Pages

Friday, December 31, 2010

உபுண்டுவில் steganography ஒரு எளிய நிரல்

உபுண்டுவில் புகைப்படத்தில் தகவல்களை மறைத்துவைக்கும் நிரல்தான் steghide என்பதாகும். இந்த நிரல் synaptic package managerல் உள்ளது. எளிதாக search செய்து நிறுவிக்கொள்ளலாம். இந்த நிரலை பயன்படுத்துவது மிக எளிதானது.




மேலே உள்ள படத்தில் இரண்டு கோப்புகள் அதாவது ஒன்று படக்கோப்பு இரண்டாவது டெக்ஸ்ட் கோப்பாகும். இந்த டெக்ஸ்ட் கோப்பினை படக்கோப்பில் மறைத்து வைக்க முடியும். படக்கோப்பு jpg வடிவில் இருக்க வேண்டும்.

டெர்மினலில் கீழ்கண்டவாறு கட்டளையிட வேண்டும்.

steghide embed -cf gra.jpg -ef gra.txt

மேற்கண்டவாறு கட்டளையிட்டவுடன் டெர்மினலில்

Enter passphrase: கேட்கும். இங்கு நாம் ஒரு கடவுச்சொல்லை கொடுக்க வேண்டும். கொடுத்தவுடன் ReEnter passphrase கேட்கும். திரும்ப அதே கடவுச்சொல்லை கொடுத்தவுடன் டெக்ஸ்ட் கோப்பு படக்கோப்பில் மறைக்கப்படுவிடும்.

இதனை மீண்டும் வெளிகொணர கீழ்கண்ட கட்டளையை டெர்மினலில் கொடுக்க வேண்டும்.

steghide extract -sf gra.jpg என்று கட்டளை கொடுத்தவுடன்

Enter passphrase கேட்கும். கோப்பினை மறைப்பதற்கு கொடுத்த அதே கடவுச்சொல்லை கொடுத்தவுடன் கோப்பு தனியாக பிரிக்கப்பட்டுவிடும்.




steganography என்பதை பற்றி கேள்விபட்டு இருப்போம். இதனை நாமே செய்து பார்க்க இருக்கும் ஒரு சிறிய மற்றும் எளிமையான நிரல்தான் இது.

Monday, December 27, 2010

உபுண்டுவில் வெப் காமிராவை security cam ஆக மாற்ற

உபுண்டுவில் வெப் காமிராவை செக்யூரிட்டி காமிராவாக பயன்பத்திக்கொள்ளமுடியும். இதற்கு முதலில் motion என்ற நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும். இந்த நிரல் synaptic package managerல் உள்ளது.


இந்த நிரலை இயக்க வெப் காமிராவை கணினியுடன் இணைத்தவுடன் டெர்மினலில்

sudo motion என்று தட்டச்சு செய்தால் நிரல் இயங்க துவங்கும். சீரான இடைவெளியில் படங்கள் எடுத்து /tmp/ அடைவினுள் செமித்துக்கொள்ளும். முதலில் .swf என்ற கோப்பு உருவாகிவிடும்.பின்னர் படங்கள் கோப்பு உருவாகும்.


இந்த படங்களை நெருப்பு நரி உதவியுடன் பார்க்க முடியும். அட்ரஸ் பாரில் localhost:8081 என்று தட்டச்சு செய்தால் படங்கள் தெரிய ஆரம்பிக்கும்.

/tmp/motion/ அடைவிற்கு சென்று .swf கோப்பினை நெருப்பு நரியில் திறந்தால் உலாவியில் வீடியோவாக தெரியும். இந்த அடைவினுள் இருக்கும் கோப்பினை வேறு ஒரு கோப்பிற்கு மாற்றிக்கொள்ளவேண்டும். கணினியை மீளதுவங்கினால் /tmp/motion அடைவு அழிக்கப்பட்டு இருக்கும்.


