உபுண்டுவில் எந்த ஒரு இணையதளத்தையும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு திறக்காமல் இருக்க வைக்க முடியும். உதாரணமாக google.com ஐ ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு திறக்காமல் இருக்க வைக்க முடியும். இதற்கு உதவும் நிரல் self control.
இந்த நிரலை நிறுவ இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கி கொள்ள வேண்டும். பின்னர் இதனை இயக்க
Applications->Internet->Self Control செல்ல வேண்டும்.
Applications->Internet->Self Control செல்ல வேண்டும்.
இதில் Add பொத்தானுக்கும் முன்னால் இருக்கும் இடத்தில் தடை செய்ய வேண்டிய இனைய தள முகவரியை தட்டச்சு செய்து add பொத்தானை அழுத்த வேண்டும். பின்னர் Block Timeல் எத்தனை நிமிடங்கள் தடை செய்ய வேண்டுமோ அதனை செய்ய வேண்டும். பின்னர் start பொத்தானை அழுத்தினால் இணைய தள முகவரி திறக்காது.
மீண்டும் நம்மால் தடை செய்யப்பட்ட இணைய தள முகவரி திறக்க மீண்டும் self control சென்று குறிப்பிட்ட இணைய தல முகவரியை தேர்ந்தெடுத்து Delete பொத்தானை அழுத்தினால் block listல் இருந்து நீக்கப்பட்டுவிடும்.
No comments:
Post a Comment