர் இதை விரிவாக்கினால் en-US என்ற அடைவினுள் இருப்பதை பார்க்கலாம்.
sudo dpkg -i ~/Desktop/en-US/DEBS/*.deb என்று கட்டளையிட்டால் libreoffice நிறுவப்பட்டுவிடும்.
பின்னர் கீழ்கண்டவாறு கட்டளையிட்டு இந்த நிரல்களை Applications->Officeல் வரவழைக்கலாம்.
sudo dpkg -i ~/Desktop/en-US/DEBS/desktop-integration/libreoffice3.3-debian-menus_3.3-9526_all.deb
இப்போது மேனுவில் வந்துவிடும்.

இந்த நிரலின் சிறு ஐகான் மேலே உள்ள பேனலில் இருப்பதை காணலாம்.

1.Libreoffice 3.3 Writter

2.LibreOffice 3.3 Calc

3.LibreOffice 3.3 base

Libreoffice ன் வரவை Richard Stallman வரவேற்றிருக்கிறார். Canonical,Redhat,Google,Novell போன்ற லினக்ஸ் நிறுவனங்களும் வரவேற்றுள்ளன.
Libreoffice உடன் openoffice செர்த்து இயக்கலாம். அல்லது open office நீக்கிவிட்டும் இயக்கலாம்.

5 comments:
ஓபன் ஆஃபிஸில் பல பல பிரச்சனைகள். முக்கியமாக மைக்ரோசாஃப்ட் டாகுமென்டுகளால் ஏற்படும் ஃபார்மெட்டிங் பிரச்சனைகள். லிப்ரே ஆஃபிஸ் இந்த பிரச்சனைகளை சரி செய்யும் என்று நினைக்கிறேன்...
நன்றி பிரசன்னா ராஜன். நான் முழுவதும் openoffice தான் பயன்படுத்துகிறேன். அலுவலகத்தில் பயன்படுத்துவது ms office என்றாலும் எனக்கு எந்த பிரச்சனை இல்லை.
இதிலும் ஒரு சில ஃபார்மட்டிங் பிரச்சனைகள் உள்ளன. அதோடு அல்லாமல் டெஸ்ட் செய்து பார்த்த போது, ஒபன் ஆஃபிஸைக் காட்டிலும் அதிக மெமரியை எடுத்து கொள்கிறது. பிராஸஸிங் டைமும் அதிகம்...
கட்டற்ற மென்பொருட்களில் லிபர் ஆபிஸ் தவிர்க்க முடியாத மென்பொருளாகிவிடும். நீங்கள் பதிவேற்றியுள்ள லிபர் ஆபிஸின் காப்புரிமை படத்திலும் ஆரக்கிளின் வாடை தெரிகிறதே (4வது வரி). நல்லதொரு செய்தியைத் தந்ததற்கு நன்றி.
நன்றி பிரசன்ன ராஜன்
நன்றி ந.ர.செ.ராஜ்குமார்
இது இன்னும் stable ஆக வரவில்லை. beta பதிப்புதான். முழுவதும் வந்தபிறகு இன்னும் சிறப்பாக இருக்கும்.
ஆரகிளின் வாடை இருக்கிறது. வெகு விரைவில் புது பொலிவுடன் வெளிவரும்.
Post a Comment