Pages

Saturday, January 15, 2011

உபுண்டுவில் பல்வேறு வீடியோ கோப்புகள் default ஆக vlcயில் திறக்க

உபுண்டுவில் வீடியோ கோப்புகளை திறக்க கோப்பின் மீது கர்சரை வைத்து இரட்டை கிளிக் செய்தால் totem movie player ல் தான் இயங்கும். இதை மாற்றி vlcயில் திறக்க வைக்க முடியும்.

இதற்கு கீழ்கண்ட இரண்டு கோப்புகள் உதவுகிறது.

1. /.local/share/applications/mimeapps.list இந்த கோப்பு home அடைவினுல் மறைக்கப்பட்ட கோப்பாகும். home அடைவிற்கு சென்று control+H பொத்தான்களை ஒருசேர அழுத்தினால் மறைக்கப்பட்ட கோப்புகள் மற்றும் அடைவுகள் தெரியும்.

2./usr/share/applications/defaults.list இந்த கோப்பில் தான் எந்த கோப்புகள் எந்த நிரல் மூலம் திறக்கும் என்ற செய்தி இருக்கும்.

இப்போது டெர்மினலில் கீழ்கண்ட வரியை தட்டச்சு செய்து வீடியோ கோப்புகள் திறக்கும் நிரல்களை பார்க்கலாம்.

cat /usr/share/applications/defaults.list | grep video




மேலே உள்ள படத்தில் காணப்படும் வரிகளை mimeapps.list கோப்பினுள் சேர்த்துவிட்டு totem என்பதனை vlc என்று மாற்றி விட்டால் போதும்.

இதற்கு முன் mimeapps.list என்னும் கோப்பினை ஒரு backup எடுத்து கொள்வது நல்லது.

cp ~/.local/share/applications/mimeapps.list ~/.local/share/applications/mimeapps.list.back

என்று டெர்மினலில் தட்டச்சு செய்தால் backup உருவாகிவிடும்.

பின்னர் டெர்மினலில்

cat /usr/share/applications/defaults.list | grep video >> /.local/share/applications/mimeapps.list

என்று தட்டச்சு செய்தால் mimeapps.list னுள் வீடியோ சம்பந்தப்பட்ட வரிகள் சேர்ந்துவிடும். இந்த கோப்பின் மீது கர்சரை வைத்து இரட்டை கிளிக் செய்து திறந்து அதில் search->replace சென்று

search for ->totem
replace with -> vlc என்று தட்டச்சு செய்து replace பொத்தானை அழுத்தினால் totem என்பதற்கு பதில் vlc என்று மாறிவிடும்.


பின்னர் சேமித்து வெளியேற வேண்டும்.

இப்போது வீடியோ கோப்பின் மீது கர்சரை வைத்து இரட்டை கிளிக் செய்தால் totemக்கும் பதில் vlc யில் கோப்புகள் ஒடதுவங்கும்.

இதே போல் ஆடியோ கோப்புகளையு செயல்படுத்த முடியும்.

2 comments:

வடுவூர் குமார் said...

வாவ்! அருமை.

arulmozhi r said...

நன்றி வடுவூர் குமார்