Pages

Wednesday, December 22, 2010

உபுண்டுவில் CPU Frequency indicator

உபுண்டுவில் நம்முடைய கணினியின் cpuவின் frequencyஐ மாற்ற/பார்க்க முடியும். இது டாப் பேனலில் ஐகான் வடிவில் இருக்கும்.


முதலில் இதை நிறுவுவதற்கு டெர்மினலில் கீழ்கண்ட வரிகளை தட்டச்சு செய்யவேண்டும்.

sudo add-apt-repository ppa:artfwo/ppa
sudo apt-get update
sudo apt-get install indicator-cpufreq

இந்த நிரலை டாப் பேனலில் கொண்டு வர டாப் பேனலில் வலது சொடுக்க வரும் விண்டோவில் Add to panel என்பதனை தேர்ந்தெடுத்து அதில் CPU Frequency Monitor என்பதனை தேர்ந்தெடுத்து Add பொத்தானை அழுத்தினால் வந்துவிடும்.


இந்த ஐகானில் இடது சொடுக்க வரும் விண்டோவில் நாம் frequencyஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.



வலது சொடுக்க வரும் விண்டோவில் preference தேர்ந்தெடுத்தால் எந்த CPU என்று தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.


CPU0 அல்லது CPU1 என்று தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

4 comments:

பனித்துளி சங்கர் said...

தெளிவான விளக்கத்துடன் பயனுள்ளப் பதிவு . பகிர்வுக்கு நன்றி

டானியல் செல்லையா said...

அன்புடைய பதிவருக்கு வணக்கம்,

தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...

அன்புடன்,

வலைச்சரம் நிர்வாகம்.
www.valaicharam.com

dsfs said...

nice articles. keep it up

arulmozhi r said...

நன்றி பனித்துளி சங்கர்
நன்றி வலைச்சரம்
நன்ரி பொன்மலர்