Pages

Friday, December 24, 2010

உபுண்டுவில் boot splash imageல் காலை/மாலை வணக்கங்களுடன் ஆரம்பிக்க

உபுண்டுவில் பூட் ஆக ஆரம்பிக்கும்போது வரும் splash image ன் அடிப்பாகத்தில் தமிழிலேயே காலை/மாலை வணக்கங்கள் வரவழைக்க இந்த plymouth-greeter என்னும் நிரல் உதவுகிறது.

இந்த நிரலை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ள வேண்டும். இந்த நிரல் /bin/ என்னும் அடைவினுள் இருக்கும். இந்த ஸ்க்ரிப்டில் அனைத்து வாழ்த்துக்கள் ஆங்கிலத்தில் இருக்கும். இதை தமிழில் மாற்ற டெர்மினலில் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்து கோப்பினை திறந்துகொள்ள வேண்டும்.

sudo gedit /bin/plymouth-greeter

பின்னர் அதில் கீழ்கண்ட மாற்றங்களை செய்தால் போதும்.

முதலில் கீழ்கண்ட வரிகளை கண்டுபிடித்து அதை மாற்ற வேண்டும்.

# defining time of day
case "$hour" in
0 | 1 | 2 | 3 | 4 | 5 ) timeofday='night';;
6 | 7 | 8 | 9 | 10 | 11 ) timeofday='morning';;
12 | 13 | 14 | 15 | 16 | 17 ) timeofday='afternoon';;
18 | 19 | 20 | 21 | 22 | 23 ) timeofday='evening';;
# if we are here, something went wrong, exiting
*) exit 0;;
esac

என்பதாக இருக்கும் வரிகளை கீழ்கண்டவாறு மாற்ற வேண்டும்.

# defining time of day
case "$hour" in
0 | 1 | 2 | 3 | 4 | 5 ) timeofday='இரவு வணக்கம்';;
6 | 7 | 8 | 9 | 10 | 11 ) timeofday='காலை வணக்கம்';;
12 | 13 | 14 | 15 | 16 | 17 ) timeofday='மதிய வணக்கம்';;
18 | 19 | 20 | 21 | 22 | 23 ) timeofday='மாலை வணக்கம்';;
# if we are here, something went wrong, exiting
*) exit 0;;
esac

பின்னர்

# show the message and exit on success
/bin/plymouth message --text "Goodbye" && exit 0 || sleep 0.5
done

என்ற வரிகளை கண்டுபிடித்து அதில் கீழ்கண்டவாறு மாற்றம் செய்ய வேண்டும்.

# show the message and exit on success
/bin/plymouth message --text "நன்றி மீண்டும் சந்திப்போம்" && exit 0 || sleep 0.5
done

மூன்றாவதாக

# show the message and exit on success
/bin/plymouth message --text "Good $timeofday" && exit 0 || sleep 0.5
done

மேலே உள்ள வரியில் Good என்னும் வார்த்தையை நீக்கிவிடவேண்டும்.

பின்னர் சேமித்து கொள்ள வேண்டும். இப்போது மீண்டும் கணினியை லாக் அவுட் செய்யும் போது அதில் தமிழில் வார்த்தைகள் வருவதை காணலாம்.

கணினி ஆரம்பிக்கும் போது



கணினியை அணைக்கும் போது



படங்களை கைப்பேசியில் எடுக்கப்பட்டதால் தெளிவில்லாமல் இருக்கும். இந்த நிரலை நிறுவிக்கொண்டால் தமிழிலேயே காலை/மாலை/மதியம்/இரவு நேர வணக்கங்கள் வருகிறது.

இந்த ஸ்கிரிப்டை எடிட் செய்யும் முன் backup எடுத்துகொள்வது நல்லது.

sudo cp /bin/plymouth-greeter /bin/plymouth-greeter.backup என்று டெர்மினலில் தட்டச்சு செய்தால் backup எடுக்கப்பட்டுவிடும்.

4 comments:

சரவணன்.D said...

அருமையான பதிவு சார்!!!
மிக்க நன்றி சார்!!!

Ramu Sethu said...

நல்ல பதிவு.உஙகள் பணி தொடரவும். :-)

T.Duraivel said...

வணக்கம். ஆனால் bin கோப்பில் plymouth-greeter என்ற கோப்பு இல்லை. அதை எப்படி பெறுவது? (நானே உருவாக்கினாலும் வேலை செய்யவில்லை. உங்கள் உதவிற்குக்காத்திருக்கிறேன்.

arulmozhi r said...

நன்றி சரவணன்
நன்றி Pakka Techie
நன்றி துரைவேல்

என்னுடைய பதிவில் அதெற்கேன்று ஒரு லிங்க் உள்ளது.கீழே அந்த லிங்க் கொடுத்துள்ளேன்.

https://launchpad.net/%7Eshnatsel/+archive/plymouth