உபுண்டுவில் ubuntu tweak பற்றிய பதிவு ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அதற்கான சுட்டி.
http://ubuntuintamil.blogspot.com/2010/02/ubuntu-tweak.html
முதலில் புதிய ubuntu tweak நிறுவ கீழ்கண்ட கட்டளைகளை டெர்மினலில் இட வேண்டும்.
sudo add-apt-repository ppa:tualatrix/ppa
sudo apt-get update
sudo apt-get install ubuntu-tweak
ubuntu tweak பயன்படுத்தி பழைய கெர்னல்களை நீக்கிவது பற்றி பார்ப்போம்.
முதலில் Applications->System tools->ubuntu tweak செல்ல வேண்டும்.

மேலே உள்ளது போல் விண்டோ வரும். அதில் Clear Kernels என்ற பொத்தனை அழுத்தவேண்டும்.

மேற்கண்ட விண்டோ வரும். பின்னர் Unlock பொத்தானை அழுத்த நம்முடைய login கடவுச்சொல் கேட்கும்.

இதில் பழைய கெர்னல்களை தேர்வு செய்து cleanup பொத்தானை அழுத்தினால் பழைய கெர்னல்கள் நீக்கப்பட்டுவிடும்.
2 comments:
மிக்க நன்றி.....
என்னிடம் நான்கு கெர்னல்கள் உள்ளன :-(
இப்போது தான் எனக்கு இந்த மென்பொருள் பற்றித் தெரியும்... :-)
இதைக்கொண்டு உபுண்டுவையும் கட்டுப்படுத்தலாம் போல... :-)
மிக்க நன்றி...
Post a Comment