

முதலில் இதற்கான கோப்புகள் எங்கே இருக்கிறது என்று பார்ப்போம்.
/usr/share/indicators/messages/applications என்ற அடைவினுள் இருக்கிறது.

இதில் gwibber என்ற நிரலை நீக்க விரும்பினால் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.
sudo rm /usr/share/indicators/messages/applications/gwibber இந்த கட்டளையினால் gwibber என்ற கோப்பு அழிக்கப்பட்டுவிடும்.
பின்னர் கணினியை மீள துவங்கினால் broadcast என்ற நிரல் messaging menuவில் இருக்காது.

மீண்டும் வரவழைக்க விரும்பினால் டெர்மினலில்
sudo gedit /usr/share/indicators/messages/applications/gwibber என்று தட்டச்சு செய்து gwibber என்ற காலி டெக்ஸ்ட் கோப்பினை திறந்து கொள்ள வேண்டும். அதில் கீழ்கண்ட வரியை சேர்த்து செமித்து வெளியேறிவிடவேண்டும்.
/usr/share/applications/gwibber.desktop
பின்னர் கணினியை மீளதுவங்க இப்போது messaging menuவில் gwibber வந்துவிட்டிருக்கும்.
No comments:
Post a Comment