கீழே ஒரு இதற்கேன ஒரு வீடியோ



Friday, December 24, 2010

உபுண்டுவில் boot splash imageல் காலை/மாலை வணக்கங்களுடன் ஆரம்பிக்க

உபுண்டுவில் பூட் ஆக ஆரம்பிக்கும்போது வரும் splash image ன் அடிப்பாகத்தில் தமிழிலேயே காலை/மாலை வணக்கங்கள் வரவழைக்க இந்த plymouth-greeter என்னும் நிரல் உதவுகிறது.

இந்த நிரலை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ள வேண்டும். இந்த நிரல் /bin/ என்னும் அடைவினுள் இருக்கும். இந்த ஸ்க்ரிப்டில் அனைத்து வாழ்த்துக்கள் ஆங்கிலத்தில் இருக்கும். இதை தமிழில் மாற்ற டெர்மினலில் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்து கோப்பினை திறந்துகொள்ள வேண்டும்.

sudo gedit /bin/plymouth-greeter

பின்னர் அதில் கீழ்கண்ட மாற்றங்களை செய்தால் போதும்.

முதலில் கீழ்கண்ட வரிகளை கண்டுபிடித்து அதை மாற்ற வேண்டும்.

# defining time of day
case "$hour" in
0 | 1 | 2 | 3 | 4 | 5 ) timeofday='night';;
6 | 7 | 8 | 9 | 10 | 11 ) timeofday='morning';;
12 | 13 | 14 | 15 | 16 | 17 ) timeofday='afternoon';;
18 | 19 | 20 | 21 | 22 | 23 ) timeofday='evening';;
# if we are here, something went wrong, exiting
*) exit 0;;
esac

என்பதாக இருக்கும் வரிகளை கீழ்கண்டவாறு மாற்ற வேண்டும்.

# defining time of day
case "$hour" in
0 | 1 | 2 | 3 | 4 | 5 ) timeofday='இரவு வணக்கம்';;
6 | 7 | 8 | 9 | 10 | 11 ) timeofday='காலை வணக்கம்';;
12 | 13 | 14 | 15 | 16 | 17 ) timeofday='மதிய வணக்கம்';;
18 | 19 | 20 | 21 | 22 | 23 ) timeofday='மாலை வணக்கம்';;
# if we are here, something went wrong, exiting
*) exit 0;;
esac

பின்னர்

# show the message and exit on success
/bin/plymouth message --text "Goodbye" && exit 0 || sleep 0.5
done

என்ற வரிகளை கண்டுபிடித்து அதில் கீழ்கண்டவாறு மாற்றம் செய்ய வேண்டும்.

# show the message and exit on success
/bin/plymouth message --text "நன்றி மீண்டும் சந்திப்போம்" && exit 0 || sleep 0.5
done

மூன்றாவதாக

# show the message and exit on success
/bin/plymouth message --text "Good $timeofday" && exit 0 || sleep 0.5
done

மேலே உள்ள வரியில் Good என்னும் வார்த்தையை நீக்கிவிடவேண்டும்.

பின்னர் சேமித்து கொள்ள வேண்டும். இப்போது மீண்டும் கணினியை லாக் அவுட் செய்யும் போது அதில் தமிழில் வார்த்தைகள் வருவதை காணலாம்.

கணினி ஆரம்பிக்கும் போது



கணினியை அணைக்கும் போது



படங்களை கைப்பேசியில் எடுக்கப்பட்டதால் தெளிவில்லாமல் இருக்கும். இந்த நிரலை நிறுவிக்கொண்டால் தமிழிலேயே காலை/மாலை/மதியம்/இரவு நேர வணக்கங்கள் வருகிறது.

இந்த ஸ்கிரிப்டை எடிட் செய்யும் முன் backup எடுத்துகொள்வது நல்லது.

sudo cp /bin/plymouth-greeter /bin/plymouth-greeter.backup என்று டெர்மினலில் தட்டச்சு செய்தால் backup எடுக்கப்பட்டுவிடும்.

