Pages

Friday, February 18, 2011

உபுண்டுவில் open shot video editor 1.3.0

உபுண்டுவில் நம்முடைய வீடியோக்களை எடிட் செய்வதற்கான மென்பொருள் openshotvideo editor இப்போது 1.3.0 புதிய பதிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த மென்பொருளை பயன்படுத்தி வீடியோக்களை நம்முடைய விருப்பம் போல் எடிட் செய்து கொள்ளலாம்.

முதலில் இதனை நிறுவுவதற்கு டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo add-apt-repository ppa:jonoomph/openshot-edge
sudo apt-get update
sudo apt-get install openshot openshot-doc

இந்த நிரலை செயல்படுத்துவதற்கு Applications->Sound & video->Open shot video editor செல்ல வேண்டும்.


இதில் பல வீடியோ மற்றும் ஆடியோக்களை சேர்த்து எடிட் செய்து கொள்ளலாம். இந்த நிரலில் 3டி அனிமே ஷன் டெக்ஸ்ட் title செயல்படுத்துவதற்கு blender என்ற நிரலை நிறுவிக்கொள்ள வேண்டும்.

Blender நிறுவுவதற்கு கீழ்கண்ட கட்டளைகளை டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo add-apt-repository ppa:cheleb/blender-svn
sudo apt-get update
sudo apt-get install blender

நிறுவியப்பிறகு openshot video editor திறந்து Edit->Preferences சென்றால் அதில் Blender Executable பகுதியில் /usr/bin/blender என்று தட்டச்சு செய்து close பொத்தானை அழுத்தி வெளியேறிவிடவேண்டும்.


பின்னர் அனிமே ஷன் இல்லாத டெக்ஸ்டை எடிட் செய்வதற்கு inskape என்ற மென்பொருளை இதில் நிறுவிக்கொள்ள வேண்டும். இந்த நிரல் ubuntu software centerல் இருக்கிறது. இந்த நிரலை நிறுவாவிட்டாலும் பரவாயில்லை.

இப்போது முழுமையான வீடியோ எடிட்டர் நிறுவப்பட்டுவிட்டது. சென்ற பதிவில் இந்த நிரலை பற்றி எழுதியிருந்தேன். இந்த நிரலை பயன்படுத்தி எடிட் செய்யப்பட்ட ஒரு வீடியோ.




No comments: