உபுண்டுவில் இன்னொரு வெப் கேம் ரிகார்டர் GUVCviewer நிரல். இதனை ubuntu software centerலிருந்து நிறுவிக்கொள்ளலாம்.

நிரலை ஆரம்பிக்க Applications->Sound & Video->guvcview செல்ல வேண்டும்.

முதலில் image control என்ற பகுதி வரும் அதில் படங்களின் அமைப்புகளை brightness போன்றவற்றை அமைக்கலாம்.
அடுத்து வருவது video control அதில் வீடியோ கோடக்குகளை மாற்றி அமைக்கலாம்.

இதன் பின் audio பகுதி இதில் ஒலியின் அமைப்பினை சரிசெய்யலாம்.

வீடியோ/ஆடியோ பதிவு செய்வதற்கு cap.video என்ற பொத்தானை அழுத்த வேண்டும். இதன் கோப்பு ஹோம் அடைவினுள் சேமிக்கப்பட்டுவிடும்.
ஆடியோ பதிவாகவில்லையேன்றால் sound preferences சென்று சரிசெய்ய வேண்டும். sound preferences->input-> சென்று ஆடியோ டிவைஸ் தேர்ந்தெடுக்க வேண்டும். என்னுடையது usb என்பதால் நான் USB2.0_Camera Analag Mono தேர்வு செய்துள்ளேன்.

இது பற்றிய ஒரு வீடியோ
No comments:
Post a Comment