Thursday, December 23, 2010

உபுண்டு டெர்மினலில் காலண்டர் வரவழைக்க



உபுண்டு டெர்மினலில் காலண்டரை வரவழைக்க அதாவது Applications-> Accessories-> Terminal செல்லும் போது காலண்டரை வரவழைக்க முடியும்.

முதலில் டெர்மினலில்

sudo gedit /bin/greetings.sh என்று தட்டச்சு செய்து bin அடைவினுள் greetings.sh என்ற ஒரு காலி கோப்பினை திறந்து கொள்ள வேண்டும்.

பின்னர் கீழே உள்ள வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்துவிட்டு பின்னர் டெர்மினலில்

echo "Welcome to the Ubuntu OS, $USER!"
echo 'System uptime:'
uptime
cal


sudo chmod +x /bin/greetings.sh என்று தட்டச்சு செய்து ஸ்கிரிப்டினை இயங்ககூடிய நிலையில் வைக்க வேண்டும்.

பின்னர் home அடைவினுள் இருக்கும் bashrc கோப்பினை திறக்க டெர்மினலில் கீழ்கண்ட வரியினை தட்டச்சு செய்ய வேண்டும்.

gedit ~/.bashrc

அதில் கீழ்கண்ட வரியினை அதில் சேர்த்துவிட வேண்டும்.

/bin/greetings.sh

பின்னர் செமித்து வெளியேறிவிடவேண்டும். பின்னர் டெர்மினலில் திறக்க காலண்டர் கிடைக்கும்.

Wednesday, December 22, 2010

உபுண்டுவில் CPU Frequency indicator

உபுண்டுவில் நம்முடைய கணினியின் cpuவின் frequencyஐ மாற்ற/பார்க்க முடியும். இது டாப் பேனலில் ஐகான் வடிவில் இருக்கும்.


முதலில் இதை நிறுவுவதற்கு டெர்மினலில் கீழ்கண்ட வரிகளை தட்டச்சு செய்யவேண்டும்.

sudo add-apt-repository ppa:artfwo/ppa
sudo apt-get update
sudo apt-get install indicator-cpufreq

இந்த நிரலை டாப் பேனலில் கொண்டு வர டாப் பேனலில் வலது சொடுக்க வரும் விண்டோவில் Add to panel என்பதனை தேர்ந்தெடுத்து அதில் CPU Frequency Monitor என்பதனை தேர்ந்தெடுத்து Add பொத்தானை அழுத்தினால் வந்துவிடும்.


இந்த ஐகானில் இடது சொடுக்க வரும் விண்டோவில் நாம் frequencyஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.



வலது சொடுக்க வரும் விண்டோவில் preference தேர்ந்தெடுத்தால் எந்த CPU என்று தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.


CPU0 அல்லது CPU1 என்று தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

Tuesday, December 21, 2010

உபுண்டுவில் ஆடியோ கோப்புகளை மெதுவாக இயக்கி பார்க்க

உபுண்டுவில் ஆடியோ கோப்புகளை மெதுவாக இயக்கிப்பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும். அதற்கு உதவும் மென்பொருள்தான் playitslowly. இதை தரவிறக்கி நிறுவினால் 45எம்பி அளவுக்கு கோப்பு இருக்கும்.

இந்த நிரலை இயக்க Applications->Sound & video->Play it slowly செல்ல வேண்டும்.


இந்த நிரல் பலவகையான் வடிவங்களை ஆதரிக்கிறது. mp3,ogg,flv,avi போன்றவைகள். வேகமாகவும் குறைவான வேகத்துடனும் கோப்புகளை இயக்கிப்பார்க்கலாம்.


இது பற்றிய ஒரு வீடியோ

Saturday, December 18, 2010

உபுண்டுவில் tootipsஐ நீக்குதல்

உபுண்டுவில் panelல் நெருப்பு நரி மற்றும் தண்டர்பேர்டு போன்ற நிரல்களின் ஐகான்கள் மீது கர்சரை கொண்டு செல்லும் போது அதில் tooltips தோன்றும். இதை நீக்க முடியும்.

முதலில் Alt+F2 வை அழுத்தி command prompt ஐ திறந்து அதில் gconf-editor என்று தட்டச்சு செய்து run பொத்தானல் அழுத்தினால் config editor திறக்கும்.



அதில் /apps/panel/global/ சென்றால் வலது பறம் இருக்கும் விண்டோவில் tooltips_enabled என்பதன் நேராக உள்ள டிக்கை எடுத்துவிடவேண்டும்.


Wednesday, December 15, 2010

உபுண்டுவில் நிறுவப்பட்ட நிரல்களை வரிசையாக காண



உபுண்டுவில் நிறுவப்பட்ட நிரல்களை டெர்மினலில் காண கீழ்கண்ட இரண்டு கட்டளைகளையும் தட்டச்சு செய்யலாம்.

முதல் கட்டளை

sudo sed -ne '/^Package: \(.*\)/{s//\1/;h;};/^Installed-Size: \(.*\)/{s//\1/;G;s/\n/ /;p;}' /var/lib/dpkg/status | sort -rn


இரண்டாவது கட்டளை

sudo dpkg-query -Wf '${Installed-Size}\t${Package}\n' | sort -n


மேற்கண்ட இரண்டு கட்டளைகளையும் கொடுத்தால் கணினியில் நிறுவப்பட்ட நிரல்களை காணலாம்.

Monday, December 13, 2010

உபுண்டுவில் டெர்மினலில் இணையம் பார்க்க

உபுண்டுவில் எந்தவோரு உலாவியும் இல்லாமல் இணையத்தில் உலவ முடியும். ஆனால் வெறும் டெக்ஸ்ட் மட்டும்தான் நாம் காண முடியும்.

இதற்கு முதலில் டெர்மினலில்

w3m (இணைய முகவரி) என்று தட்டச்சு செய்தால் போதும்.

உதாரணமாக

w3m ubuntu.com என்று தட்டச்சு செய்தால் இணைப்பு ஏற்பட்டு உபுண்டு.காம் திறக்கும்.


இதில் டெக்ஸ்ட் மட்டுமே பார்க்க முடியும். படங்கள் மற்றும் கிராபிக்ஸ் ஏதுவும் பார்க்க முடியாது. தகவல்களை தெரிந்துகொள்ள மட்டும் இதனை பயன்படுத்தாலாம்.

Sunday, December 12, 2010

உபுண்டு தண்டர்பேர்டில் google calender tab

உபுண்டு தண்டர்பேர்டில் googleன் காலண்டரை கொண்டுவர Google Calender Tab என்னும் add on நிறுவிக்கொள்ளவேண்டும்.

பின்னர் தண்டர்பேர்டை திறந்தவுடன் ஒரு சிறிய ஐகானாக இருக்கும்.


ஐகானை கிளிக் செய்தவுடன் லாகின் செய்யவேண்டும்.


இப்போது நாம் Google Calenderஐ பயன்படுத்திக்கொள்ளலாம்.

Thursday, December 9, 2010

உபுண்டுவில் மேசை வீடியோ பதிவு microphone உடன்

உபுண்டுவில் மேசை நடவடிக்கையை வீடியோவாக பதிவு செய்ய ஒரு நிரல் Tibesti. இதில் பாடல்களையும், ஒலிபெருக்கியுடன் பதிவு செய்யலாம்.

இந்த நிரலை நிறுவுவதற்கு கீழ்கண்ட வரிகளை டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo add-apt-repository ppa:ackondro/tibesti
sudo apt-get update
sudo apt-get install tibesti

இந்த நிரலை இயக்குவதற்கு

Applications->Sound & video->Tibesti செல்ல வேண்டும்.


இதில் avi,ogg போன்ற வடிவங்களில் பதிவு செய்யலாம். ஒரு microphone ஐ இணைத்து அதில் நாம் பேசும் வார்த்திகளை கூட பதிவு செய்யலாம். முழுதிரை அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியாகவோ பதிவு செய்யலாம்.

இதில் options அழுத்தினால் சேமிக்க வேண்டிய கோப்பின் பெயரை கொடுக்கலாம்.


இதில் aviல் பதிவு செய்து youtubeல் ஏற்றமுடியும். இது பற்றிய ஒரு வீடியோ

Tuesday, December 7, 2010

உபுண்டுவில் PPA சேர்ப்பதற்கு ஒரு நிரல்

உபுண்டுவில் PPA சேர்ப்பதற்கு டெர்மினலில் தட்டச்சு செய்வோம் அப்படியில்லயேன்றால் software source சேர்த்துவிடுவோம். இப்போது இதற்கேன்று ஒரு நிரல். இதற்கான சுட்டி. இந்த நிரலை தரவிறக்கி நிறுவிக்கொள்ளவேண்டும்.

இந்த நிரலை இயக்க

Applications->Other->Introduce PPA செல்ல வேண்டும்.

இந்த நிரலை இயக்கவுடன் முதலில் மொழியை தேர்ந்தெடுக்க சொல்லும். ஆங்கிலம் தேர்ந்தெடுத்தவுடன் நிரல் செயல்பட ஆரம்பிக்கும்.


இதில் Add PPA கிளிக் செய்தால் PPA சேர்த்துக்கொள்ளலாம்.


Repository List கிளிக் செய்தால் நாம் வைத்துள்ள PPA க்களை தெரிந்துகொள்ளலாம்.

Sunday, December 5, 2010

உபுண்டுவில் ஆங்கில வார்த்தை விளையாட்டு



உபுண்டுவில் ஒரு ஆங்கில வார்த்தை விளையாட்டு விளையாட ஒரு சிறிய நிரல்.

இதற்கு முதலில் டெர்மினலில்

sudo gedit crossword என்று தட்டச்சு செய்து crossword என்ற காலி கோப்பு திறக்கும் அதில் கீழ்கண்ட வரிகளை சேர்த்து விடவேண்டும்.

exp=`echo "^${1}$" | tr '-' '.' `;
grep "$exp" < /usr/share/dict/words பின்னர் செமித்து வெளியேறிவிடவேண்டும். டெர்மினலில் sh crossword w---d என்று தட்டச்சு செய்தால் w என்ற எழுத்துக்கும் d என்ற எழுத்துக்கும் நடுவில் இருக்கும் மூன்று எழுத்துக்களை கொண்ட வார்த்தைகளை தேடலாம். இதன் வெளிப்பாடு

waded
waged
waked
waled
waned
waved
waxed
weird
who'd
wield
wiled
wined
wiped
wired
wooed
world
would
wound
wowed
wried

என்பதாக அமையும். இதில் எப்படி வேண்டுமானால் அமைக்கலாம்.

sh crossie e-c---o--d-a என்பதாக அமைத்தால் கீழ்கண்ட வார்த்தை வரும். encyclopedia


உபுண்டுவில் google chrome adobe flashஐ நெருப்பு நரியில் பயன்படுத்த

உபுண்டுவில் google chrome இணைய உலாவியின் adobe flasherஐ உபயோகப்படுத்தமுடியும். Google chrome adobe flasher தானாகவே மேம்படுத்திக்கொள்ளும் வசதி கொண்டுள்ளது. இதற்கு முதலில் கூகுள் குரோமின் இணைய உலாவியை இந்த சுட்டியிலிருந்து நிறுவிக்கொள்ளவேண்டும்.

முதலில் இதற்கு பயன்படும் அடைவுகளை பார்க்கலாம்.

நெருப்பு நரியின் அடைவு

/usr/lib/firefox-addons/plugins


அதேபோல் கூகுள் குரோமின் அடைவு

/opt/google/chrome/libgcflashplayer.so



இந்த இரண்டு அடைவுகளுக்கும் ஒரு இணைப்பு கொடுத்தால் போதும்.

இதற்கு டெர்மினலில்

cd /usr/lib/firefox-addons/plugins
sudo ln -s /opt/google/chrome/libgcflashplayer.so ./

என்று கட்டளை கொடுக்க வேண்டும்.

பின்னர் நெருப்பு நரியில் ஏற்கனேவெ நிறுவியிருந்த flash ஐ disable செய்ய வேண்டும்.

அதற்கு நெருப்பு நரி உலாவியை திறந்து அதில்

Tools->Add-ons->plugins செல்ல வேண்டும். அதில் shockwave flash தேடி அதனை செயலிழக்க செய்ய வேண்டும்.


Thursday, December 2, 2010

உபுண்டு messaging menuவில் மேலும் ஒரு நிரலை சேர்த்தல்

உபுண்டுவில் messaging menuவில் மேலும் ஒரு நிரலை சேர்ப்பது பற்றி பார்ப்போம். போனபதிவில் ஒரு நிரலை நீக்குவது பற்றி பார்த்தோம். அதே போல் இதிலும் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo gedit /usr/share/indicators/messages/applications/vlc இப்போது vlc என்ற காலி கோப்பு திறந்துவிட்டிருக்கும்.



அதில் கீழ்கண்ட வரியை சேர்த்து செமித்து வெளியேறிவிடவேண்டும்.

/usr/share/applications/vlc.desktop


பின்னர் கணினியை மீளதுவங்க இப்போது messaging menuவில் vlc media player வந்து இருக்கும்.

உபுண்டுவில் messaging menuவில் உள்ள தேவையில்லாத நிரலை நீக்குதல்

உபுண்டு top panelல் உள்ள messaging men வில் மூன்று நிரல்கள உள்ளன. அவை chat, evolution,broadcast ஆகியவை ஆகும். இதில் ஏதாவது ஒன்று தேவையில்லை என்றால் அந்த நிரலை messaging menuவிலுருந்து நீக்கிவிடலாம்.



முதலில் இதற்கான கோப்புகள் எங்கே இருக்கிறது என்று பார்ப்போம்.

/usr/share/indicators/messages/applications என்ற அடைவினுள் இருக்கிறது.



இதில் gwibber என்ற நிரலை நீக்க விரும்பினால் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo rm /usr/share/indicators/messages/applications/gwibber இந்த கட்டளையினால் gwibber என்ற கோப்பு அழிக்கப்பட்டுவிடும்.

பின்னர் கணினியை மீள துவங்கினால் broadcast என்ற நிரல் messaging menuவில் இருக்காது.


மீண்டும் வரவழைக்க விரும்பினால் டெர்மினலில்

sudo gedit /usr/share/indicators/messages/applications/gwibber என்று தட்டச்சு செய்து gwibber என்ற காலி டெக்ஸ்ட் கோப்பினை திறந்து கொள்ள வேண்டும். அதில் கீழ்கண்ட வரியை சேர்த்து செமித்து வெளியேறிவிடவேண்டும்.

/usr/share/applications/gwibber.desktop

பின்னர் கணினியை மீளதுவங்க இப்போது messaging menuவில் gwibber வந்துவிட்டிருக்கும்.

Wednesday, December 1, 2010

உபுண்டுவில் Google Earth 6

உபுண்டுவில் google earth 6 நிறுவுவது பற்றி பார்க்கலாம். இதை நிறுவுவதற்கு lsb-core என்ற நிரலை முதலில் நிறுவிக்கொள்ளவேண்டும்.

டெர்மினலில்

sudo apt-get install lsb-core

என்று தட்டச்சு செய்ய வேண்டும். பின்னர்

sudo apt-get install googleearth-package
cd && make-googleearth-package --force

மேற் சொன்ன இரண்டு கட்டளைகளையும் தட்டச்சு செய்தால் google earthன் deb package home அடைவினுள் உருவாகிவிடும்.


deb கோப்பின் மீது இரட்டை சொடுக்கி நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும். பின்னர்

Applications->Internet->Google Earth செல்ல வேண்டும்.

இது பற்றிய ஒரு வீடியோ