உபுண்டுவில் நமக்கு தேவையான கடவுச்சொல்லை மிக எளிதில் உருவாக்கிக்கொள்ளலாம். நமக்கு தேவையான நீளத்திற்கு உருவாக்கலாம்.
முதலில் டெர்மினலில் கீழ்கண்ட வரியை தட்டச்சு செய்ய வேண்டும்.
gedit ~/.bashrc
ஹோம் அடைவினுள் இருக்கும் .bashrc என்ற கோப்பு திறக்கும் அதில் கீழ்கண்ட வரிகளை சேர்த்து சேமித்து மூடிவிடவேண்டும்.
genpasswd() {
local l=$1
[ "$l" == "" ] && l=16
tr -dc A-Za-z0-9_ < /dev/urandom | head -c ${l} | xargs }
பின்னர் டெர்மினலில்
genpasswd என்று தட்டச்சு செய்தால் random password உருவாகிவிடும்.
இந்த கட்டளையை கீழ்கண்ட முறையிலும் கொடுக்கலாம்.
genpasswd 8 என்று கொடுத்தால் கடவுச்சொல் 8 எழுத்துக்கள் கொண்டதாக இருக்கும். இந்த எண்னிக்கையை நமக்கு தேவையான அளவு மாற்றிக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment