உபுண்டு லினக்ஸ் என்று இல்லாமல் இன்று floppy disk மறைந்தே போய்விட்டது. ஆனாலும் இன்னமும் பலர் உபயோக்கிறார்கள். இந்த floppy disk உபுண்டுவில் சில சமயம் mount ஆகமால் இருக்கும்.
floppy disk ன் முக்கிய கோப்புகள் /media/ மற்றும் /etc/ என்னும் இந்த இரு அடைவுகள் தான் முக்கியமானது.
/media/ என்ற அடைவினுள் /floppy0/ என்ற அடைவு இல்லையேன்றால் நாம் உருவாக்கிகொள்ள முடியும்.
டெர்மினலில் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்ய வேண்டும்.
sudo mkdir /media/floppy0 என்று தட்டச்சு செய்தால் உருவாகிவிடும்.
பின்னர் /etc/ என்ற அடைவினுள் இருக்கும் fstab என்ற கோப்பினை திறந்து கொள்ள வேண்டும்.
டெர்மினலில்
sudo gedit /etc/fstab என்று தட்டச்சு செய்தால் கோப்பு திறந்து கொள்ளும். அதில் கீழ்கண்ட வரியை சேர்த்து செமித்து வெளியேற வேண்டும்.
/dev/fd0 /media/floppy0 auto rw,user,noauto,exec,utf8 0 0
கணினிய மீளதுவங்கினால் floppy drive mount ஆவதை பார்க்கலாம்.
1 comment:
என்னிடம் சரவணன் என்பவர் இந்த சிக்கல் பற்றி கேட்டு இருந்தார் நான் பிலாப்பி பயன் படுத்தியது இல்லை என்றும்,இது பற்றி கூகுலில் தேடி ஒரு லிங்க் ஒன்றையும் கொடுத்தேன்.
உடனே இதனை அவருக்கு தெரியபடுத்துகிறேன்.
நன்றி சார்...
Post a Comment