Pages

Sunday, February 6, 2011

உபுண்டுவில் அதிக எம்பி உள்ள கோப்புகளை பிரித்து சேர்த்தல்

உபுண்டுவில் iso கோப்புகள் அல்லது மிக அதிக அளவு எம்பி உள்ள கோப்புகளை பிரித்து பின்னர் சேர்த்துக்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக உபுண்டுவின் ஒரு iso கோப்பினை எடுத்துக்கொள்வேம். இதன் அளவு 693 எம்பி ஆகும். இதனை 100எம்பி அளவுள்ள கோப்புகளாக பிரித்து பின்னர் ஒன்றாக சேர்த்துக்கொள்ளலாம்.

இதற்கு முதலில் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை கொடுக்க வேண்டும்.

split -b 100m u1010.iso

மேற்கண்டவாறு கட்டளை கொடுத்தால் iso கோப்பானது 100 எம்பி அளவுள்ள கோப்புகளாக பிரித்துக்கொள்ளலாம். கோப்புகள் xaa, xab என்ற பெயரில் பிரிக்கப்பட்டுவிடும்.


பின்னர் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை கொடுக்க மீண்டும் பிரிக்கப்பட்ட கோப்புகள் ஒன்றாக சேர்ந்துவிடும்.

cat xa* > u10.iso


பெரிய கோப்புகளாக இருந்தால் இந்த கட்டளையை பயன்படுத்தி பயன்பெறலாம்.

No comments: