Pages

Monday, February 7, 2011

உபுண்டுவில் iso image கோப்பினை hard disk லிருந்து பூட் செய்தல்

உபுண்டு 11.04 alpha 2 வெர்ஷன் வெளிவந்துள்ளது. இதனை iso கோப்பாக தரவிறக்க முடியும். மேலும் ஒரு டிஸ்கில் எரித்துதான் live cd ஆக பயன்படுத்தமுடியும். அப்படியில்லாமல் கணினியிலிருந்தே iso கோப்பினை பயன்படுத்தி பூட் செய்ய முடியும். இதனை grub2 மெனுவிலிருந்தே செயல்படுத்த முடியும்.

 

இதனை செயல்படுத்த unetbootin என்ற நிரலை பயன்டுத்தி சிடி இல்லாமல் பயன்படுத்த முடியும்.

இந்த நிரலை நிறுவ கீழ்கண்ட வரியை டெர்மினலில் தட்டச்சு செய்து நிறுவிக்கொள்ள வேண்டும்.

sudo apt-get install unetbootin

இந்த நிரல் repositoryயில் இல்லையேன்றால் இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கிக்கொள்ள வேண்டும்.

இந்த நிரலை செயல்படுத்த Applications->system tools->unetbootin செல்ல வேண்டும்.


1->நிரல் செயல்படுத்த ஆரம்பித்தவுடன் disk image தேர்ந்தெடுக்க வேண்டும்.
2->ISO என்பதன் தேர்ந்தெடுக்க வேண்டும்.
3-> ISO கோப்பினை தேர்ந்தெடுக்க வேண்டும்.
4->Type என்பதில் Hard disk தேர்ந்தெடுக்க வேண்டும்.
5->Drive ல் '/' என்று தேர்ந்தெடுக்க வேண்டும்.

பின்னர் ok பொத்தானை அழுத்தினால் grub2 மெனுவில் unetbootin சேர்ந்துவிடும்.கணினியை மீளதுவங்கினால் unetbootin ஆப்ஷன் இருப்பதை பார்க்கலாம். இதனை தேர்ந்தெடுத்தால் உபுண்டு 11.04 ஆல்ப 2 செயல்பட ஆரம்பிக்கும்.

இந்த unetbootin ஆப்ஷன் தேவையில்லையேன்றால் மீண்டும் உபுண்டு பழைய வெர்ஷனுக்கு சென்று unetbootin ஆரம்பித்தால் கீழ்கண்ட விண்டோ தோன்றும்.


இதில் ok பொத்தானை அழுத்தினால் grub2 மெனுவில் unetbootin நீக்கப்பட்டுவிடும்.

1 comment:

Kumaresan Rajendran said...

நல்ல தகவல் நண்பரே,